உங்கள் உதடுகளை அழகுபடுத்தும் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் களையாமல் அப்படியே இருக்க வேண்டுமா? இதை செய்யுங்க!

ஒரு நிகழ்ச்சிக்கு போகிறோம் என்றால் நம்மளை அழகுபடுத்திக் கொள்வது தான் நமது முதல் வேலையாகவே இருக்கும் அல்லவா. ஆனால் அவ்வளவு அழகுபடுத்தியும் நாம் போட்ட மேக்கப் என்னவோ நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை.

அதிலும் உதடுகளை அழகுபடுத்தும் லிப்ஸ்டிக் சீக்கிரமாக களைந்து போய்விடும். மறுபடியும் மறுபடியும் லிப்ஸ்டிக்கை எடுத்து அப்ளே செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது அல்லவா. பின்னர் நாம் ஏதாவது சாப்பிட்டாலோ அல்லது பருகினாலோ அதுவும் அழிந்து விடும்.

How to Make Your Lipstick Last Long in Tamil

இந்த பிரச்சினைக்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்க. நாங்கள் கூறும் சில மேக்கப் ட்ரிக்ஸ்கள் உங்களுக்கு நீண்ட நேரம் களையாத நிலைத்திருக்கும் லிப்ஸ்டிக்கை தரப் போகிறது. உங்களது உதடுகள் எப்பொழுதுமே மிருதுவாகவும் அழகிய நிறத்துடன் புன்னகைக்க போகிறது. சரி வாங்க அந்த பியூட்டி ட்ரிக்ஸ்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

இதழ்களுக்கு புத்துணர்வு மற்றும் போதிய ஈரப்பதம் கொடுங்கள்
உங்கள் உதடுகளை அழகுபடுத்த விரும்பினால் முதலில் உங்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி இதழ்களுக்கு புத்துணர்வு அளியுங்கள். பிறகு மாய்ஸ்சரைசர் லிப் பாம் தடவுங்கள். இது உங்கள் இதழ்களுக்கு போதுமான ஈரப்பதத்தையும் பட்டு போன்ற மென்மையான தன்மையையும் கொடுக்கும். இந்த முறையை பின்பற்றினால் உங்கள் லிப்ஸ்டிக் மேக்கப் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப் லைனர்
லிப் லைனர் ஒரு வேக்ஸ் தன்மையில் இருப்பதால் லிப்ஸ்டிக்கை நீண்ட நேரம் உதடுகளில் நிலைத்திருக்க வைக்க உதவுகிறது. எனவே லிப் லைனர் போடுங்கள். மேலும் லிப்லைனர் லிப்ஸ்டிக் உதடுகளில் ஒட்டுவதற்கும் அழியாமல் இருக்கவும் உதவுகிறது. லிப்ஸ்டிக் நிறத்திற்கு பொருத்தமான லிப் லைனரை தேர்ந்தெடுங்கள். மேலும் லிப் லைனர் நல்ல ஆழமான நிறத்தையும் மற்றும் உங்கள் இதழ்களுக்கு அழகான வடிவத்தையும் கொடுக்கும்.

லிப் ப்ரைமர் பயற்படுத்துங்கள்
லிப் ப்ரைமர் உங்கள் லிப் மேக்கப்பிற்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் லிப்ஸ்டிக்கின் நிறம் நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவுகிறது. நல்ல அழகான உதட்டையும் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்கவும் உதவுகிறது. லிப் ப்ரைமர் லிப்ஸ்டிக்கின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்கிறது.

ப்ளாட் செய்யுங்கள்
ப்ளாட்டிங் என்பது ஒரு சிறந்த முறையாகும். இது உங்கள் உதட்டில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. முதலில் லேசாக உதட்டில் லிப்ஸ்டிக்கை அப்ளே செய்யுங்கள். பிறகு ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரை எடுத்து ஒத்தி எடுத்து சில விநாடிகள் வைத்து இருங்கள். பிறகு அதே நிற லிப்ஸ்டிக்கை நன்றாக அப்ளே செய்து கொள்ளுங்கள்.

பவுடரை பயன்படுத்துங்கள்
உங்கள் உதட்டிற்கு லிப்ஸ்டிக்கை அப்ளே செய்வதற்கு முன்னாடி ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்து உதட்டில் ஒட்டிக் கொள்ளுங்கள். அதன் மேல் பவுடரை ஒரு ப்ரஷ் கொண்டு பரப்புங்கள். பிறகு டிஸ்யூ பேப்பரை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த நிற லிப்ஸ்டிக்கை இதழ்களில் அப்ளே செய்யுங்கள்.

பவுண்டேஷன் போடுங்கள்
பவுண்டேஷனும் உங்களுக்கு லிப் ப்ரைமர் மாதிரி செயல்படுகிறது. இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் களையாமல் இருக்க உதவுகிறது. உங்கள் விரல்களை பயன்படுத்தியோ அல்லது ப்ரஷ்யை பயன்படுத்தியோ பவுண்டேஷனை பரப்பி விடுங்கள்.நீங்கள் பவுடர் பவுண்டேஷனை பயன்படுத்தினால் ப்ரஷ்யை பயன்படுத்துவது நல்லது.

நீண்ட நேரம் நிலைத்திருக்கும் லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுங்கள்
சரியான லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பதும் முக்கியமான ஒன்று. நீண்ட நேரம் நிலைத்திருக்கும் லிப்ஸ்டிக்கை எடுத்து கொண்டால் அதில் அதிக நிறமூட்டுகளும் குறைந்த மாய்ஸ்சரைசரும் இருக்கும். எனவே இந்த மாதிரியான லிப்ஸ்டிக் உங்களுக்கு நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் செய்யும். கிளாஸி மற்றும் அதிக மாய்ஸ்சரைசர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இவைகள் சீக்கிரம் அழிந்து விடும்.

சரியாக பயன்படுத்துதல்
உங்கள் இதழ்களுக்கு அழகான வடிவத்தை கொடுக்க விரும்பினால் லிப்ஸ்டிக்கை லிப் ப்ரஷ்யை கொண்டு அப்ளே செய்யுங்கள். இதழ்களின் ஓரத்தில் ஆரம்பித்து அப்படியே நடுப்பகுதி வரை கவனமாக சமமாக நிறம் தீட்டுங்கள். அப்பொழுது தான் நீண்ட நேரம் களையாத ஒரு லுக் கிடைக்கும்.

உதட்டிற்கு வெளியே தீட்டுவதை தவிருங்கள்
லிப்ஸ்டிக்கை அப்ளே செய்யும் போது உதடுகளுக்கு வெளியே தீட்டுவதை தவிர்க்க இந்த முறையை பின்பற்றுங்கள். ப்ரோ ஜெல் அல்லது கண்சீலர் பென் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் உதட்டினை வரைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் லிப்ஸ்டிக்கை அப்ளே செய்தால் அழகான வடிவம் கிடைப்பதோடு நீண்ட நேரம் நிலைத்திருக்கும் லிப்ஸ்டிக்கையும் பெறலாம்.

Story first published: Sunday, June 4, 2023, 20:30 [IST]
Desktop Bottom Promotion