Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
உங்க கழுத்துல கோடுகோடா சுருக்கமா இருக்கா? அப்ப வீட்டுல இந்த இயற்கை வழிகள ட்ரை பண்ணுங்க...!
Neck Wrinkles In Tamil: வயதாகும் போது நம் சருமம் சுருங்குவது இயல்பானது தான் இருப்பினும் சிலருக்கு கழுத்துப் பகுதி சீக்கிரம் சுருங்க ஆரம்பித்து விடும். கழுத்துச் சுருக்கம் உங்களுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியது. கழுத்துச் சுருக்கம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு.
பக்கவாட்டில் படுத்து தூங்குவது, வயதான அல்லது மரபணு பிரச்சினைகள் போன்ற காரணங்களால் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் சருமம் சுருங்கி காணப்படுவது உங்கள் அழகை கெடுக்கும் விஷயமாக இருக்கலாம்.

எனவே கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தை போக்க கீழ்க்கண்ட இயற்கை வழிகள் உங்களுக்கு உதவுகின்றன. இந்த இயற்கை வழிகள் மூலம் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தை போக்க முடியும். உங்கள் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தை போக்க உதவும் இயற்கை வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வாசலினை பயன்படுத்துங்கள்
வாசலின் என்பது மெழுகுகள், பாராஃபின் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்ட பெட்ரோலியம் ஜெல்லி கலவையாகும். இந்த பெட்ரோலியம் ஜெல்லி சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. வாசலின் சுருக்கத்தை போக்க உதவுகிறது. சருமம் என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
எனவே முதலில் முகத்தை தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். நன்றாக உலர்த்திய பிறகு விரல் நுனிகளில் சிறுதளவு வாசலினை எடுத்து சுருக்கம் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும். இது உங்கள் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்க உதவுகிறது.
வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்கள், பொட்டாசியம் மற்றும் பல்வேறு பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது. இது சரும சுருக்கத்தை போக்கவும், சருமத்தை என்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. வாழைப்பழ மாஸ்க் முகப்பருக்கள் மற்றும் சுருக்கம், வயதான சருமத்தை போக்க உதவுகிறது. சருமத்தில் இருக்கும் செதில்களை அகற்ற உதவுகிறது.
பழுத்த வாழைப்பழத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் கழுவிய பிறகு உலர வைக்க வேண்டும். பிறகு வாழைப்பழ மாஸ்க்கை கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்யுங்கள். 10-20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இப்பொழுது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். இதை 2-3 முறை செய்து வாருங்கள்.
கழுத்துச் சுருக்கத்தை போக்கும் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் கழுத்துச் சுருக்கத்தை போக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த எண்ணெயில் செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் நிறைய உள்ளன. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
கழுத்தையும் முகத்தையும் முதலில் தண்ணீரில் கழுவுங்கள். பிறகு உலர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் 2-3 துளிகள் எண்ணெயை எடுத்து கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.
கழுத்து சுருக்கத்தை போக்கும் ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் இயற்கையான பொருளாகும். இந்த எண்ணெயில் நிறைய இயற்கையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன.
இவை ஆன்டி ஆக்ஸிடன்களாக செயல்படுகிறது. இது ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது. இது சருமத்தின் இளமையை பராமரிக்க உதவுகிறது. முதலில் உங்கள் முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் கழுவ வேண்டும். உங்கள் கையில் சிறுதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து கழுத்து மற்றும் சருமத்தில் தடவிகு கொள்ளுங்கள். 5-8 நிமிடங்கள் வரை ஆலிவ் ஆயிலை மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கழுத்துச் சுருக்கத்தை போக்கும் ஆர்கான் ஆயில்
ஆர்கான் எண்ணெயில் ட்ரைடர்பெனாய்டுகள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. ஆர்கான் ஆயில் சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. இது சுருக்கங்களை நீக்குகிறது. இதில நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
இராசயனங்கள் இல்லாமல் சரும ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆர்கான் ஆயில் உதவுகிறது. நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு முகத்தை மற்றும் கழுத்தை நன்றாக கழுவி உலர வைக்க வேண்டும். பிறகு சிறிது ஆர்கான் எண்ணெயை அப்ளை செய்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு பிறகு காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கழுத்துச் சுருக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்
உங்கள் சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைக்க உடற்பயிற்சிகள் உதவுகிறது. இந்த உடற்பயிற்சிகளை படுக்கைக்கு முன்பும் மற்றும் காலை வேளையில் செய்து வந்தால் ஒரு மாதத்தில் சுருக்கங்கள் போய்விடும்.
இந்த உடற்பயிற்சிகள் கழுத்து மற்றும் முகத் தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தினசரி உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சிகள் தோல் சுருக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது.



Click it and Unblock the Notifications













