Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க கூந்தலை கலர் பண்ண போறீங்களா? அப்போ எந்த மாதிரியான கலரிங் சூப்பராக இருக்கும் தெரியுமா?
தற்போதைய ட்ரெண்ட்டிங்கில் கூந்தலுக்கு வித விதமாக கலர் செய்வது என்பது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கூந்தலுக்கு மெர்மைடு(கடற்கன்னி) மாதிரி கலரிங் செய்வது, கடல் அலை மாதிரி கலரிங் செய்வது போன்ற பச்சை நிற ஹேர் கலரிங் போன்றவை ட்ரெண்ட்டான ஒன்றாக உள்ளது.
இந்த கடல் நிறத்தை போன்று கலரிங் செய்வது உங்கள் கூந்தலுக்கு ஒரு கூல் லுக்கை கொடுக்கும். நீங்கள் எதாவது இரவு நேர பார்ட்டி அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும் போது இந்த மாதிரியான கலரிங்கை நீங்கள் செய்யலாம். கடலின் நீலம் மற்றும் பச்சை நிற லுக் உங்கள் கூந்தலுக்கு ஒரு வேவ் லுக்கை கொடுக்கும்.

உங்கள் இன்ஸ்ட்டாகிராம் போட்டோக்களை அழகுபடுத்த இந்த கடல் அலை ஹேர் கலரிங் ஸ்டைல் கச்சிதமான ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் கூந்தல் கலை நிபுணர்கள். அந்த வகையில் எந்த மாதிரியான கலரிங் ஹேர் ஸ்டைலை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
வித விதமான கலரிங் ஹேர் ஸ்டைல்
கிரே மெர்மைடு
இந்த கிரே மெர்மைடு கலரிங் உங்கள் கூந்தலுக்கு ஒரு மைல்டு லுக்கை கொடுக்க கூடியது. இது உங்களுக்கு ஒரு கடல் தேவதை சாயலை கொடுக்கும். உங்கள் அழகான கருப்பு அல்லது பழுப்பு நிற கூந்தலில் இந்த கிரே மெர்மைடு கலரிங் செய்வது உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றி விடும். அப்படியே உங்கள் ஹேர் ஸ்டைலை வேவிங் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தல் கடல் அலை போன்று காட்சி அளிக்கும்.
அக்குவா வேவ் கலரிங்
நீங்கள் ஒரு உண்மையான கடற்கன்னி போல் தோற்றமளிக்க நினைத்தால் அதற்கு இந்த அக்குவா வேவ் கலரிங் உதவுகிறது. இது உங்களுக்கு ஒரு அழகான நீளமான கடல் அலையை போன்ற தோற்றத்தை உங்கள் கூந்தலுக்கு கொடுக்கும். எனவே நீங்களும் ஒரு கடற்கன்னியாக மாற இந்த அக்குவா வேவ் கலரிங் செய்யலாம் சரியான தேர்வாக இருக்கும்.
ரூபி லாக்ஸ்
விக்டோரியன் கடல் தேவதையை யார் தான் விரும்ப மாட்டார்கள். அந்த மாதிரியான கடல் தேவதையாக நீங்கள் காட்சி அளிக்க இந்த ரூபி லாக்ஸ் ஹேர் ஸ்டைல் உதவுகிறது. இந்த ரூபி லாக்ஸ் ஹேர் ஸ்டைலில் லாவண்டர், பிங்க் மற்றும் ரூபி நிறங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே உங்கள் கூந்தல் மேல் பகுதியில் இளஞ்சிவப்பு நிறமாகவும், கீழ் பகுதியில் லாவண்டர் நிறத்திலும் அலை அலையாக கூந்தல் இருக்கும். இது கலரிங் ஹேர் ஸ்டைல் உங்களுக்கு ஒரு ஸ்டைலிஷான லுக்கை கொடுக்கும்.
Ocean depths (கடல் நிற கலரிங்)
நீங்கள் கடலின் ஆழத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த வகையில் கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களுடன் இந்த ஹேர் கலரிங் காட்சியளிக்கிறது. ஆழமான நீல நிற கூந்தல் இழைகள், கூந்தலின் இடைப்பகுதியில் பச்சை நிற கலரிங், கூந்தலின் நுனியில் அடர்ந்த பெர்ரி நிறத்தை அளிக்கிறது.
இந்த ஹேர் கலரிங்கை பார்க்கும் போது ஒரு ஆழமான கடலுக்குள் மூழ்கிய உணர்வை தூண்டும். எனவே உங்கள் கூந்தலை ஆழமாக மெருகேற்ற இந்த ஹேர் கலரிங் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
சில்வர் கெல்ப்
உங்களுக்கு பச்சை நிற கூந்தல் பிடிக்கும் என்றால் அதற்கு இந்த சில்வர் கெல்ப் சிறந்த சாய்ஸாக இருக்கும். இந்த ஹேர் கலரிங் மீடியம் நீளமுள்ள கூந்தலைக் கொண்ட பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
கடல் இளவரசி ஹேர் கலரிங்
நீங்கள் ஒரு கடல் இளவரசி போல் ஜொலிக்க விரும்பினால் அதற்கு இந்த கடல் இளவரசி ஹேர் கலரிங் சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த ஹேர் கலரிங்கில் ஜேட், டீல் மற்றும் ராயல் ப்ளூ போன்ற கலர்கள் சேர்க்கப்படுகிறது. அப்படியே உங்கள் கூந்தலை மயிலிறகு கொண்டு அலங்கரிக்கும் போது கூடுதல் அழகு கிடைக்கும்.
Sterling Blue( கடல் புயல் கலரிங்)
கடலில் புயல் ஏற்படும் போது அதன் வண்ணம் சற்றே மாறுபடும். அது போன்ற ஒரு லுக்கை இந்த ஹேர் கலரிங் உங்களுக்கு கொடுக்கிறது. இந்த ஹேர் கலரிங் முறையில் கருமையான கூந்தல் டெனிம் நீல நிறத்திற்கு மங்கி விடும். இது கூந்தல் நுனிகளில் ஒரு சில்வர் டச்சை கொடுக்கும். உங்களுக்கு ஒரு சிறந்த பேஷனான லுக்கை கொடுக்க இந்த ஹேர் கலரிங் சிறந்தது.
மிட்நைட் மூன்லைட் ஹேர் கலரிங்
ஒரு இருண்ட நேரத்தில் நிலா வெளிச்சத்தில் கடல் அலைகளை பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்குமோ அந்த லுக்கை இந்த ஹேர் கலரிங் உங்களுக்கு கொடுக்கும். ஒளிரும் நிலவொளி போன்று உங்கள் கூந்தல் இருக்கும். ஒரு பளிச்சென்ற நீல நிறத்தை இந்த ஹேர் கலரிங்கில் பயன்படுத்துகின்றனர். இந்த ஹேர் கலரிங் அனைத்து வகையான முடி வகைகளுக்கும் ஏற்றது.
ட்ரீம் ப்ளூ ஹேர் கலரிங்
இந்த ட்ரீம் ப்ளூ ஹேர் கலரிங் உங்களுக்கு ஒரு அட்டகாசமான லுக்கை கொடுக்கும். ஆழமான கடல் நீலத்தில் உருகும் ஊதா நிற மயிரிழைகளாக உங்கள் கூந்தல் இருக்கும். இந்த தோற்றம் உங்களுக்கு ஒரு புது வித அனுபவத்தையும் லுக்கையும் கொடுக்க கூடியது.
தி லிட்டில் மெர்மைடு ஹேர் கலரிங்
ஏரியல் இளவரசி போல் தோற்றமளிக்க நினைத்தால் அதற்கு இந்த ஹேர் கலரிங் சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த ஹேர் கலரிங்கில் அழகான சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பீச்சி ஹேர் ஸ்டைல் உங்களை ஒரு கடல் தேவதை போல் காட்டும். இது உங்களுக்கு ஒரு சிறந்த லுக்கை கொடுக்கும்.



Click it and Unblock the Notifications












