Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்கள் சருமத்திற்கு ஏற்ற சீரம் எது? தேர்வு செய்வது எப்படி..?
சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பு. மாய்ஸ்சரைசருக்கு முன் பயன்படுத்தப்படும் சீரம் தோலின் ஆழமான அடுக்குகளை எளிதில் ஊடுருவக்கூடிய பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
இதனால் சருமம் பொலிவடைவதுடன், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், முகப்பரு, தழும்புகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளை குறைக்கிறது. உங்கள் சருமத்திற்கு சரியான சீரம் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவால். எனவே சரியான சீரம் தேர்வு செய்ய பிரபல தோல் மருத்துவர் பன்சாரி தாவ்தா பரிந்துரைத்த சில எளிய குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. உங்கள் சருமத்தின் வகையைக் கண்டறியவும்:
எந்தவொரு தோல் பராமரிப்பு அல்லது அழகு சாதனப் பொருட்களை வாங்கும் போது உங்கள் சருமத்தின் வகையை என்ன என்று அறிந்து கொள்வது அவசியம். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள், முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரம் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். மேலும், ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சீரம் உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு சிறந்தது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வைட்டமின் சி அல்லது ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சீரம் சாதாரண தோல் வகைகளுக்கு சிறந்தது.
2. வயதுக்கு ஏற்ற சீரம் தேர்வு செய்யவும்:
தோல் வகை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரும பராமரிப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் பயனரின் வயதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயதானதை மெதுவாக்க சீரம்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், தோல் பராமரிப்பு என்பது க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதாகும். 20 வயதிற்குட்பட்ட பெண்கள் நியாசினமைடு அல்லது ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சீரம் பயன்படுத்தலாம். 20, 30 அல்லது 40 வயதுடையவர்கள், வயதான தோற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் ரெட்டினோல் கொண்ட சீரம்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3.சரும பிரச்சனையை அடையாளம் காணவும்:
சரும பிரச்சனைக்கு ஏற்ப சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, சீரற்ற தோல், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள், க்ளைகோலிக் அமிலம்/லாக்டிக் அமிலம், அசெலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் போன்ற ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்களைக் கொண்ட சீரம்களைப் பயன்படுத்தலாம். வயதான தோற்றத்தை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் கரும்புள்ளிகள் அல்லது வெண்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு சிறப்பாகச் செயல்படுகிறது.
4. மேலும் மேற்கூறிய அனைத்து தோல் பிரச்சனைகளும் இருந்தால் அனைத்து வகையான சீரம்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக விளைவுகளைப் பெரிதாக்கலாம். எனவே உங்கள் வயது, தோல் வகை மற்றும் சரும பிரச்சனைக்கு ஏற்ப சரியான பொருட்கள் கொண்ட சீரம் தேர்வு செய்யவும். எந்தவொரு தோல் பராமரிப்பு தயாரிப்பு அல்லது தோல் பிரச்சனைகளுக்கான சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
5. கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும். முந்தைய நாட்களில் மாய்ஸ்சரைசர் மற்றும் ஆன்டி ஏஜிங் க்ரீம் போன்றவற்றைதான் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது சீரம் மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. சீரமும் மாய்ஸ்சரைசரையும் சேர்த்து லேயரிங் பண்ணும் போது பொருட்களின் அடர்த்தி மிகவும் முக்கியமானது. முதலில் அடர்த்தி குறைந்த லைட் பொருட்களை லேயரிங் செய்து அப்புறம் அடர்த்தி அதிகமான பொருட்களை லேயரிங் செய்ய வேண்டும். சீரத்தை ஃபௌண்டேஷனில் கலந்தும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications