Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஒரு டம்ளர் நீரை வெச்சே, தலைமுடி ஆரோக்கியமா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம் - எப்படி தெரியுமா?
ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படிப்பட்ட தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால் தான், அது ஒரு நல்ல தோற்றத்தைத் தரும். தலைமுடி ஆரோக்கியமாக உள்ளது என்பதை நாம் தலைமுடி உதிர்வது, தலைமுடியின் அடர்த்தி ஆகியவற்றை வைத்து தான் சொல்வோம்.
ஆனால் தலைமுடி ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மிகவும் துல்லியமாக அறிய வேண்டுமானால், அதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. குறிப்பாக ஒரு டம்ளர் நீரைக் கொண்டே தலைமுடி ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறியலாம். இது தவிர வேறு சில சோதனைகள் மூலம் தலைமுடியின் ஆரோக்கியம், வலிமை ஆகியவற்றை அறியலாம். இப்போது தலைமுடி ஆரோக்கியமாக உள்ளதா என்பதை எப்படி வீட்டிலேயே கண்டறிவது என்பதைக் காணலாம்.

சோதனை #1
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதை, தலைமுடி உதிர்வதைக் கொண்டே அறியலாம். இது தவிர தலைமுடியின் வேரை சோதனை செய்தும் அறியலாம் அதற்கு தலையில் உள்ள ஒரு முடியை பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது, அந்த முடியின் வேர்கால் பல்ப் வடிவத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை மயிர்கால் சிறியதாகவோ அல்லது பல்ப் வடிவமின்றி இருந்தாலோ, தலைமுடி பலவீனமாக, வலுவிழந்து உள்ளது என்று அர்த்தம்.
தலைமுடியின் ஆரோக்கியத்தில் நாம் உண்ணும் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே தலைமுடி வலுவாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், மீன் மற்றும் தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
மேலும் கார்போனேட்டட் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதனால் தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதைத் தவிர, இரத்த சர்க்கரை அளவு சிறப்பாக இருக்கும், மூளையின் செயல்பாடு மேம்படும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால் இறுக்கமாக போனிடைல் போடுவதைத் திவிர்க்க வேண்டும். குறிப்பாக தூங்கும் போது முடியை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
சோதனை #2
இந்த சோதனையில் தலைமுடி எவ்வளவு நுண்துளையானது (porosity) என்பதை அளவிடப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான தலைமுடி மிகவும் திடமாக இருக்கும். சேதமடைந்த முடி விரைவில் திரவத்தை உறிஞ்சும். இந்த சோதனையை செய்வதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் போதுமானது. முக்கியமாக இந்த சோதனையை செய்யும் போது தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டும். எனவே இதை மேற்கொள்ளும் முன், தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
அதன் பின் ஒரு டம்ளர் தண்ணீரில் தலைமுடியைப் பிடுங்கி போட வேண்டும். அப்படி போடும் போது, தலைமுடி மிதந்தால், முடி ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். அதுவே இடைப்பட்ட நிலையில் மிதந்தவாறு இருந்தால், பரவாயில்லை என்று அர்த்தம். முழுவதுமாக மூழ்கினால், தலைமுடி மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
சோதனை #3
இந்த சோதனையில் தலைமுடியின் நெகிழ்வுத்தன்மை சோதிக்கப்படுகிறது. அதற்கு 4-5தலைமுடியை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை இரண்டு முனைகளில் இருந்தும் இழுத்து விட வேண்டும். அப்படி இழுத்து விடும் போது, ரப்பர் போன்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அப்படி திரும்பினால், தலைமுடி ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். அதுவே இழுக்கும் போது தலைமுடி உடைந்தால், முடி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
சோதனை #4
இந்த சோதனையின் மூலம், தலைமுடி சேதமடைந்துள்ளதா இல்லையா என்பதை கண்டறியலாம். அதற்கு சிறிது தலைமுடியை எடுத்து முறுக்கிக் கொள்ளுங்கள். அந்த முடியை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்களுக்கு இடையே வைத்து, மேலிருந்து முடியின் நுனி வரை, அப்படியே மெதுவாக தடவுங்கள். அப்படி செய்யும் போது, தலைமுடி கரடுமுரடாக மற்றும் சீரற்றதாக இருந்தால், முடி சேதமடைந்துள்ளது என்று அர்த்தம். அதுவே மென்மையாக இருந்தால், ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications