Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! வெயிலில் சுற்றி கருப்பாயிட்டீங்களா? இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க போதும்..!
Face Packs For Men In Tamil: தற்போது கத்தரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகம் உள்ளது என்பதற்காக நாம் நமது தினசரி வேலைகளை செய்ய வெளியே செல்லாமல் இருக்க முடியாது அல்லவா?
வெயிலோடு மாசடைந்த சுற்றுச்சூழலாலும், சருமத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கி, முகத்தை கருமையாகவும், பொலிவற்றதாகவும் வெளிக்காட்டும். குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் வெயிலில் அதிகம் சுற்ற வேண்டியிருக்கிறது.

இதனால் பெண்களை விட ஆண்கள் கோடைக்காலத்தில் வேகமாக கருமையாகி விடுகிறார்கள். இப்படி வெயிலில் சுற்றி கருப்பாகிக் கொண்டிருக்கும் ஆண்கள், தங்கள் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுப்பதன் மூலம் கருமையாகாமல் இருக்கலாம்.
அதுவும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை ஆண்கள் போடுவதன் மூலம், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம். கீழே வெயிலில் சுற்றி கருமையான சருமத்தை வெள்ளையாக்க உதவும் ஆண்களுக்கான சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அடிக்கடி போட்டு வந்தால், கோடையிலும் வெள்ளையாக ஜொலிக்கலாம்.
ஆரஞ்சு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது. அதோடு இது சரும நிறத்தை மேம்படுத்த உதவும் அற்புதமான ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
தயிர், கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத் துளைகளில் உள்ள அழுக்கை வெளியேற்றும். இதன் விளைவாக சருமம் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் கரும்புச்சாறு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பிரகாசமாக்கும். அதற்கு ஒரு பௌலில் சிறிது கடலை மாவை எடுத்து, அதில் சிறிது கரும்புச்சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வேப்பிலை ஃபேஸ் பேக்
வெயில் காலத்தில் அதிகப்படியான வெயிலால் முகப்பரு பிரச்சனையை பலர் சந்திப்பதுண்டு. இந்த முகப்பரு பிரச்சனையைத் தடுக்க, ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வேப்பிலை பொடியை எடுத்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மசித்த பப்பாளி மற்றும் 1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications