Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
முகப்பருவை குணப்படுத்த சில வீட்டு வைத்தியம்..!
உடலில் ஏற்படும் தற்காலிக அல்லது நாள்பட்ட மாற்றங்கள் காரணமாக முகப்பரு ஏற்படலாம். தோல் எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்களால் அடைக்கப்படும் போது அவை அடிக்கடி தோன்றும். முகப்பருவை குணப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள்.
முகப்பரு என்பது உலகின் பெரும் மக்களை பாதிக்கும் ஒரு தோல் நிலை. 85% மக்கள் முகப்பருவை எதிர்கொள்கின்றனர். அவை பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எளிய வீட்டு வைத்தியம் மூலம் அவற்றைக் குணப்படுத்துவது எளிது. எனவே, நோயைக் குணப்படுத்தக்கூடிய அத்தகைய வீட்டு எளிய வைத்தியங்கள் என்னென்ன? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
கிரீன் டீ
கிரீன் டீ செய்து, அதனை ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு பொலிவைத் தரவும் உதவும்.
லாவெண்டர்
லாவெண்டர் எண்ணெயை பருக்களின் மீது தடவி வந்தால் பருக்களை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த எண்ணெயை அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம். இது உங்கள் மனதையும் சருமத்தையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை முகத்தை கழுவியவுடன் செய்வது சருமத்தின் அமிலத்தன்மையை சரி செய்யும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்.
ஓட்ஸ்
3 ஸ்பூன் ஓட்ஸ் வேகவைத்த தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் விடவும். இந்த பேஸ்ட்டில் 2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.அதன் பின்னர் உங்கள் முகம் மற்றும் கழுத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை உலர வைக்கவும். முகப்பரு மற்றும் பருக்களை விரைவில் குணப்படுத்தும் பயனுள்ள பேக் இது. வழக்கமான பயன்பாடு உங்கள் சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும்.



Click it and Unblock the Notifications