Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
சாய் பல்லவி போல உங்களுக்கும் ரோஸ் நிற கன்னம் வேணுமா? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
பெரும்பலான பெண்களுக்கு ஜொலிக்கும் ரோஜா கன்னங்களை பெற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். எல்லா பெண்களுக்கும் ரோஜா நிறத்தில் இருக்கும் சிவப்பு கன்னங்கள் இருப்பதில்லை. ஒருசிலர் மட்டுமே இயற்கையான ரோஜா கன்னங்களை பெறுகிறார்கள்.
சில பெண்களுக்கு மட்டும் தான் ரோஜா கன்னங்கள் பிறந்ததிலிருந்தோ அல்லது அவர்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பில் இருந்தோ கிடைக்கும். இது அதிர்ஷ்டம் என்று எப்போதும் ஒரு கருத்து உள்ளது. பெரும்பாலான பெண்கள் அந்த ரோஜா நிற சிகப்பு கன்னங்களைப் பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம் ரோஸி கன்னங்களைப் பெற விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்? அது உங்கள் தோற்றத்தை, அழகை பாதிக்கக்கூடிய கருமையான கறைகள், முகப்பரு மற்றும் கடுமையான வெடிப்புகளை ஏற்படுத்தலாம். இராசயனங்கள் மற்றும் விலையுயர்ந்த தயாரிப்புகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, ரோஜா கன்னங்களைப் பெறுவதற்கு சில இயற்கை வழிகள் உள்ளன.
உங்கள் சருமத்திற்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ரோஜா கன்னங்களைப் பெற உதவும் இயற்கை வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கன்னங்களை சிவப்பு நிற ஆப்பிள்கள் போலவும், மிருதுவாகவும், மென்மையாகவும், அழகாகவும் மாற்ற நீங்கள் விரும்பினால், உங்களுக்காக நாங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் இந்த இயற்கை குறிப்புகளை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
ஃபேஸ் மசாஜ்
ரோஜா இதழ் போன்ற சிவக்கும் கன்னங்களை பெற தினமும் ஃபேஸ் மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் மேஜையில் அமர்ந்திருக்கும் போது, உங்கள் முகத்தை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது, உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உங்கள் கன்னங்களை ரோஜாவாக நிறத்தில் மாற்றவும் பொலிவான சருமத்தை பெறவும் உதவும்.
எக்ஸ்ஃபோலியேட்
உங்கள் கன்னங்களை இயற்கையாகவே ரோஸாக மாற்றுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, எக்ஸ்ஃபோலியேட். மென்மையான ஃபேஸ் ஸ்க்ரப் மூலம் உங்கள் கன்னத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தோலின் நிறத்தை கருமையாக்குகின்றன. எனவே ரோஸி கன்னங்களைப் பெற நீங்கள் எக்ஸ்ஃபோலியேட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முகத்தை கழுவுவது
இயற்கையாகவே ரோஸி கன்னங்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது. வெதுவெதுப்பான நீர் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் கன்னங்கள் விரைவில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும் என்று கூறப்படுகிறது. ரோஜா கன்னங்களைப் பெற இது இரண்டு நிமிட தந்திரமாக உங்களுக்கு நன்றாக செயல்படும்.
உடற்பயிற்சி
தினமும் நீங்கள் ஒரு நல்ல உடற்பயிற்சி நடவடிக்கைகளை பின்பற்றும்போது, உங்கள் உடலும், உங்கள் மனமும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதபோது, அது உங்கள் முகத்தில் தெரியும். எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமும் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கலாம் எனத் தெரிந்துகொள்ள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பொலிவான சிவப்பு கன்னங்களை பெறவும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
நீரேற்றம்
நீரேற்றமாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்லாது, சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் நீரேற்றமாக இருக்கும்போது, உங்கள் முகத்தில் இயற்கையான பளபளப்பைக் காண்பீர்கள் மற்றும் உங்கள் கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாக மின்னும். அழகான தோற்றத்தைப் பெற தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சமச்சீரான உணவு
ரோஜா கன்னங்களைப் பெறுவதற்கான அழகு தந்திரங்களில் ஒன்று சமச்சீரான உணவுமுறை. சில ஆரோக்கிய உணவுகள், உங்களை பளபளப்பாக ஜொலிக்க வைக்க உதவுகிறது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் சமநிலையில் இருக்கும்போது, அது உங்கள் முகத்தில் உள்ள பளபளப்பை அதிகரிக்கிறது. பீச், முலாம்பழம் மற்றும் தக்காளி ஆகியவை உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய சில அத்தியாவசிய பழங்கள்.
ஃபேஸ் பேக்
இயற்கையான பழங்கள் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் கன்னத்தில் இளஞ்சிவப்பு பிரகாசத்தை உங்களுக்கு வழங்க, உங்கள் முகத்தில் பழ ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். உங்கள் முகத்தில் மற்றும் கன்னங்கள் பகுதியில் அதிகமான ஃபேஸ் பேக்குகளை தடவ வேண்டும். சிவப்பு மற்றும் வண்ணமயமான எந்தப் பழத்தையும் ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது, இயற்கையாகவே உங்கள் கன்னம் ரோஸ் கலரில் ஜொலிக்க உதவும்.
வினிகர்
உங்கள் கன்னங்கள் ரோஸியாக இருக்க வேண்டுமெனில், பயன்படுத்த வேண்டிய சிறந்த வீட்டு வைத்தியம் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இது உங்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பருத்தி துண்டை ஆப்பிள் சைடர் வினிகரில் நனைத்து, உங்கள் கன்னங்களில் தடவ வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற ஒரு வாரத்திற்கு இதை மீண்டும் செய்ய வேண்டும்.
பீட்ரூட்
நீங்கள் இயற்கையாகவே ரோஜா கன்னங்களைப் பெற விரும்பினால், உங்கள் கன்னங்களில் பீட்ரூட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உங்கள் சருமத்தை இளஞ்சிவப்பு நிறமாகவும் அழகாகவும் மாற்றும். ரோஸி கன்னங்களைப் பெறுவதற்கான மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த இயற்கை வழிகள் உங்கள் சருமத்திற்குப் பரிபூரணமானது, மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை விரைவில் தரும்.



Click it and Unblock the Notifications













