Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ஒரு நாளைக்கு 80 முடிக்கு மேல கொட்டுதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்னு உங்களுக்கு இருக்கலாமாம்... ஜாக்கிரதை...!
Hair Loss: தலை முடி உதிர்வு என்பது அனைத்து பாலினத்தாரும், அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. அதனை மையமாக வைத்து மாபெரும் சர்வதேச சந்தை வளர்ந்துள்ளது. விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தியும் உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க முடியவில்லையா?
தரையில் மற்றும் உங்கள் ஆடைகள் முழுவதும் சிதறிய முடிகளை பார்த்து சோர்த்து போயிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்கள் தலையில் இருந்து முடி உதிர்வதற்கான சரியான காரணங்களைப் பிடிக்க நீங்கள் தவறி விடுகிறீர்கள். சராசரியாக நாம் ஒரு நாளைக்கு சுமார் 80 முடிகளை இழக்கிறோம், இது சாதாரணமாக கருதப்படுகிறது.

ஆனால் தினமும் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக முடி உதிர்வதை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிற காரணிகளைத் தேட வேண்டிய நேரம் இது. எந்தெந்த காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்
நம் வாழ்நாள் முழுவதும் நமது ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்துடன் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முடி உதிர்தலுக்கு கணிசமாக பங்களிக்கும். தைராய்டு ஏற்றத்தாழ்வுகள், மெனோபாஸ் போன்றவை முடி உதிர்தலுக்கு வேறு சில முக்கிய காரணங்களாகும்.
தூக்கமின்மை
தூக்கமின்மை அல்லது போதுமான மணிநேர தூக்கம் இல்லாதது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது கூந்தல் ஆரோக்கியம் மட்டுமின்றி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது மற்றும் தூக்கமின்மை, மயக்கம் போன்ற சிக்கல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவதை அதிகரிக்கிறது, இது படிப்படியாக வழுக்கையில் முடிவடையும்.
மனஅழுத்தம்
நமது தற்போதைய வாழ்க்கை முறை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மன அழுத்தம் அதிகரிப்பது நம் உடலை சமநிலையிலிருந்து நழுவச் செய்து, இதய நோய்கள், எடை அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான முடி உதிர்வு ஏற்படும். மன அழுத்தம் உங்கள் முடி சுழற்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, மேலும் முடி உதிர்வை அதிகரிக்கிறது.
பாலினம்
ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் ஒரே மாதிரியான வடிவத்தில் முடி உதிர்வை அனுபவிக்கிறார்கள், அதாவது உச்சந்தலையில் முழுவதும் முடி உதிர்வை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஆண்கள் சில தனித்துவமான வடிவத்தில் முடியை இழக்க வாய்ப்புள்ளது. ஆண்களும் நோயெதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், இது முடி உதிர்தலின் பாதிப்பை அதிகரிப்பதற்கும் காரணமாக கருதப்படுகிறது.
அலோபீசியா
அலோபீசியா என்பது முடி உதிர்வை ஏற்படுத்தும் ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். நீங்கள் சிறிய, வட்டமான திட்டுகளில் முடியை இழந்தால், அது அலோபீசியா அரேட்டா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் தலையில் உள்ள அனைத்து முடிகளையும் இழந்தால், அது அலோபீசியா டோட்டலிஸ் என்று அழைக்கப்படுகிறது. அலோபீசியா எதனால் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அலோபீசியா உங்கள் புருவங்கள், கண் இமைகள் அல்லது மற்ற உடலின் மற்ற பாகங்களில் இருந்து முடியை இழக்கச் செய்யலாம்.
அலோபீசியாவுக்குப் பிறகு முடி மீண்டும் வளரும், ஆனால் அது எப்போது என்று நிச்சயம் . ஸ்டீராய்டு ஊசிகள் அல்லது ஆட்டோ இம்யூன் நிலைமைகளுக்கான மருந்துகள் போன்ற சில சிகிச்சைகள் புதிய முடி வளர்ச்சியைத் தூண்டும்.



Click it and Unblock the Notifications
