For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க கிடுகிடுன்னு முடி வளருமாம்!

மாட்டிறைச்சி கல்லீரல், மீன், பீட்ரூட், வேர்க்கடலை, மாட்டிறைச்சி மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் பி3 அல்லது நியாசின் காணப்படுகிறது. முடி உதிர்தலைத் தடுக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

|

இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் பிரச்சனை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, நரை முடி போன்ற ஏராளமான முடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன. நீங்கள் சாப்பிடும் உணவு உங்க உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, முடி ஆரோக்கியத்தையும் பாதுக்காக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சில உணவுகள் உங்க முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அந்த வகையில், முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி இன்றியமையாதது. முடி உதிர்வைத் தடுக்க உங்கள் உணவில் வைட்டமின் பி அனைத்து வடிவங்களிலும் சேர்க்க வேண்டும்.

Vitamin Rich Foods For Hair in tamil

நீங்கள் எப்போதும் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் ஹேர் மாஸ்க்குகள், எண்ணெய்கள் மற்றும் பிற பொருட்களை மேற்பூச்சுப் பயன்படுத்த வேண்டும். இவை நன்மை பயக்கும், ஆனால் போதுமான வைட்டமின் இல்லாமல் அனைத்து முடி சிகிச்சைகளும் பயனற்றவை. வைட்டமின்கள் உங்கள் தலைமுடியை நீளமாகவும், வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. முடி வளர்ச்சிக்கான சிறந்த வைட்டமின்களை பற்றி நீங்கள் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி-2 அல்லது ரிபோப்ஃலோவின் நிறைந்த உணவுகள்

பி-2 அல்லது ரிபோப்ஃலோவின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி2 இன் ஆதாரங்கள் காளான்கள், அஸ்பாரகஸ், முழு தானிய பொருட்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை ஆகும். இந்த உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி வலுவான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

வைட்டமின் பி3 அல்லது நியாசின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி3 அல்லது நியாசின் நிறைந்த உணவுகள்

மாட்டிறைச்சி கல்லீரல், மீன், பீட்ரூட், வேர்க்கடலை, மாட்டிறைச்சி மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் பி3 அல்லது நியாசின் காணப்படுகிறது. முடி உதிர்தலைத் தடுக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

வைட்டமின் பி5 அல்லது பாந்தோத்தேனிக் அமிலம் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி5 அல்லது பாந்தோத்தேனிக் அமிலம் நிறைந்த உணவுகள்

இது முட்டையின் மஞ்சள் கரு, சோளம், காலே, பருப்பு வகைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, கோழி, சால்மன் மீன் மற்றும் தானியங்கள் போன்றவற்றில் காணப்படுகிறது. முடி நரைப்பதையும், முடி உதிர்வதையும் தடுக்க வைட்டமின் பி5 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். முடி வளர்ச்சிக்கு இது சிறந்த வைட்டமின்களில் ஒன்றாகும்.

வைட்டமின் பி6 அல்லது பைரிடாக்சின் நிறைந்த உணவு

வைட்டமின் பி6 அல்லது பைரிடாக்சின் நிறைந்த உணவு

இந்த வைட்டமின் வாழைப்பழங்கள், அஸ்பாரகஸ், பச்சை பட்டாணி, மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் காணப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் பி7 அல்லது பயோட்டின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி7 அல்லது பயோட்டின் நிறைந்த உணவுகள்

வலுவான முடியை நீங்கள் பெற பயோட்டின் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இது வெங்காயம், பாதாம், தானியங்கள், ஈஸ்ட், வாழைப்பழங்கள் மற்றும் சால்மன் ஆகியவற்றில் காணப்படுகிறது. முடி சேதம் மற்றும் பிளவு முனைகளைத் தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள். இவை முடி உதிர்தலைத் தடுப்பதோடு, முடி வளர்ச்சிக்கும் சிறப்பாக உதவுகிறது.

இனோசிட்டால் அல்லது வைட்டமின் பி8 நிறைந்த உணவுகள்

இனோசிட்டால் அல்லது வைட்டமின் பி8 நிறைந்த உணவுகள்

இது ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி மற்றும் தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. முடி உதிர்வை தடுக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். விரைவான முடி வளர்ச்சிக்கு இது சிறந்த வைட்டமின்களில் ஒன்றாகும்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி 12 இன் ஆதாரங்கள் மீன், கோழி, கல்லீரல், முட்டை, பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்றவையாகும். பலவீனமான முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் இந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.

வைட்டமின் பி9 அல்லது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி9 அல்லது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள்

இந்த வைட்டமின் மூலங்கள் அஸ்பாரகஸ், பட்டாணி, பச்சை காய்கறிகள், பீட்ரூட் மற்றும் பருப்பு போன்றவை. முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் இந்த வைட்டமின் பி9 நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். முடி உதிர்தலைத் தடுப்பதற்கான சிறந்த வைட்டமின்களில் இதுவும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin Rich Foods For Hair in tamil

Here we are talking about the Vitamin Rich Foods For Hair in tamil.
Story first published: Thursday, April 21, 2022, 13:05 [IST]
Desktop Bottom Promotion