For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடி கொட்டாம... நீளமா அடர்த்தியா வளர இந்த 6 விஷயங்கள ஃபாலோ பண்ணா போதுமாம் தெரியுமா?

உங்கள் தலைமுடி முதன்மையாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இது உங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். முட்டை மாஸ்க்கில் உள்ள ஈரப்பதம் உங்கள் தலைமுடியை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.

|

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் நீளமான முடியை பெற விரும்புகிறோம். ஆண்கள், பெண்கள் என அனைவரும் தலைமுடி பிரச்சனை அனுபவிக்கிறோம். தலைமுடி பிரச்சனை இல்லாத கூந்தலை பெறதான் அனைவரும் விருப்புவார்கள். ஏனெனில், நீளமான மற்றும் அடர்த்தியான தலைமுடி நம் தோற்றத்தை மிக அழகாக காட்டும். ஆனால் முடி உதிர்தல், முடி உடைதல், நரை முடி மற்றும் முடி வலுவிழந்து காணப்படுவதை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அது நமக்கு கவலையளிக்கிறது. நீங்கள் முடி உதிர்வதைக் கையாள்வது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.

Science-backed tips for hair growth in tamil

உங்கள் தலைமுடி பிரச்சனையை சரிசெய்து ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முடியை பெற, நிச்சயமாக உதவும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். எனவே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கான உதவி குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உச்சந்தலையில் மசாஜ் செய்வது

உச்சந்தலையில் மசாஜ் செய்வது

உச்சந்தலையில் மசாஜ் செய்வது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முடிக்கு முக்கியமானது. வாரம் இருமுறை உங்கள் உச்சந்தலையை தவறாமல் மசாஜ் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது முடியின் வேர்களைத் தூண்டுகிறது மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகிறது.

வழக்கமான டிரிம்

வழக்கமான டிரிம்

தலைமுடியின் நுனியில் உள்ள பிளவு முனைகள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. எனவே உங்கள் தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்வது முக்கியம்.

அடிக்கடி கண்டிஷனர் பயன்படுத்தவும்

அடிக்கடி கண்டிஷனர் பயன்படுத்தவும்

ஒவ்வொரு முறை ஷாம்பு போடும் போதும் சில இயற்கையான ஸ்கால்ப் ஆயில்களை இழக்கிறீர்கள். அதிகப்படியான ஷாம்பு உங்கள் தலைமுடியை உலர வைத்து, உங்கள் முடியை வலுவிழக்கச் செய்யும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் ஷாம்பு பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் தலைமுடியை அலசிய பின் கண்டிஷனரைப் பயன்படுத்தவும். கண்டிஷனர் உங்கள் தலைமுடியில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து, அதை வலிமையாக்குகிறது.

முட்டை ஹேர் மாஸ்க்

முட்டை ஹேர் மாஸ்க்

உங்கள் தலைமுடி முதன்மையாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இது உங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். முட்டை மாஸ்க்கில் உள்ள ஈரப்பதம் உங்கள் தலைமுடியை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

தலைமுடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கவும்

தலைமுடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கவும்

நீங்கள் மற்ற சிகை அலங்காரங்களை முயற்சி செய்யலாம் அல்லது உங்கள் தலைமுடியை தளர்வாக பின்னாலாம், கட்டலாம். இறுக்கமாக தலைமுடியை கட்டுவது உங்கள் முடியை சேதப்படுத்தும். ஜடை, கார்ன்ரோஸ், பிக்டெயில் மற்றும் போனிடெயில் போன்ற பிற முடி அலங்காரங்கள் இறுக்கமாகப் பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி அதிக பாதிப்பை சந்திக்கும். இந்த சிகை அலங்காரங்கள் உங்கள் முடிக்கு அழுத்தம் கொடுக்கிறது. மேலும், இது முடி உதிர்வு மற்றும் முடி உடைதலுக்கு வழிவகுக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ளுங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ளுங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை எதிர்த்து போராடி, முடி உதிர்தலைத் தடுக்க உதவும். இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். நீங்கள் சால்மன் அல்லது கானாங்கெளுத்தி மீன் அல்லது ஆளிவிதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கானாங்கெளுத்தியில் இருந்து பெறப்பட்ட மீன் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Science-backed tips for hair growth in tamil

Here we are talking about the Science-backed tips for hair growth in tamil.
Story first published: Tuesday, August 2, 2022, 17:59 [IST]
Desktop Bottom Promotion