For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்க நடிகை மலாய்கா இத தான் யூஸ் பண்ணாங்களாம்..!

46 வயதான பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவால் சந்தித்த தலைமுடி உதிர்வை வெங்காய சாறு பயன்படுத்தி சரிசெய்தாராம்.

|

நாளுக்கு நாள் கொடிய கொரோனா வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் ஒருசில பக்க விளைவுகளை சந்திப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்று தலைமுடி உதிர்வு.

Malaika Arora Won Her Battle With Coronavirus Hair Loss By Using This Juice

46 வயதான பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு குணமாகியிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதோடு கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் தலைமுடி உதிர்வை அதிகம் சந்தித்ததாகவும், அந்த தலைமுடி உதிர்விற்கு அவர் பயன்படுத்திய ஒரு இயற்கை வழி குறித்தும் தெரிவித்திருந்தார். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 மற்றும் தலைமுடி உதிர்வு

கோவிட்-19 மற்றும் தலைமுடி உதிர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தலைமுடி உதிர்வை சந்தித்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியானா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் சர்வைவர் கார்ப் பேஸ்புக் குழு கணக்கெடுப்பைச் சேர்ந்த டாக்டர் நடாலி லம்பேர்ட் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அதிக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் முதல் 25 அறிகுறிகளில் முடி உதிர்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

கோவிட் -19 இன் நீண்டகால தாக்கங்களை அனுபவித்த சுமார் 1500 பேர் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ‘long-haulers' என்று அழைக்கப்படும் இவர்கள், குமட்டல் மற்றும் மூக்கடைப்பை விட முடி உதிர்தலை அதிகம் அனுபவித்து தெரிய வந்தது.

கொரோனா நோயாளிகளுக்கு தலைமுடி ஏன் உதிர்கிறது?

கொரோனா நோயாளிகளுக்கு தலைமுடி ஏன் உதிர்கிறது?

கொரோனா நோயாளிகளுக்கு ஏன் தலைமுடி உதிர்கிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இப்படி ஏற்படுவதற்கான காரணம் இன்னும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலரும் மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை அனுபவிப்பதால் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வகையான தலைமுடி உதிர்வு தற்காலிகமானது. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, உடலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுவதோடு, உடலில் ஒருவித அதிர்ச்சியும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, தொற்றுநோயாளிகள் ஆரோக்கியமான உணவை அதிகம் உண்ணாமல் இருப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, தலைமுடி உதிர வழிவகுக்கிறது. இருப்பினும், விஞ்ஞான சான்றுகள் இல்லாமல், எதையும் உறுதியாக கூற முடியாது.

தலைமுடி உதிர்வைத் தடுக்க மலாய்கா பயன்படுத்தியது என்ன?

தலைமுடி உதிர்வைத் தடுக்க மலாய்கா பயன்படுத்தியது என்ன?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா கான், தலைமுடி உதிர்வைத் தடுக்க பயன்படுத்தியது ஒரு இயற்கை பொருள். அதுவும் நமது வீட்டு சமையலறையில் இருக்கும் பொருள் தான். அது வேறொன்றும் இல்லை, வெங்காயம் தான். ஆம், மலாய்கா அரோரா வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 1/2 மணிநேரம் முதல் 45 நிமிடம் வரை ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசியதாக, இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

வெங்காய ஜூஸ் எப்படி செயல்படுகிறது?

வெங்காய ஜூஸ் எப்படி செயல்படுகிறது?

வெங்காய சாற்றில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் அடங்கிய வெங்காயச் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வலிமைக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, தலைமுடி உதிர்வது குறைந்து, தலைமுடியின் வளர்ச்சி மேம்பட ஆரம்பிக்கும்.

நினைவில் கொள்க

நினைவில் கொள்க

* தலைக்கு எப்போதும் நற்பதமான வெங்காய சாற்றினைப் பயன்படுத்துவதே சிறந்தது. எனவே, எப்போதும் குறைவான அளவில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து பயன்படுத்துங்கள்.

* இல்லாவிட்டால், வெங்காயத்தை அரைத்து அதை ஒரு மஸ்லின் துணி பயன்படுத்தி வடிகட்டி சாறு எடுத்து, அந்த சாற்றினை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். இருந்தாலும், தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் தயாரித்துப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Malaika Arora Won Her Battle With Coronavirus Hair Loss By Using This Juice

It was with the help of this stinky juice that Malaika Arora won her battle with Coronavirus hair loss. Read on to know more...
Desktop Bottom Promotion