For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு முடி நீளமா வளரனும்மா? அப்ப இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க...!

மிகவும் மதிப்பிடப்பட்ட மற்றும் பயனுள்ள முடி வளர்ச்சி மூலப்பொருள், வெந்தயம். இது உங்கள் தலைமுடியில் கடுமையான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய பொருள். முடி உதிர்தல், முடி வளர்ச்சி மற்றும் உங்கள் முடியின் ஒட்டுமொத்த நிலையை மேம்

|

தலைமுடி நீளமாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லாருக்கும் அதுபோன்று அமைவதில்லை. அதனால், முடி வளர்ச்சிக்கு பல செயற்கை பொருட்களை மக்கள் சந்தையில் வாங்கி உபயோகிக்கிறார்கள். இது, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான பொருட்கள் உங்கள் முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்திய பாரம்பரிய முறை, தலைமுடியை நல்ல அழகாக மாற்றுகிறது.

lost beauty secrets for hair from India

நம் பாட்டியின் வீட்டு வைத்தியம் போன்ற நல்ல இயற்கையான முடி தயாரிப்புகள் உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உங்கள் தலைமுடி வேகமாக வளரக்கூடிய இயற்கையான அழகு ரகசியங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேம்பு

வேம்பு

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், வேர்களை வலுப்படுத்துவதற்கும் பெயர் பெற்றது வேம்பு. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தீர்வாகும். இது உச்சந்தலையில் நிலைகளை குணப்படுத்தவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது. சிறிது உலர்ந்த வேப்பம் தூள் அல்லது ஒரு சில வேப்ப இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இலைகளை போட்டு 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்னர் குளிர்விக்க வேண்டும். பின்னர், அதை உங்கள் தலைமுடியில் தேய்க்க வேண்டும். நீங்கள் உலர்ந்த தூளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நேரடியாக தண்ணீரில் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி, உங்கள் தலைமுடியை சுமார் 30 நிமிடங்களுக்கு கழுவும் முன் தடவவும்.

MOST READ: உங்க முடி வேகமாக நீளமா வளர... உங்க சமையலறையில் இருக்க 'இந்த' பொருட்களே போதுமாம்...!

வெந்தயம்

வெந்தயம்

மிகவும் மதிப்பிடப்பட்ட மற்றும் பயனுள்ள முடி வளர்ச்சி மூலப்பொருள், வெந்தயம். இது உங்கள் தலைமுடியில் கடுமையான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய பொருள். முடி உதிர்தல், முடி வளர்ச்சி மற்றும் உங்கள் முடியின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவதற்கான சிறந்த தீர்வாகும். 2-3 டீஸ்பூன் வெந்தயம் எடுத்து, அதை வறுத்து தூள் வடிவில் அரைக்கவும். ஒரு நல்ல பேஸ்டரை தண்ணீரில் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி உங்கள் உச்சந்தலையில் 20-30 நிமிடங்கள் தடவவும். வழக்கம் போல் கழுவவும். நீங்கள் 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்பது ஒரு பண்டையகால தீர்வாகும். இது ஒரு கண்டிஷனராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பொடுகு நோய்க்கான சிறந்த சிகிச்சையாகும். வைட்டமின் சி இருப்பதால் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் தலைமுடி வேகமாக வளர வைக்கும். 6-7 டீஸ்பூன் அம்லா பொடியை எடுத்து அதை 5-6 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்குங்கள். உங்கள் தலைமுடியை பிரிவுகளாக பிரித்து பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடிக்கு தடவவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு ஷாம்பூவுடன் கழுவ வேண்டும். நல்ல முடிவுக்கு இந்த நடைமுறையை வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.

கற்றாழை ஹேர் கண்டிஷனர்

கற்றாழை ஹேர் கண்டிஷனர்

கற்றாழை உங்கள் உடலுக்கு நம்பமுடியாத நன்மைகளை வழங்கிறது. கற்றாழையை பயன்படுத்த நீங்கள் எந்த வழியைத் தேர்வுசெய்தாலும், அது உங்களுக்கு நல்லது செய்யும். கூந்தலைப் பொறுத்தவரை, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது, முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு சிறந்தது. சிறிது கற்றாழை ஜெல் எடுத்து, அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30-40 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வழக்கம் போல் கழுவ வேண்டும். இதைப் பயன்படுத்த மற்றொரு வழி தேன் மற்றும் தேங்காய் எண்ணெய். உங்கள் தலைமுடி கூடுதல் உலர்ந்த மற்றும் உடையக்கூடிய நாளில் இந்த முகமூடியைப் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு மந்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

MOST READ: உங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா?

தேங்காய் எண்ணெய் மசாஜ்

தேங்காய் எண்ணெய் மசாஜ்

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே உங்கள் தலைமுடிக்கு நன்மையை வழங்குகிறது. தாய்மார்கள் ஒவ்வொரு வாரமும் தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவிக்கொள்வதால், அது நம் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும் என்றும் பிரச்சினைகளைத் தடுக்கும் என்றும் அவர் அறிந்திருந்தார். தேங்காய் எண்ணெயை 2-3 நிமிடங்கள் சூடாக்கி, சூடான எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் தடவவும். நீங்கள் அதை ஒரு மணி நேரம் அல்லது ஒரே இரவு முழுவதும் விட்டுவிடலாம். ஷாம்பு கொண்டு அதை கழுவ வேண்டும். கூடுதல் ஊட்டச்சத்துக்காக, வெந்தயம் தேங்காய் எண்ணெயில் சிவப்பு நிறமாக மாறும் வரை வேகவைக்கவும். வெந்தயத்தை வடிக்கட்டி, எண்ணெய் ஆறிய பின் உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது

குளிர்ந்த நீரில் குளிப்பது

இந்த எளிய படிநிலையை உங்கள் ஹேர் வாஷ் வழக்கத்தில் சேர்ப்பதன் மூலம் உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யலாம். குளிக்க செல்வதற்கு முன்பு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டும், உங்கள் தலைமுடியை சூப்பராக மாற்றும். இது உங்கள் தலைமுடியை தானாக பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lost beauty secrets for hair from India

Here we are talking about the lost beauty secrets for hair from India.
Story first published: Wednesday, April 21, 2021, 17:27 [IST]
Desktop Bottom Promotion