For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேப்ப எண்ணெய் எப்படி முடில யூஸ் பண்ணனும் தெரிஞ்சுக்கோங்க.

வேப்ப மர இலை மற்றும் காய்களில் நிறைந்து இருக்கும் பயன்கள் மிக அதிகம். அவற்றின் மூலம் கிடைக்கும் வேப்ப எண்ணையும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. வேப்ப எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் பொடுகை ந

|

சில நாட்களில் நீங்கள் சோர்வாக அல்லது சோகமாக உணரும் போது வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து காற்று வாங்கினாலே மனசு சற்று லேசாக உணருவீர்கள். இந்த வேப்ப மரங்களிலிருந்து வரும் காற்று புத்துணர்ச்சி தருவதாகவும், கலப்படமற்றதாகவும் மற்றும் ஆக்சிஜன் நிறைந்ததாகவும் இருக்கிறது. சில நிமிடங்கள் மரங்களின் அடியில் அமருவது கூட உங்களின் முழு உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டும்.

Neem Oil

அதேபோல் வேப்ப மர இலை மற்றும் காய்களில் நிறைந்து இருக்கும் பயன்கள் மிக அதிகம். அவற்றின் மூலம் கிடைக்கும் வேப்ப எண்ணையும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வேப்ப எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் பொடுகை நீக்கவும் உதவுகிறது. உங்கள் உச்சந்தலையில் முடி தொடர்பான சில பிரச்சினைகளுக்கு சக்திவாய்ந்த சிகிச்சை அளிக்க வேப்ப எண்ணெய் உதவும். மேலும் வேப்ப எண்ணெய் பொடுகு, அரிப்பு, சரும அழற்சி, தடிப்பு சரும அழற்சி, பொடுகுத் தொல்லை, முகப்பரு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.

MOST READ: உங்க முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா அப்போ இந்த யூஸ் பண்ணுங்க காணாமப் போய்விடும்.

தேவையானவை

தேவையானவை

1/2 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய்

3 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய்

10 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெய்

முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள். முடி வளர்ச்சியை அதிகரிக்க லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலக்கி அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள்.

பொடுகு மற்றும் நமைச்சல்

பொடுகு மற்றும் நமைச்சல்

கேண்டிடா இது பொடுகுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. பல பூஞ்சைகளுக்கு எதிராக போராட வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொடுகுத் தொல்லை ஏற்படும் போது அத்துடன் தலையில் சிவப்பு நிற காயங்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. வேப்ப எண்ணெயில் நிம்பிடின், பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் நமைச்சல்களை நீக்க சிறந்த தீர்வாக அமையும்.

தேவையானவை

தேவையானவை

1/2 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய்

3 தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய்

இவை இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலில் நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.

அரிக்கும் சருமழற்சி

அரிக்கும் சருமழற்சி

அரிக்கும் சரும அழற்சி என்பது சருமம் வறண்டு மற்றும் எரிச்சலுடன் காணப்படும் ஒன்றாகும். சில சமயங்களில் சரும அழற்சியில் இருந்து தண்ணீர் போன்று சலம் வெளியேறலாம். இது உடனடியாக சரி செய்ய முடியாது. இதற்கு சில மாதங்கள் மற்றும் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் வேப்ப எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அழற்சிக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயில் உள்ள சரும அழற்சி எதிர்ப்புப் பண்புகள் விரைவில் குணமாக உதவுகிறது. மேலும் வேப்ப எண்ணெயில் உள்ள ஹிஸ்டமினிக் எதிர்ப்பு பண்புகள் ஒவ்வாமை தூண்டும் பாக்டீரியாகளைக் குறைக்கின்றன.

அத்துடன், வேப்ப எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கி, உலர்ந்த மற்றும் விரிசல் அடைந்த சருமத்தை சரிசெய்து, ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

தேவையானவை

தேவையானவை

1/2 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய்

3 தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய்

வேப்ப எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உங்கள் சருமம் எண்ணெய் உறுஞ்சும் வரை மசாஜ் செய்யுங்கள்.

அடிக்கடி செய்து வருவதினால் சரும அழற்சி விரைவில் குணமாகி விடும்.

MOST READ: வெள்ளரிக்கா, புதினா சேர்த்து யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்குமாம்.

சொரியாஸிஸ்

சொரியாஸிஸ்

பண்டைய காலத்தில் நாம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத மருத்துவத்தில் தடிப்பு, சரும அழற்சி, செதில் காயங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் சிவப்பு நிற மாற்றம் போன்றவற்றை குறைக்க வேப்ப எண்ணெய்யை தான் பயன்படுத்தி வந்தனர். வேப்ப எண்ணெய், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு இருப்பதால் சருமத்தை பாதுகாப்பபாக வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் விரிசல்களைச் சரி செய்து அடுத்த நிலையான தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. நீங்கள் சரும அழற்சிக்கு பயன்படுத்திய முறையே சொரியாஸிஸ்க்கும் பின்பற்றலாம். அல்லது வேப்ப எண்ணெய் பயன்படுத்தி சருமத்தில் மசாஜ் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Neem Oil for Hair Growth, Dandruff and Eczema

Are you looking for potent therapy for your scalp and hair problems, there’s neem oil. A highly revered and effective oil from the Indian subcontinent, it can remedy dandruff, eczema, psoriasis, scalp acne as well as boost hair growth.
Story first published: Friday, September 6, 2019, 14:55 [IST]
Desktop Bottom Promotion