For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு சீசனுக்கும் உங்க முடி கொட்டாம இருக்க நீங்க இந்த விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?

கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், முடியின் துளைகள் அடைத்து, முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. அதேபோல சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவது புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்தும்.

|

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும் ஒரு பருவகால மாற்றம் உள்ளது. ஆனால், அது அடிக்கடி விவாதிக்கப்படவில்லை, அது பருவகால முடி உதிர்தல். பருவகால முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் நாம் இழக்கும் தலைமுடி. இது எந்த பருவத்திலும் இருக்கலாம். கோடை மற்றும் இலையுதிர் மாதங்களில் இது மிகவும் பொதுவானது. ஆனால் பெரும்பாலும் பருவகால முடி உதிர்தல் குளிர்காலத்தில் அதிகபட்சமாக இருக்கும். இத்தகைய முடி உதிர்வுக்கான காரணங்கள் பல உள்ளன மற்றும் அவற்றைத் தெரிந்துகொள்வது முடி உதிர்வைத் தடுக்கும் திறவுகோலாகும். அதனால், நீங்கள் சிறிது கவனம் செலுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பருவகால உதிர்தலைக் குறைக்க முடியும்.

How To Prevent Seasonal Hair Loss in tamil?

பருவகால ஒவ்வாமைகள் (அல்லது தோல் கவலைகள் கூட), வெப்பநிலையின் மாற்றம் உச்சந்தலையில் மற்றும் நுண்ணறைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது பருவகால உதிர்தல் ஏற்படுகிறது. பருவகால முடி உதிர்தலை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

முதலாவதாக, நமது முக தோலைப் போலவே உச்சந்தலையின் தோல் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். புதிய வானிலைக்கு ஏற்ப நமது பராமரிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது போல், உச்சந்தலையும் வறண்டு, முடி கொட்டுகிறது. அதனால், உங்கள் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப முடி பராமரிப்பை சரியாக கையாள வேண்டும்.

தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும்

தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும்

ஒவ்வொரு பருவத்திலும் முடிக்கு அதன் தனித்துவமான அச்சுறுத்தல்கள் உள்ளன. மழைக்காலத்தில், மழைநீர், காற்றில் உள்ள மாசுக்களுடன் கலந்து வருவதால், உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும். அதனால், அந்தந்த பருவத்திற்கு ஏற்ற முடி பராமரிப்பை சரியாக கையாள வேண்டும். இது உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவும்.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், முடியின் துளைகள் அடைத்து, முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. அதேபோல சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவது புற ஊதா கதிர்கள் முடியை சேதப்படுத்தும். சூரிய ஒளியின் கீழ் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் குறைவான மெலனின் உள்ளது. பருவநிலை மாறுவதை உங்களால் தடுக்க முடியாது ஆனால் முடி உதிர்வைத் தடுக்க உதவும் சில இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.

பருவகால முடி உதிர்வைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

பருவகால முடி உதிர்வைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதற்கு மாற்று எதுவும் இல்லை. அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. வாரத்திற்கு ஒரு முறையாவது சூடான தேங்காய் எண்ணெயை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால், பருவத்தைப் பொருட்படுத்தாமல் தலைமுடி கொட்டும். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் ஒரு நல்ல எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த பருவங்களில் உங்கள் முடி வறட்சிக்கு ஆளாவதை தடுக்கும்.

ஹேர் பேக்

ஹேர் பேக்

உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க மருதாணி மற்றும் தயிர் கொண்ட ஹேர் பேக்கை பயன்படுத்தவும். உங்கள் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்த மருதாணி மிகவும் நல்லது. உங்கள் தலைமுடி உடையக்கூடியதாக இருந்தால், வானிலையின் சிறிய மாற்றத்தில் அது உதிர்ந்து விடும். பொதுவாக இயற்கை முறை ஹேர் பேக் உங்கள் தலைமுடியை வலுப்படுத்த உதவுகிறது.

முடியை கட்டுவது

முடியை கட்டுவது

முடி உதிர்வதைத் தடுக்க முடியைக் கட்டுவது மற்றொரு மாற்றாகும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் தலைமுடியைப் பின்னுங்கள். இது முடி உடைவதையும் உதிர்வதையும் தவிர்க்கிறது. வெளியில் செல்லும் போது கூட நாகரீகமான சிகை அலங்காரங்களில் முடியைக் கட்டலாம். இதனால் வானிலை காரணமாக குறைந்தபட்ச சேதம் ஏற்படும். உங்கள் தலைமுடி ஜடையாக பின்னி இருந்தால் காற்றில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் உறிஞ்சாது.

துணியால் கட்டிக்கொள்ளுங்கள்

துணியால் கட்டிக்கொள்ளுங்கள்

உங்கள் தலைமுடியைப் பாதுகாக்க தாவணி மற்றும் தொப்பிகள் போன்ற பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்தவும். பருவத்தின் காரணமாக உங்கள் தலைமுடி ஏற்கனவே பலவீனமாக இருக்கும்போது, ​​வீசும் காற்று அதை சிக்கலாக மாற்றிவிடும். அந்த சிக்கலை சீவும்போது நீங்கள் நிறைய முடியை இழக்கிறீர்கள். குளித்து முடித்து தலைமுடியை உலர வைக்கும் போது அது சிக்கலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தலைமுடியைக் கழுவிய பின் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினால், துணியை உங்கள் தலைமுடியில் கட்டிக்கொள்ளுங்கள்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

வெயில் அல்லது மழையைத் தடுக்க குடைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம். இவை உங்கள் வாழ்க்கை முறையின் பருவகால சரிசெய்தல் ஆகும். இது உங்கள் தலைமுடியை வானிலையின் அழிவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உங்கள் தலைமுடி விலைமதிப்பற்றது என்பதால் பருவகால முடி உதிர்வைத் தடுக்க இந்த எளிய அழகு குறிப்புகளை நீங்கள் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Prevent Seasonal Hair Loss in tamil?

Here we are talking about the How To Prevent Seasonal Hair Loss in tamil
Story first published: Tuesday, June 21, 2022, 17:37 [IST]
Desktop Bottom Promotion