For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா? சும்மா பளபளக்கும்

தலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செய்ய அவோகேடா உங்களுக்கு உதவும். அவோகேடா என்பது உங்கள

|

தலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செய்ய அவோகேடா உங்களுக்கு உதவும். அவோகேடா என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கு மட்டும் நல்லது அல்ல. உங்கள் முடிக்கும் மிக சிறந்ததாக அமையும். அவோகேடாவில் அதிக வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சேதம் அடைந்த உங்கள் முடியை மீட்டு தரும்.

How To Make Homemade Avocado Hair Mask

வைட்டமின்கள் ஏ, பி 6, டி மற்றும் ஈ, மற்றும் தாதுக்கள் மற்றும் அயர்ன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.அவோகேடாவுடன் ஆலிவ் ஆயில், தேன், முட்டை மற்றும் சில பொருட்களை சேர்த்து உங்கள் முடிக்கு ஏற்ற அவோகேடோ ஹேர் மாஸ்க் போடுவதன் மூலம் பளபளப்பாக மற்றும் ஈரப்பதத்துடன் மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைந்த முடி

உடைந்த முடி

அவோகேடாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடைந்த உங்கள் முடியை உறுதியாக்கி உடையாமல் பாதுகாக்கிறது. உங்கள் முடியின் அளவு தோள்பட்டை வரை இருந்தால் ஒரு அவகேடா எடுத்து பாதியாகவும், இடுப்பு வரை இருந்தால் ஒரு முழு அவகேடோவும் அல்லது மிக வறண்ட மற்றும் நீளமான முடி இருந்தால் 2 அவோகேடோ எடுத்துக் கொள்ளுங்கள். அவகேடாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் முடியை வளர வைக்கவும் வறண்ட முடியை சரி செய்யவும் உதவும். எனவே இத்துடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியை நனைத்து விட்டு கலவையை எடுத்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் இருந்து முடியின் நுனிப்பகுதி வரை தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் முடியை தூக்கிக்கட்டி பிளாஸ்டிக் கவர் அல்லது ஷவர் கேப் கொண்டு மூடி வைக்கவும். இது வெப்பத்தை உள்ளே விடாமல் வைத்திருக்க உதவும். இந்த கலவையைத் தலையில் அரைமணி நேரம் வைத்து பின்னர் நன்றாக காய்ந்த பின்னர் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முயற்சியை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

MOST READ: உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா? இந்த பொருள யூஸ் பண்ணுங்க...

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

நீங்கள் பொடுங்குத் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவோகேடா கலவையுடன் இரண்டு முதல் நான்கு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை தேய்த்து பின்னர் அலசினால் பொடுகுத் தொல்லை குறையும்.

வறண்ட முடி

வறண்ட முடி

ஒரு அவோகேடாவை அதன் தோலை நீக்கி தேவையான அளவு சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவோகேடாவில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் வறண்ட உங்கள் முடியை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. இந்த கலவையுடன் இரண்டு தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு தேக்கரண்டியளவு தேன் கலந்து கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் முடியை உடையாமல் பார்த்துக் கொள்வதற்கும் தேன் முடியை உறுதியாக மாற்றுவதற்கும் உதவும். இத்துடன் லாவெண்டர் எண்ணெய் இரண்டு அல்லது மூன்று துளிகள் சேர்க்கலாம். இது நல்ல மணத்தைத் தரும். உங்களுக்கு வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை. கலவையை நன்றாக கலந்து கொண்டு முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உங்கள் முடியின் வேர்களில் எந்த பிரச்சனையும் இல்லையெனில் நீங்கள் பாதியில் இருந்து நுனி வரை தேய்த்தால் மட்டும் போதுமானது. பின்னர் பிளாஸ்டிக் மாஸ்க் கொண்டு முடியை மூடி வைக்கவும். 30 முதல் 45 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு அலசுங்கள். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

MOST READ: நீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?

பளபளப்பான முடி

பளபளப்பான முடி

உங்கள் கூந்தலை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால் நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம். அவோகேடாவில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை பளபளப்பாக மற்றும் அடர்த்தியாக மாற்ற உதவும். தேவையான அளவு அவோகேடாவின் சதை பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். முட்டை உங்கள் முடியை உறுதியாக்க மற்றும் பளபளப்பாக மாற்றவும் ஆலிவ் ஆயில் வறண்ட முடியை சரி செய்யவும் மேலும் இதில் உள்ள வைட்டமீன் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அனைத்தையும் நன்றாக கலந்து அல்லது அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது கலவையை எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உச்சந்தலை முதல் நுனி முடி வரை தேய்த்து முடியை சுருட்டி கட்டி ஷாவ்ர் கேப் போடு மூடி வையுங்கள். 5 முதல் 15 நிமிடங்கள் கழித்து நல்ல ஷாம்பூ கொண்டு அலசுங்கள். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: haircare hair hairfall
English summary

How To Make Homemade Avocado Hair Mask

Avocado is not only great for your health and skin, but also for your hair. It is rich in vitamins and fatty acids, making it ideal for dry, damaged hair. If you combine the avocado with specific ingredients, such as olive oil, honey, or egg, you can cater the mask to your hair's specific needs, such as extra hydration or shine.
Story first published: Thursday, August 22, 2019, 16:05 [IST]
Desktop Bottom Promotion