For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்களுக்கு தாடி வேகமாக வளரணுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...

சில ஆண்களுக்கு தாடி வளர்வதில் பிரச்சனை இருக்கும். இப்படி பிரச்சனை உள்ள ஆண்கள் தங்களின் தாடியின் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை அறிய அதிக ஆர்வம் கொள்வார்கள்.

|

ஆண்களுக்கு அழகே தாடி தான். தாடியுள்ள ஆண்களைத் தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புவார்கள். அதுவும் கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடிகர் யாஷ்ஷின் ஸ்டைலை கண்ட பின்னர் பல ஆண்களுக்கும் யாஷ் போன்ற தாடி வைக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது என்றே கூறலாம். ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்வதில் பிரச்சனை இருக்கும். இப்படி பிரச்சனை உள்ள ஆண்கள் தங்களின் தாடியின் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை அறிய அதிக ஆர்வம் கொள்வார்கள்.

How to Grow Beard Fast Naturally At Home In Tamil

பொதுவாக ஒரு ஆண் பருவமடையும் போது, அவனது முகத்தில் முடி வளரத் தொடங்கும். ஆனால் தாடி வளர்வதில் சிரமத்தை சந்தித்தால், அதன் பின் பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மரபணு கோளாறு, குறைவான அளவில் டெஸ்டோஸ்டிடோன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிகள் உள்ளன. அந்த நேச்சுரல் வழிகளை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் தாடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். அதுவும் தேங்காய் எண்ணெயுடன் சிறிது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, அதை பஞ்சுருண்டையில் நனைத்து தாடி வளரும் பகுதியில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். இந்த நெல்லிக்காயை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது கடுகு இலையுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கடுகு இலையை அரைத்து, அத்துடன் சில துளிகள் நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவலாம்.

எலுமிச்சை மற்றும் பட்டை

எலுமிச்சை மற்றும் பட்டை

எலுமிச்சையில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி, கால்சியம், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இந்த எலுமிச்சை சாற்றினை ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலந்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சிறந்தது. ஒரு பௌலில் யூகலிப்டஸ் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தாடி வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

சுத்தமான மற்றும் ஈரப்பதமான சருமம்

சுத்தமான மற்றும் ஈரப்பதமான சருமம்

தாடி வளரும் பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஈரப்பதத்துடன் இருந்தால், அப்பகுதியில் முடியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாடி வளரும் பகுதியானது எண்ணெய் பசை, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் இல்லாமல் இருந்தால் தான், மயிர்கால்கள் தடையின்றி ஆரோக்கியமாக வளரும். நல்ல சுத்தமான மற்றும் ஈரப்பதமான சருமத்தில் முடியின் வளர்ச்சியானது மிகவும் வேகமாக இருக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை ஃபேஷியல் ஸ்கரப் பயன்படுத்துங்கள். நல்ல தாடி கண்டிஷனர் அல்லது பிசுபிசுப்பு அல்லாத மாய்ஸ்சுரைசரைக் கொண்டு தினமும் இரண்டு முறை சருமத்தை ஈரப்பதமூட்டுங்கள்.

புரோட்டீன் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு

புரோட்டீன் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு

முடியின் வேகமான வளர்ச்சிக்கு இரண்டு முக்கியமாக சத்துக்கள் அவசியம். அவை புரோட்டீன் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் ஆகும். எனவே தாடி வேகமாக வளர வேண்டுமானால் மீன், தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள், நட்ஸ், முட்டை, வே புரோட்டீன் போன்ற உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இது தவிர முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு ஜிங்க், இரும்புச்சத்து, வைட்டமின்களான பி, ஈ, சி மற்றும் டி போன்ற சத்துக்கள் மிகவும் இன்றியமையாததாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இரத்த ஓட்டம் நன்கு இருந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும். உடற்பயிற்சி செய்யும் போது, அது உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை முகத்தில் உள்ள மயிர்கால்களை அடைய உதவும். எனவே தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். உடலில் டெஸ்டோஸ்டிரோனை மேம்படுத்த வலிமை பயிற்சி மற்றும் பளு தூக்குதல் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Grow Beard Fast Naturally At Home In Tamil

In this article, we shared how to grow beard fast naturally at home. Read on to know more...
Desktop Bottom Promotion