For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலை ரொம்ப அரிக்குதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…

தான் மற்ற காலங்களை விட கோடையில் சற்று அதிக கவனிப்பு கூந்தலுக்கு தேவைப்படுகிறது. அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

|

கோடைகாலம் தொடங்கியதுமே பல்வேறு வகையான கவலைகள் நம்மை ஆட்கொள்ள நேரிடும். காரணம் என்னவென்றால், வியர்வை, அதிகப்படியான வெப்பம், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தான். அதனால் தான் பெரும்பாலானோர் உடலின் வெப்பத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்காக கோடைகால பழங்களை தேடி தேடி உண்பர். அதன் மூலம் கோடைகாலத்திற்கேற்ப நமது உடலை பாதுகாக்க முடியும். அதுப்போல தான், கோடையில் கூந்தல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

Home Remedies For Summer Scalp Itchiness

கோடை வெயிலினால் அதிகம் பாதிக்கப்பட கூடிய பகுதி என்றால், அது நம் தலை தான். வெயில் நேரடியாக படுவதாகட்டும், அதிகமான வியர்வை ஏற்படுவதாகட்டும் அனைத்தினாலும் பாதிக்கப்படுவது தலை தான். வியர்வை ஏற்பட்டாலும் அங்கு நம்மால் துடைக்க முடியாது அல்லவா. அதனால் தான் கோடைகாலத்தில் அதிகமாக தலைக் குளிக்க சொல்வது. நீங்கள் நன்கு கவனித்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், கோடையில் தான் தலையில் அரிப்பு முதல் முடி உதிர்வு வரை அதிகமாக ஏற்படக்கூடும். எனவே, தான் மற்ற காலங்களை விட கோடையில் சற்று அதிக கவனிப்பு கூந்தலுக்கு தேவைப்படுகிறது.

MOST READ: வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா? அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...

அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, அரிப்பு, எரிச்சல் பிரச்சனை இருந்தால் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும், தலை அரிப்பிற்கு அவை மட்டுமே காரணங்களாக இருக்க முடியாது. அதிகப்படியான அழுக்கு, சுத்தமற்ற ஸ்கால்ப், கிருமிதொற்று, பொடுகு, பேன் தொல்லை அல்லது ஷாம்பு அழற்சி போன்ற வேறு சில காரணங்களாலும் அரிப்பு ஏற்படக்கூடும். தலை அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்...

MOST READ: ஆண்களே! கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் அரிப்பு ஏற்படுகிறது?

எதனால் அரிப்பு ஏற்படுகிறது?

தலையில் அரிப்பு தொல்லை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து முதலில் தெரிந்து கொள்வோம்.

* தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பொதுவான காரணம் என்றால் அது பொடுகு தொல்லை தான்.

* ஸ்கால்ப் பூஞ்சை மற்று பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டு கூட அரிப்பு ஏற்படலாம்.

* தலையில் பேன் இருந்தால் கடுமையான அரிப்பு தொல்லை இருக்கும்.

* போதுமான ஈரப்பதம் இல்லையென்றால், தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும்.

* மோசமான சுகாதாரம் மற்றும் கெமிக்கல் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களால் ஏற்படக்கூடிய நோய்தொற்றுகள்.

* தலையில் அதிகமாக வியர்த்தால் கூட அரிப்பு அதிகமாக இருக்கும்.

* இது தவிர, மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் கூட அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

எலுமிச்சைச் சாறு

கூந்தல் பராமரிப்பிற்கு எலுமிச்சை மிகவும் சிறந்தது. எலுமிச்சைச் சாற்றை ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, சில நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீரில் அலசிடவும். அது அரிப்பை நீக்கி, கூந்தலை வலுவாக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஸ்கால்ப் பகுதியில் நன்கு தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு, வெறும் தண்ணீரில் கழுவிடவும். அதனால், அரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

3 எண்ணெய்களின் கலவை

3 எண்ணெய்களின் கலவை

லாவெண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சீமைச்சாமந்தி எண்ணெய் ஆகியவை அரிப்புக்கு சிறந்த இயற்கை வீட்டு வைத்தியம். இந்த எண்ணெய்களை ஒன்றாக கலந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்

தலை அரிப்பு பிரச்சனைக்கு ஆலிவ் எண்ணெய், மார்கசா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் டி-ட்ரீ ஆயிலை பயன்படுத்தவும். ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயின் கலவையானது பொடுகுக்கான சிறந்த இயற்கை மருந்தாகும்.

படுக்கும் முன் தலை சீவுதல்

படுக்கும் முன் தலை சீவுதல்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு 5 முதல் 6 முறை தலையை சீப்பு கொண்டு சீவி விட்டு தூங்கவும். இதனால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து வித ஸ்கால்ப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

தலை அரிப்பை போக்க உதவும் உணவுகள்

தலை அரிப்பை போக்க உதவும் உணவுகள்

* தலை அரிப்பு பிரச்சனைக்கும், உணவிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவுப்பழக்கம் ஒன்று தீர்வு என்பதை அனைவரும் ஏற்கொள்கின்றனர். தலையும், உடலில் தானே உள்ளது. கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உணவுப்பழக்கம் நல்லதொரு முன்னேற்றத்தை தரும்.

* வைட்டமின் பி, வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, நோய்தொற்றுகள் மற்றும் அழற்சியை சரிசெய்ய முடியும்.

* எனவே, தலையில் அரிப்பு தொல்லை அதிகமாக இருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் கீரைகள், சாலட்கள், பயறு வகைகள் மற்றும் பலவண்ண காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். இதுபோன்ற உணவுகளில், புரதச்சத்து அதிகமாக உள்ளதால், கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நன்மை கிடைக்கும்.

கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்க்கவும்

கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்க்கவும்

* சிறந்த ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமென்றால், சிறந்ததொரு கூந்தல் பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

* கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கண்டிஷ்னர் அல்லது க்ளென்சரை உபயோகிக்கின்றீர்கள் என்றால் உடனே அதை நிறுத்துங்கள்.

* இயற்கை பொருட்களை மற்றும் வீட்டிலேயே தயாரித்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

* சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது. கெமிக்கல் பொருட்கள், கூந்தலை வறட்சி அடைய செய்துவிடும். அதிகப்படியான வறட்சி கூந்தலில் பொடுகு தொல்லை ஏற்படுத்திவிடும்.

சீப்பை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

சீப்பை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

* உங்களது கூந்தலை இயற்கையான, மென்மையான ஷாம்பு கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்துங்கள்.

* முடியை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒன்று தான் தலையில் அழுக்கு மற்றும் குப்பை சேராமலும், பொடுகு தொல்லை ஏற்படாமலும், தடுக்க உதவிடும்.

* இது தவிர, தலையணை உறை, சீப்பு, துண்டு போன்றவை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

* மேலும், இது போன்ற தனிப்பட்ட பொருட்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளவே கூடாது. ஏனென்றால், அதனால் கூட தலையில் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Summer Scalp Itchiness

Here are some home remedies for summer scalp itchiness. Read on...
Desktop Bottom Promotion