For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு முடி கொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம்... இனிமே இத செய்யாதீங்க...!

மன அழுத்தத்தில் இருக்கும்போது, நாம் சாப்பிடும் அல்லது செய்யும் எதுவும் தேவையான ஊட்டச்சத்தை நமக்கு கொடுக்காது. இதனால், உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.

|

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை முடி உதிர்தல். உங்கள் தலைமுடி உங்கள் தோற்றத்தை அழகாக காட்டும். உங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை போலவே முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதும் முக்கியம். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப முடி பிரச்சனையும் அதிகரிக்கிறது. முடி ஆரோக்கியத்தில் நீங்கள் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட்ட பின்பும் முடி உதிர்தல் பிரச்சனையை அனுபவித்தால், அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். பெரும்பாலும் முடி உதிர்தலுக்கு மருத்துவ உதவியை நாடுவது அவசியமில்லை.

Here are things that causes hair thinning in tamil

ஆனால் முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? முடி உதிர்வதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களை முதலில் தெரிந்துகொண்டு அவற்றை நாம் சரி செய்ய முயல வேண்டும். உங்கள் முடி உதிர்தலுக்கான முக்கிய காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

நாம் அதிகம் சிந்திக்கும்போது, ​​துன்பத்தில் இருக்கும் போது நமது முழு நரம்பு மண்டலமும் & செரிமான அமைப்பும் சிரமத்திற்கு உள்ளாகிறது. இது உடலினுள்ளே சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்தில் இருக்கும்போது, நாம் சாப்பிடும் அல்லது செய்யும் எதுவும் தேவையான ஊட்டச்சத்தை நமக்கு கொடுக்காது. இதனால், உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.

 உணவு

உணவு

பயோட்டின், துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி குறைபாடுள்ள உணவு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. உண்மையில் வைட்டமின் டி இல்லாததால் அலோபீசியா ஏற்படுகிறது. எனவே, சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

பொடுகு

பொடுகு

மற்றொரு மோசமான சுகாதார காரணம் பொடுகு. இது நம் தலையில் செதில்களாக உருவாகும்போது, கீறல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். மேலும், பொடுகு பிரச்சனையால் முடி தண்டு பலவீனமாகிறது. இதனால் முடி மெலிந்து முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

எடை இழப்பு

எடை இழப்பு

எடையில் குறிப்பிடத்தக்க இழப்பு உங்கள் ட்ரெஸ்ஸில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்கும் போது நாம் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். இதனால் நம் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

வயது

வயது

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, வயதாகும்போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டும். அவற்றில் ஒன்று உங்கள் முடி பிரச்சனை. இது நரைமுடி ஏற்படுவதற்கும் முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

பரம்பரை, ஹார்மோன் மாற்றங்கள், மருத்துவ நிலைமைகள் போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படலாம். ஆண், பெண் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. ஆனால் இது ஆண்களுக்கு மிகவும் பொதுவானது. பெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கு தான் ஏற்படுகிறது. வழுக்கை என்பது பொதுவாக உங்கள் உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான முடி உதிர்வைக் குறிக்கிறது. வழுக்கை வருவதற்கு பரம்பரை பரம்பரையாக வயதுக்கு ஏற்ப முடி உதிர்தல் தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here are things that causes hair thinning in tamil

Here are things that causes hair thinning in tamil.
Story first published: Friday, August 12, 2022, 15:14 [IST]
Desktop Bottom Promotion