For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலை பெற இந்த பழ ஹேர் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க போதும்!

பொடுகு, தலையில் அரிப்பு, க்ரீஸ் ஸ்கால்ப், மங்கலான உச்சந்தலையில் துர்நாற்றம் மற்றும் மிக முக்கியமான கூந்தல் பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு இது சிறந்த பழ ஹேர் மாஸ்க் ஆகும்.

|

முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பிளவு முனைகள், குறைந்த முடி வளர்ச்சி மற்றும் வழுக்கை போன்றவை பொதுவாக எல்லா மக்களும் பாதிக்கப்படும் முடி பிரச்சனைகள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதியடைகிறார்கள்.மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, முடி பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசுபாடு ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு சில காரணங்களாக இருக்கலாம். இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இயற்கை வழியில் முடியை பராமரிப்பது ஆகும்.

Fruit Hair Masks For Lustrous Hair in tamil

நீங்கள் வீட்டிலேயே ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால், பழங்களை கொண்டு தாயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். ஆம்! நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர, இயற்கையாகவே வலிமையான மற்றும் பளபளப்பான முடியைப் பெற இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பழ ஹேர் மாஸ்க்குகளை முயற்சி செய்யுங்கள். ஹேர் மாஸ்க்குகளை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம் மற்றும் தயிர் மாஸ்க்

வாழைப்பழம் மற்றும் தயிர் மாஸ்க்

சேதமடைந்த மற்றும் மந்தமான கூந்தலுக்கு இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்க வாழைப்பழம் மிகவும் பயனுள்ள பழங்களில் ஒன்றாகும். இந்த பழங்கள் மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. அதனால், வாரத்திற்கு ஒரு முறை வீட்டில் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தப்படலாம். தலையில் பொடுகு அல்லது அரிப்பு இருந்தால் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை பேஸ்ட் செய்து உங்கள் தலைமுடியில் தடவவும். 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். பளபளப்பான மற்றும் மென்மையான முடியைப் பெற குளிர்ந்த நீரில் லேசான ஷாம்பூ போட்டு தலைமுடியை கழுவ வேண்டும்.

கொய்யா மற்றும் தேன் மாஸ்க்

கொய்யா மற்றும் தேன் மாஸ்க்

இது மற்றொரு ஹேர் மாஸ்க் ஆகும். இது உங்கள் விலைமதிப்பற்ற முடியை நன்கு பராமரிக்கும். கொய்யாவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் சளி சவ்வுகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. பழுத்த கொய்யாவை எடுத்து பிசைந்து கொள்ளவும். பொடுகு இருந்தால் சில துளிகள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். 15 நிமிடம் அப்படியே விட்டு பிறகு ஷாம்பு போட்டு அலசவும்.

பப்பாளி மற்றும் பால் மாஸ்க்

பப்பாளி மற்றும் பால் மாஸ்க்

ஜூசி பப்பாளி தோல் மற்றும் முடி இரண்டிற்கும் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் ஆகும். பப்பாளி, பால், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஃப்ரூட் மாஸ்க் செய்யலாம். அனைத்தையும் ஒன்றாக கலந்து, உங்கள் தலைமுடியில் இந்த ஹேர் மாஸ்க்கை தடவவும். 25-30 நிமிடங்கள் அப்படியே விட்டு, லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.

ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சை சாறு

ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சை சாறு

பொடுகு, தலையில் அரிப்பு, க்ரீஸ் ஸ்கால்ப், மங்கலான உச்சந்தலையில் துர்நாற்றம் மற்றும் மிக முக்கியமான கூந்தல் பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு இது சிறந்த பழ ஹேர் மாஸ்க் ஆகும். சில ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து நன்றாக மசிக்கவும். சில துளிகள் தேன், பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். உங்கள் தலைமுடியில் பேஸ்ட்டை கலந்து தடவவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, லேசான ஷாம்பூ தடவி முடியை அலசவும்.

பீச் மற்றும் தயிர் மாஸ்க்

பீச் மற்றும் தயிர் மாஸ்க்

வறண்ட முடி மற்றும் உச்சந்தலையில் அரிப்பு போன்ற தலைமுடி பிரச்சனைகளை வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பழ ஹேர் மாஸ்க் மூலம் சிகிச்சையளிக்க முடியும். சில பீச் பழங்களை மசித்து அதில் அடித்த தயிர் சேர்க்கவும். சிறந்த முடிவுகளைப் பெற ஆரஞ்சு அல்லது பப்பாளி போன்ற பிற பழங்களையும் சேர்க்கலாம். உங்கள் தலைமுடியில் 20-25 நிமிடங்கள் விட்டுவிட்டு, குளிர்ந்த நீர் மற்றும் ஷாம்பூவில் உங்கள் தலைமுடியை அலசுங்கள்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

வீட்டில் தயாரிக்கப்படும் சில பழ ஹேர் மாஸ்க்குகள் வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்கலாம். எண்ணெய் பசையுள்ள கூந்தலில் எப்போதும் ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் முடி சிக்கலைத் தடுக்கிறது. ஹேர் மாஸ்க்குகளை உலர்த்தி கழுவிய பிறகு, முடி மோசமாக சிக்குவது மற்றும் அவற்றை அகற்றுவது ஒரு வேதனையான விஷயமாக இருக்கும். எனவே, ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruit Hair Masks For Lustrous Hair in tamil

Here we are talking about the Fruit Hair Masks For Lustrous Hair in tamil.
Story first published: Friday, May 13, 2022, 16:22 [IST]
Desktop Bottom Promotion