For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயத்தை உங்க முடியில் இப்படி யூஸ் பண்ணுன்னா... கிடுகிடுன்னு அடர்த்தியா முடி வளருமாம்....!

வெந்தயத்தில் உள்ள லெசித்தின் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கையான டானிக் முடியை ஈரப்பதமாக்குகிறது. மேலும் பளபளப்பு மற்றும் மென்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருகிறது.

|

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து மக்களும் முடி உதிர்வால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முடி உதிர்தலை பிரச்சனை சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். 30 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழுக்கை வருவதைக் காணலாம். இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனை உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் மன அழுத்தமும் ஒரு காரணம். இயற்கை மூலிகைகளை விட வேறு எதுவும் மன அழுத்தத்தை குறைக்க முடியாது. ஏனெனில் அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முழுமையான பூஜ்ஜிய செலவில் அனைத்து வகையான பிரச்சனைகளையும் எளிதில் விடுவிக்கின்றன. முடியில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு மூலிகை வெந்தயம்.

Fighting Hair Loss With Fenugreek in tamil

வெந்தய இலைகள் மற்றும் விதைகள் உச்சந்தலையில் உள்ள வறட்சியை நீக்கவும், பொடுகை குணப்படுத்தவும், முடியை வலுப்படுத்தவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மற்றும் மிக முக்கியமாக சிறந்த முடி உதிர்தலுக்கும் உதவுகிறது. வெந்தயத்தின் நன்மைகள் மற்றும் முடிக்கான பயன்பாடு குறிப்புகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை மூலிகைகள்

இயற்கை மூலிகைகள்

இயற்கை மூலிகையில் வழுக்கை, முடி உதிர்தல், வலுவிழந்த முடி மற்றும் நரை முடி போன்றவற்றை குறைக்கும் சில மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, வேகவைத்த விதைகளை விழுதாக நசுக்கி, பேஸ்ட்டை முடியின் மீது நன்றாக தடவுவதுதான்.

இது எப்படி வேலை செய்கிறது?

இது எப்படி வேலை செய்கிறது?

வெந்தயம் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதத்தை முடிக்கு வழங்குகிறது. இது வேர்களை மீண்டும் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இது உங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால், நீளமான அடர்த்தியான மென்மையான முடியை நீங்கள் பெறலாம்.

முடியை வலுப்படுத்த உதவுகிறது

முடியை வலுப்படுத்த உதவுகிறது

வெந்தயத்தில் உள்ள லெசித்தின் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கையான டானிக் முடியை ஈரப்பதமாக்குகிறது. மேலும் பளபளப்பு மற்றும் மென்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருகிறது.

வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

விதைகளை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும். எண்ணெயை உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும்.

வெந்தையம் மற்றும் தயிர்

வெந்தையம் மற்றும் தயிர்

விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, கெட்டியான தயிருடன் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் நன்றாக முடியை அலச வேண்டும். இது பொடுகு மற்றும் பிற உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கிறது. வெந்தய விதைகள் அல்லது இலைகளை ஷூ ப்ளவருடன் கலந்து குளிப்பது முடி மற்றும் உச்சந்தலையை குளிர்ச்சியாக்கும்.

வெந்தயம் முடி உதிர்வை குறைக்குமா?

வெந்தயம் முடி உதிர்வை குறைக்குமா?

வெந்தயம் அல்லது மெத்தி விதைகள் ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் முடியைப் பெற உதவும். பொடுகு, முடி உதிர்தல்,வழுக்கை மற்றும் பிற முடி பிரச்சனைகளுக்கு மேத்தி விதைகள் மூலம் நீங்கள் தீர்வு காணலாம். வெந்தய விதைகள் முடியின் தரத்தை மேம்படுத்தி முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

வெந்தயமானது முடி உதிர்தலில் குறிப்பிடத்தக்க குறைப்பை வெளிப்படுத்துகிறது. வெந்தயத்தை நேரடியாக நீங்கள் தலையிலும் பயன்படுத்தலாம். வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் அதை ஆறு மாதங்களுக்கு 300 mg/day வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

வெந்தயம் முடி உதிர்தலுக்கான சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். எனவே, பார்லர் மற்றும் சலூன்களில் ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும்? வெந்தயத்தைப் பயன்படுத்தி உங்கள் முடிக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fighting Hair Loss With Fenugreek in tamil

Here we are talking about the Fighting Hair Loss With Fenugreek in tamil.
Story first published: Friday, May 27, 2022, 16:31 [IST]
Desktop Bottom Promotion