பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!

உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு மசாஜ் செய்வது, முடி உதிர்தலை எதிர்த்து முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த நுட்பமாகும்.

நீண்ட, பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கான ஒரு பழமையான முறை எண்ணெயை பயன்படுத்துவது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் அல்லது மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இது முடி வளர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது மற்றும் உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இருப்பினும், மசாஜ் மட்டும் முக்கியமல்ல. சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானது. முடி எண்ணெய்களின் பரந்த பட்டியல் இருந்தாலும், பாதாம் எண்ணெய் முடி உதிர்வைக் குறைப்பதில் மிகவும் திறமையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

fight-hair-fall-with-almond-oil-in-tamil

முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் பாதாம் எண்ணெய் ஏன் பயனுள்ளதாக இருக்கிறது? அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிப்பு உச்சந்தலையை ஆற்ற உதவுகிறது

அரிப்பு உச்சந்தலையை ஆற்ற உதவுகிறது

உச்சந்தலையில் இறந்த செல்கள் குவிந்து பல முடி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால் முடி உதிர்தல், அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க பாதம் உங்களுக்கு உதவும். பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் ஊட்டமளிப்பதற்கும் ஹைட்ரேட் செய்வதற்கும் பயன்படுத்தவும். இதற்கான பலனை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்.

முடி புத்துணர்ச்சிக்கு உதவுகிறது

முடி புத்துணர்ச்சிக்கு உதவுகிறது

பாதாம் எண்ணெயில் பயோட்டின்கள் நிறைந்துள்ளன. எனவே உங்கள் தலைமுடியை பாதம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கும், முடி உதிர்வைக் குறைத்து, உங்கள் தலைமுடியை பளபளப்பாக்க உதவும். மேலும், உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

மசாஜ் செய்வது முடியின் அளவை அதிகரிக்கிறது

மசாஜ் செய்வது முடியின் அளவை அதிகரிக்கிறது

வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை பாதாம் எண்ணெயில் காணப்படும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகும். அவை ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை முடி உதிர்வைக் குறைத்து, முடியின் அளவை அதிகரிக்கச் செய்யும். பாதாம் எண்ணெய் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்திவாய்ந்த ஆதாரமாகவும் உள்ளது. அதாவது இது முன்கூட்டிய முடி நரைப்பதைத் தாமதப்படுத்த உதவுகிறது.

முடி பிரச்சனைகளை குறைக்கும்

முடி பிரச்சனைகளை குறைக்கும்

உங்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருக்கிறதா? சிக்கலாக இருக்கும் முடியை பராமரிப்பது கடினமாக உள்ளதா? ஆம். எனில், பாதாம் எண்ணெய் உங்கள் முடியை மென்மையாக்கும். இது கூந்தலை பட்டுப் போல் ஆக்குகிறது மற்றும் கண்டிஷனராக செயல்படுகிறது. எனவே, முடியை சீவும்போது உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கூடுதலாக, இது முடி சேதமடையும் வாய்ப்பையையும் குறைக்கும்.

முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்

பாதாம் எண்ணெயில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் உங்கள் முடியை வலுப்படுத்தி மென்மையாக்கும். கூடுதலாக, எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் பிளவு முனைகளை நிர்வகிக்கவும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

பாதாம் எண்ணெய் தலை மசாஜ்

பாதாம் எண்ணெய் தலை மசாஜ்

பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை வெதுவெதுப்பாக சூடாக்கவும். உங்கள் உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும் மற்றும் தலைமுடியின் நீளத்திற்கு எண்ணெய்யை தடவவும். பின்னர், 3-4 மணி நேரம் கழித்து முடியை ஷாம்பு கொண்டு அலசவும். உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு மசாஜ் செய்வது, முடி உதிர்தலை எதிர்த்து முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த நுட்பமாகும். விரைவான முடிவுகளுக்கு, வாரத்திற்கு இரண்டு முறை தலையில் மசாஜ் செய்யுங்கள். உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், முடியை அதன் சிறந்த நிலைக்கு கொண்டு வரும். தலை மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கலாம், சூரிய பாதிப்பு, மாசுபாடு மற்றும் ஆரம்பகால நரைத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்.

பாதாம் எண்ணெய் முடி மாஸ்க்

பாதாம் எண்ணெய் முடி மாஸ்க்

வெந்தய விதைகள் மற்றும் வாழைப்பழத்தை ஒரு பிளெண்டரில் அரைக்கவும். ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயை அதனுடன் சேர்த்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது உங்கள் ஹேர் மாஸ்க் தயார். இதை உங்கள் உச்சந்தலையிலும், முடியின் நீளம் வரையிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வெந்தய விதைகள் பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிற முடி நிலைகளைத் தடுக்கும். கூடுதலாக, இந்த ஹேர் மாஸ்க்கில் உள்ள வாழைப்பழம் உங்கள் தலைமுடியை மிருதுவாகவும் பிரகாசிக்கவும் ஒரு மூலப்பொருளாக செயல்படுகிறது.

பாதாம் எண்ணெய் சீரம்

பாதாம் எண்ணெய் சீரம்

பாதாம் எண்ணெய் சீரம் மூலம் உங்கள் தலைமுடி கனமாக தோன்றும். கற்றாழை மற்றும் லாவெண்டர் பாதாம் எண்ணெயின் நன்மைகளை மேம்படுத்தி முடி உதிர்வை நிறுத்துகின்றன. அதில் மூன்று சொட்டு லாவெண்டர் எண்ணெய், இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து தடவ வேண்டும். சீரம் ஈரமாக இருக்கும்போதே உங்கள் முடியின் நீளத்திற்கு தடவவும். பெண்களே, நீங்கள் பளபளப்பான முடியைப் பெற விரும்பினால், இந்த அதிசய பாதாம் எண்ணெயைத் தவறவிடாமல் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion