Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
தலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பரு வருமா? ரெண்டுக்கும் என்ன தொடர்பு?
பொடுகு தொல்லை என்பது மிகவும் எரிச்சலூட்டும் தன்மையுடையது. முதலில் தலையை மட்டும் பாதித்த பொடுகு, அடுத்ததாக உங்கள் முகங்களையும் சேர்த்து பாதிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பொடுகுத் தொல்லை என்பது மிகவும் எரிச்சலூட்டும் தன்மையுடையது. முதலில் தலையை மட்டும் பாதித்த பொடுகு தற்போது உங்கள் முகங்களையும் சேர்த்து பாதிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது மிக அதிக அளவில் பொடுகு தொல்லை ஏற்படும் போது அவை உங்கள் புருவங்களுக்கு அருகில் அல்லது மூக்கு பகுதியை சுற்றி சிறுச் சிறு பொறிகளாக அல்லது வறண்ட சருமமாக மாற வாய்ப்புயுள்ளது. இதுதான் முகப்பொடுகு ஆகும்.

இப்போது நாம் பொடுகுத் தொல்லையால் ஏற்படும் சில உண்மையான விஷயங்களைப் பார்க்கலாம். அத்துடன் அவற்றை எவ்வாறு வீட்டு வைத்தியம் மூலம் அகற்றலாம் என்பதையும் பார்க்கலாம். உங்களுக்கு மிக அதிகமான பொடுகு தொல்லையோ, நமைச்சலோ இருந்தால் உங்களது மருத்துவரை நீங்கள் கண்டிப்பான முறையில் அணுக வேண்டும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?
பொடுகு வருவதக்கான காரணங்கள் இன்னும் மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பதற்கான வழிகளும் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் வழிகள் உள்ளன.
பெரும்பாலான மக்கள் சோப்பு மற்றும் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவதால் பொடுக்குத் தொல்லையை நீக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. நீங்கள் சோப்பு மற்றும் மாய்ஸ்சரைஸரைப் பயன்படுத்துவதால் பொடுகுத்தொல்லை அதிகமாக வாய்ப்புயுள்ளது.

சில உண்மைகள்:
பொடுகுத் தொல்லையின் போது உங்களது தோல் மிகவும் மென்மையானதாக மாறிவிடும். எனவே நீங்கள் மிகவும் அதிக கவனத்துடன் உங்களது தலை முடியைக் கையாள வேண்டும்.
கடுமையான சோப்புகள் மற்றும் அடிக்கடி தலைமுடியை அலசுவதால் முடியின் வேர் பகுதியை எரிச்சல் அடையச் செய்யும்.
உங்கள் முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் நீங்கள் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள் மேலும் எரிச்சலூட்டும்.
மாய்ஸ்சரைஸர்களை அதிகப்படியாக பயன்படுத்தக்கூடாது. இவை மேலும் அவற்றை சேதப்படுத்துதும்.
நீங்கள் பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் மேன்மையனதா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள். அதேபோல் பொடுகை ஏற்படுத்தும் ஈஸ்ட்டை தடுக்கும் ஷாம்பூகளை தேர்ந்து எடுத்து பயன்படுத்துங்கள். பெரும்பாலும் நிபுணர்கள் சல்பர் இல்லாத ஆன்டிபயாடிக் ஷாம்பூகளை பரிந்துரைக்கின்றனர்.

முகம், காதுகளில் உள்ள பொடுகினை நீக்குவது எப்படி?
உங்கள் முகங்களை கழுவும் போது பெரும்பாலும் சோப்புகளைப் பயன்படுத்தமால் ஃபேஷ்வாஷ் பயன்படுத்துங்கள்.
பூஞ்சைத் தொற்றுக்களை சரிசெய்கின்ற ஆன்டி-ஃபங்கல் க்ரீம்களை இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையிலும் தினமும் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
சருமப் பிரச்சினைகள், தடிப்புகள், அரிப்பு, அழற்சி போன்ற சருமப் பிரச்சினைகளைத் தீர்க்க ஹைட்ரோகொரிஸ்டன் க்ரீம்களை ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.
மேலும், நீங்கள் ஒரு முறையாவது உங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்கள் மன அழுத்தத்தைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் பயன் படுத்தும் இரசாயனப் பொருட்கள் அளவைக் குறைத்து ஆரோக்கியமான உணவினை உண்ணப் பழகிக் கொள்ளுங்கள்.

பொடுகு ஷாம்பூ உபயோகிக்கும் முறை:
முதலில் உங்கள் தலை முடியை நன்றாக நனைத்துக் கொள்ளுங்கள். பொடுகு நீக்கும் ஷாம்பினை உபயோகித்து உங்கள் தலை மூடி மற்றும் முடியின் வேர்பகுதியை நன்றாக தேய்த்து ஐந்து நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர், தலை முடியை நன்றாக அலசுங்கள். உங்கள் பொடுகுத்தொல்லை நீங்கும் வரை பொடுகு ஷாம்பினை தினமும் உபயோகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பொடுகுத்தொல்லை வருவதால் உங்கள் மூடியின் வேர்பகுதி காய்ந்து விட்டதாக அர்த்தமில்லை. உங்கள் மூடியை தினமும் அலசினாலே விரைவாக குறைந்து விடும்.



Click it and Unblock the Notifications