For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை முடி சீக்கிரமா வரத தடுக்க.. நீங்க இத ஃபாலோ பண்ணா போதுமாம்...!

நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலை நேரடியாக பாதிக்கிறது மற்றும் நமது உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது நம் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

|

உங்கள் அழகை வெளிப்படுத்த உங்கள் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் மிகவும் முக்கியமான ஒரு பகுதி நம் தலைமுடி. இது உங்கள் ஆளுமையை மேம்படுத்த உதவுகிறது. உங்களை அழகான மற்றும் வசீகர தோற்றத்துடன் காட்டும் உங்கள் தலை முடியை நீங்கள் கவனித்துக்கொள்வது மிக அவசியம். நமக்கு வயதாகும்போது, நம் தலைமுடி இறுதியில் நரைக்கும், இது ஒரு சாதாரண நிகழ்வுதான். இருப்பினும், இளம் வயதிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கினால், அது கவலைக்குரிய விஷயமாக மாறும். தற்போதுள்ள சூழலில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரும்பாலோருக்கு தலை முடி பிரச்சனை உள்ளது.

Common habits which cause premature greying of hair

இளம் வயதிலே வழுக்கை விழுவது மற்றும் நிறை முடி இருப்பது போன்ற பல தலை முடி பிரச்சனைகளை இன்றைய இளம் தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர். இதற்கு நம் வாழ்க்கை சூழலும், நம் நடைமுறையும் ஒரு காரணமாக இருக்கிறது. நாம் அனைவரும் பின்பற்றும் சில பொதுவான பழக்கங்களின் விளைவாக இளம் வயதிலேயே முடி நரைக்ககுடும். இக்கட்டுரையில், உங்கள் தலை முடியை முன்கூட்டியே நரைக்கும் பொதுவான பழக்கங்கள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தைக் கையாளுகிறார்கள். ஆனால் நாள்பட்ட மன அழுத்தம் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது தலை முடி பிரச்சினைக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் நம் முடியை கடுமையாக பாதிக்கும் மற்றும் முன்கூட்டியே நரைக்கு வழிவகுக்கும். உங்கள் தலைமுடி நரைப்பது மன அழுத்தத்தால் தூண்டப்பட்டால், நிதானமாக இருக்க உதவும் செயல்களில் ஈடுபடவும் முயற்சிக்கவும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

MOST READ: வெள்ளை ரொட்டியை நீங்க ஏன் சாப்பிடக்கூடாது? இது உங்க உயிருக்கு என்ன ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை

தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை

உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நமது உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு வராமல் தடுக்கிறது. உங்கள் உச்சந்தலையில் சூடான எண்ணெயை தடவி மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்கிறது. தலை முடியில் எண்ணெய் தேய்ப்பதை தவறாமல் செய்யும்போது, முடியின் முன்கூட்டியே நரைப்பதைக் குறைக்கும்.

அதிக சூரிய வெளிப்பாடு

அதிக சூரிய வெளிப்பாடு

வெயிலில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் தலை முடி முன்கூட்டியே நரைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சூரியனில் இருந்து உருவாகும் புற ஊதா கதிர்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் மோசமானவை. எனவே நீண்ட நேரம் சூரிய ஒளியில் வெளியே இருப்பது நம் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சேதப்படுத்தும், இதன் விளைவாக உலர்ந்த மற்றும் நரை முடி இருக்கும். நமது தலைமுடியை அதிக சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நாம் ஒரு குடை அல்லது துணியை தலையில் போட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

புகைபிடித்தல்

புகைபிடித்தல்

நரை முடி உருவாக முக்கிய காரணங்களில் புகைபிடித்தலும் ஒன்று. புகைபிடித்தல் நம் நுரையீரலுக்கு மட்டுமல்ல, நம் மன அழுத்தத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சிகரெட்டில் உள்ள நச்சுகள் நம் தலையில் உள்ள மயிர்க்கால்களை சேதப்படுத்தி, நரைமுடியை ஏற்படுத்தும்.

MOST READ: ஆயுர்வேதத்தின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

முடி தயாரிப்புகளில் ரசாயனங்கள்

முடி தயாரிப்புகளில் ரசாயனங்கள்

நாம் அனைவரும் நம் தலைமுடியை ஸ்டைலிங் செய்வதை விரும்புகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. ரசாயனங்கள் பயன்படுத்துவதால் நம் தலைமுடிக்கு ஏற்படும் சேதத்தை ஒருபோதும் நினைப்பதில்லை. முடி நிறம் மற்றும் பிற தயாரிப்புகள் போன்ற ரசாயனங்கள் நம் தலைமுடிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி இறுதியில் முடி நரைக்க வழிவகுக்கும்.

சரியான உணவைப் பின்பற்றுவதில்லை

சரியான உணவைப் பின்பற்றுவதில்லை

நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலை நேரடியாக பாதிக்கிறது மற்றும் நமது உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது நம் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சிறந்த முடிக்கு ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்வது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common habits which cause premature greying of hair

Here we are talking about the Common habits which cause premature greying of hair.
Story first published: Friday, July 9, 2021, 12:40 [IST]
Desktop Bottom Promotion