For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடியை இயற்கை வழியில் நேராக்க வேண்டுமா? இதுல ஒன்ன ட்ரை பண்ணுங்க...!

நீங்கள் உங்களின் சுருட்டை முடியை இயற்கை வழியில் நேராக்க விரும்பினால், அழகு நிலையங்களுக்கு செல்லால், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுங்கள்.

|

இன்று தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அநேக மக்கள் சந்திக்கிறார்கள். அதே வேளையில் தலைமுடியை அழகாக பராமரிப்பதற்காக அழகு நிலையங்களுக்கும் செல்கிறார்கள். ஆனால் அழகு நிலையங்களில் தலைமுடிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளால் முடியின் ஆரோக்கியம் தான் பாழாகிறது. குறிப்பாக சுருட்டை முடியைக் கொண்டவர்கள் பலரும் தங்கள் முடியை நேரக்க விரும்புவார்கள். அதற்கு ஹேர் ஸ்ட்ரைட்னிங் கருவியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அதிலிருந்து வரும் வெப்பத்தால், தலைமுடி நேராகுமே தவிர, உண்மையில் சேதமடைகிறது.

Best Home Remedies To Get Straight Hair Naturally In Tamil

எனவே நீங்கள் உங்களின் சுருட்டை முடியை இயற்கை வழியில் நேராக்க விரும்பினால், அழகு நிலையங்களுக்கு செல்லால், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுங்கள். இதனால் தலைமுடி நேராவதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இப்போது சுருட்டை முடியை நேராக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபுரூட் பேக்

ஃபுரூட் பேக்

பழங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அப்பழங்கள் தலைமுடியிலும் மாயங்களை ஏற்படுத்தும். அதுவும் ஸ்ட்ராபெர்ரி அல்லது வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் பால் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி, நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலைமுடி நேராகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை

ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை

தலைமுடிக்கு வேண்டிய புரோட்டீன் முட்டையில் அதிகம் உள்ளது. அத்தகைய முட்டையுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து பயன்படுத்தினால், தலைமுடியில் மாயங்கள் நிகழும். அதுவும் 2 முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, தலைமுடியை நேராக்கவும் உதவுகிறது. அதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு கப் முல்தானி மெட்டி பொடியை ஒன்றாக கலந்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் ஒரு சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும். அதன் பின் மீண்டும் அந்த பேஸ்ட்டை தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, சீப்பு கொண்டு சீவ வேண்டும். இப்படி ஒரு இரண்டு முறை செய்த பின் தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

மூலிகை சிகிச்சை

மூலிகை சிகிச்சை

ஹேர் ஸ்பா மற்றும் பாடி ஸ்பாக்களில் பல்வேறு மூலிகை எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த எண்ணெய்களை சுருட்டை முடிகளில் தேய்த்தால் மாயங்களை உண்டாக்கும். அதுவும் பின்வரும் வழியைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு சீமைச்சாமந்தி எண்ணெய், ரோஸ் எணெணய், லாவெண்டர் எணணெய், கேலண்டுலா எண்ணெய் மற்றம் சந்தன எண்ணெயை ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் என எடுத்து 2 கப் சுடுநீரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த திரவத்தை கண்டிஷனருக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும். அதுவும் இந்த திரவத்தை தலைமுடியில் தடவிய பின்னர், தலைமுடியை நீரில் அலசக்கூடாது. இப்படி செய்தால் தலைமுடி நேராகவும் மென்மையாகவும் இருக்கும்.

எண்ணெய் பயன்படுத்தவும்

எண்ணெய் பயன்படுத்தவும்

வாரந்தோறும் நமது பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைத்து ஊற வைத்து குளிக்க செல்வார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றாமல் இருந்தால், இனிமேல் பின்பற்றுங்கள். அதுவும் ஒரு எண்ணெயை மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக, 2-3 எண்ணெய்களை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றி 45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies To Get Straight Hair Naturally In Tamil

Here are some best home remedies to get straight hair naturally without any chemicals. Read on to know more...
Story first published: Saturday, July 9, 2022, 20:16 [IST]
Desktop Bottom Promotion