Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
இந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கடகடனு வளருமாம்...
கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தி எப்படி முடி வளர்ச்சியைத் தூண்ட முடியும் என்ப
சுற்றுப்புற மாசுக்கள் எல்லாம் அதிகமான இந்த நவீன காலத்தில் கூந்தல் உதிர்வது என்பது ஒரு பிரச்சினையாகி வருகிறது. இதில் சில சமயங்களில் கூந்தல் வளர்ச்சி என்பதும் பெரும் தாமதமான விஷயமாகி போய் விடுகிறது. இந்த மாதிரி கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது.
இந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை போக்க ஏராளமான சாம்பு, க்ரீம்கள் என்று மார்க்கெட்டில் வலம் வந்தாலும் இதில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. எனவே இந்த பிரச்சினையை போக்க இயற்கை வழியே சிறந்தது.

அப்படிப்பட்ட இயற்கை பொருள் தான் இந்த மிளகாய். ஆமாங்க இந்த கெயான் மிளகாய் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்டக் கூடியது.

சிவப்பு மிளகாய்
இந்த சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைன் என்னும் ஒருவித வேதிப்பொருள் தான் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதோடு இது கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது.

ஆலிவ் ஆயில் மற்றும் சிவப்பு மிளகாய்
தேவையான பொருட்கள்
1 கப் ஆலிவ் ஆயில்
5-6 மிளகாய்
பயன்படுத்தும் முறை
முதலில் சிவப்பு மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.
சில நாட்கள் கழித்து எண்ணெயை மட்டும் வடிகட்டிவிட்டு மிளகாயை தனியாக எடுத்து தூக்கி எறிந்து விடுங்கள்.
இந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.
பிறகு மென்மையான ஹெர்பல் சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் அபார வளர்ச்சி ஏற்படுவதை உங்கள் கண் கூடாக பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் சிவப்பு மிளகாய்
தேவையான பொருட்கள்
1 கப் விளக்கெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய மிளகாய்
பயன்படுத்தும் முறை
மேலே கூறப்பட்ட பொருட்களை ஒன்று சேர்த்து ஒரு ஜாரில் அடைத்து கொள்ளுங்கள். முன்பு செய்தது போலவே, இரண்டு வாரங்கள் சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் கூந்தலில் முழுக்க தடவி மசாஜ் செய்து விடுங்கள்.
30-40 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிவப்பு மிளகாய் சாறு
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்
1-2 சொட்டு சிவப்பு மிளகாய் சாறு
பயன்படுத்தும் முறை
ஒரு சுத்தமான பெளலில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிவப்பு மிளகாய் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை தலை மற்றும் முடியில் வேர் வரையிலும் தடவி வட்ட வடிவமாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.
சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் அலசவும். இதை ஒரு வாரத்திற்கு 1-2 முறை என செய்து வந்தால் முடி வளர்ச்சி ஏற்படும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்
1/2 கப் தேங்காய் எண்ணெய்
1/2 கப் ஆலிவ் ஆயில்
2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பவுடர்
பயன்படுத்தும் முறை
ஒரு கண்ணாடி பாட்டிலில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். 2 வாரங்களுக்கு சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வையுங்கள்
பிறகு கொஞ்சம் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் மயிர்க்கால்களில் படும் படி நன்றாக தேயுங்கள்.
30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு மென்மையான ஹெர்புல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் போதும்.
மேற்கண்ட முறைகள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது.

குறிப்பு
பொதுவாக மிளகாய் என்றால் கொஞ்சம் நம் எல்லோருக்குமே பயம் தான். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டாலே நம்மால் தாங்க முடியாது. இதில் எங்கிருந்து தலையில் தேய்ப்பது. இதனால் தலையில் எரிச்சல் உண்டாகும் என்று பயப்படத் தேவையில்லை. நிச்சயம் எரியாது. அதற்காகத் தான் இந்த மிளகாய் சாறுடன் அடர்த்தி அதிகமான மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications