For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க..!

|

மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுசூழலில் அதிக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதிக படியான மாசுக்கள் தான் முடியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமே. முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல்... இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்றுசூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது.

வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க!

நாளுக்கு நாள் இந்த பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும். இதை போலவே தண்ணீராலும் அதிக பாதிப்புகள் முடிக்கு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும். வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும். இனி இதை தயாரித்து, பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காய எண்ணெய்

வெங்காய எண்ணெய்

பல்வேறு எண்ணெய் வகைகள் உள்ளன. அவற்றில் சில தலை முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும், சில சமையல் எண்ணெய்யாக பயன்படும். அந்த வகையில் முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய் போதும். இதற்கு மூல காரணம் இதன் தன்மை தான்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தலை முடி பிரச்சினைகளை தடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிக சிறந்த எண்ணெய் அவசியம் தேவை. இதை தேர்வு செய்ய அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே போதும்.

வெங்காய எண்ணெய்யில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன் இது சிறந்த நிருமி நாசினியாகவும் செயல்படும்.

முடி கொட்டுதல்

முடி கொட்டுதல்

வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி உதிர்வை தடுத்து விடலாம். இதற்கு வாரத்திற்கு 2 முறை வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தாலே போதும். இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.

பொடுகு தொல்லை

பொடுகு தொல்லை

பொதுவாக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது பொடுகு தான். தலையில் உள்ள பொடுகை போக்க மிக சிறந்த வழி வெங்காய எண்ணெய் தான். வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட்டு விடலாம்.

MOST READ: தும்பல் வந்தால் மூக்கை அடைக்காதீர்கள்! மீறி அடைத்தால் என்னென்ன அபாயங்கள் உண்டாகும் தெரியுமா?

முடியின் அடர்த்தி

முடியின் அடர்த்தி

முடி கொத்து கொத்தாக கொட்டி முடியின் அடர்த்தி குறைந்து விட்டதா? இனி இந்த கவலையை விட்டு தள்ளுங்க. வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் மிக எளிதாக முடியின் அடர்த்தியை அதிகரித்து விடலாம். அத்துடன் முடியின் நீளமும் அதிகரிக்கும்.

வெள்ளை முடி

வெள்ளை முடி

வெங்காய எண்ணெய்யை தலைக்கு நன்றாக மசாஜ் செய்து தலைக்கு குளித்தால் வெள்ளை முடி பிரச்சினை குறையும். வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இந்த வெங்காய எண்ணெய் உதவுகிறது. அத்துடன் பேன் தொல்லையும் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

இந்த வெங்காய எண்ணெய்யை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயார் செய்யலாம்.

தேங்காய் எண்ணெய் 250 மி.லி.

வெங்காயம் 3

கருவேப்பில்லை 1 கப்

ஆமணக்கு எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

செய்முறை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும். பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.

MOST READ: தினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு!

செய்முறை

செய்முறை

10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Using Onion Hair Oil

Here we listed the benefits of using onion hair oil.
Desktop Bottom Promotion