For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா?... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…

தற்காலத்தில் தலைமுடி உதிர்தல் என்பது மிக சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கு உண்டாகிற முன்பக்க முடிஉதிர்வு பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறிவிட்ட

|

30 வயதிற்கு மேற் பட்ட ஆடவர்களுக்கு திருமணம் நடக்கிறதோ இல்லையோ, ஒன்று மட்டும் தவறாமல் நடக்கிறது. அது என்ன? தலை முடி கொட்டுவது. பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு சில ஆண்களுக்கு முன் பக்கக் தலைமுடி அதிகமாக கொட்டுவதால் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகள் தோன்றுகிறது. ஆண்களின் பொதுவான வழுக்கை பிரச்சனையுடன் தொடர்புடைய ஒரு வகை முடி இழப்பாகத்தான் முன் பக்க வழுக்கையும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முன் பக்க வழுக்கையை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (frontal fibrosing alopecia (FFA)) என்றும் கூறுகின்றனர். வழுக்கை தொடர்பான பிரச்சனைகள் ஒருவரின் முக தோற்றத்தை பாதிப்பதால் ஆண்கள் ஒரு வித தர்மசங்கடங்களை அடைகின்றனர் . இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுகிறது. தலையின் முன் பக்க வழுக்கை என்பது முடி கொட்டுதலின் முதல் நிலை ஆகும். உங்கள் முடி மெலிதாக மாறுவதற்கான முதல் அறிகுறி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

beauty

நெற்றிக்கு அருகில் இருக்கும் தலைபகுதியில் ஏற்படும் முடி இழப்பு, சில நேரங்களில், புருவங்களின் முடி இழப்பு மற்றும் அக்குள் பகுதியின் முடி இழப்பு போன்றவை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (FFA), என்று வகை படுத்தப்படுகிறது. இந்த பிரச்சனை பொதுவாக உடலில் உருவாக்கப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நோயெதிர்ப்பு எதிர்வினை போன்றவை காரணமாக அறியப்படுகிறது. இந்த விரும்பத்தகாத பிரச்சனை, மருத்துவ முறையின் பல்வேறு சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் குறைக்கப்படலாம் அல்லது முற்றிலும் தீர்க்கப்படலாம். இத்தகைய முடி இழப்பு பிரச்சனைகளை , ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாக வெற்றி கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is frontal hair loss and how totreat it?

now a days hair fall is a very common problem.partiularly for men frontal fall is most worrying issue.
Story first published: Wednesday, May 2, 2018, 15:57 [IST]
Desktop Bottom Promotion