For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி வளர்ச்சியை வேகமாகத் தூண்டும் பாதாம் எண்ணெய்... யார் பயன்படுத்தலாம்?

தலைமுடிக்கு பாதாம் எண்ணெய் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்ற என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

|

பாதாம் எண்ணெய் கூந்தலின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. மென்மையான பட்டு போன்ற கூந்தலுடன் அடர்த்தி அதிகமான அலைபாயும் பொலிவான கூந்தலையும் பெற முடியும். இந்த ஓரே பொருள் அனைத்து நலன்களையும் அள்ளி வழங்குகிறது. பாதாம் எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கூந்தல் பாதிப்பை தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துகள்

ஊட்டச்சத்துகள்

பாதாம் எண்ணெய்யில் மக்னீசியம், கொழுப்பு அமிலங்கள், விட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்றவைகள் உள்ளன. பாதாம் எண்ணெய் நீண்ட ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க உதவுகிறது. இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது. அதனால் தான் இதை நிறைய கூந்தல் பராமரிப்பு சாதனங்களில் பயன்படுத்துகிறார்கள்.

வெடிப்புற்ற கூந்தல்

வெடிப்புற்ற கூந்தல்

பாதாம் எண்ணெய் கூந்தலின் நுனியில் ஏற்படும் வெடிப்பையும் போக்குகிறது. இதற்கு பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இதை மூன்று வாரங்கள் தேய்த்து வந்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.

பட்டு போன்ற கூந்தல்

பட்டு போன்ற கூந்தல்

நீங்கள் பாதாம் எண்ணெய் மற்றும் அவகேடா பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இந்த மாஸ்க்கை தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறிய பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலை பட்டு போன்று மிருதுவாக்குகிறது.

பொடுகுத் தொல்லை நீங்க

பொடுகுத் தொல்லை நீங்க

பாதாம் எண்ணெய் பொடுகுத் தொல்லை நீங்க ஒரு சிறந்த மருந்தாகும். தலையில் உள்ள இறந்த செல்களை எளிதாக போக்குகிறது. பாதாம் எண்ணெய் மற்றும் மசித்த நெல்லிக்காய் இரண்டையும் கலந்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சாம்பு போட்டு அலசி விடுங்கள். இந்த முறை உங்கள் தலையில் உள்ள பொடுகை நீக்கி கூந்தலுக்கு ம் புதுப்பொலிவு தரும்.

தலையில் ஏற்படும் அழற்சி

தலையில் ஏற்படும் அழற்சி

பாதாம் எண்ணெய் தலையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. சுற்றுச்சூழல் மாசுக்கள், கெமிக்கல் பொருட்கள், வெயில், தூசி போன்றவற்றால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது. இந்த தொற்றுகளை போக்க நீங்கள் வழக்கமாக பாதாம் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் போதும்.

முடி வெட்டுவதற்கு எளிதாக

முடி வெட்டுவதற்கு எளிதாக

கொஞ்சம் பாதாம் எண்ணெயை தலையில் தேய்த்து கொண்டால் போதும் நீங்கள் முடி வெட்ட சிரமப்பட வேண்டாம். நினைத்த ஹேர் ஸ்டைலை கச்சிதமாக வெட்டி அழகு பார்க்க முடியும்.

ஈரமான கூந்தல்

ஈரமான கூந்தல்

ஈரமான கூந்தலை சீவிக் கொள்ளுங்கள். இப்பொழுது பாதாம் எண்ணெயை தலையில் அப்ளே செய்து சீப்பை கொண்டு வாரி விட்டு முடியை எளிதாக எந்த வித சிலிப்பும் இல்லாமல் ஒன்னு போல வெட்ட முடியும்.

மசாஜ்

மசாஜ்

கொஞ்சம் பாதாம் எண்ணெயை உங்கள் உள்ளங்கைகளில் எடுத்து கொண்டு தலையில் மயிர்க்கால்களில் படும் படி மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் கூந்தலின் வளர்ச்சியை தூண்டும்.

ஊற வையுங்கள்

ஊற வையுங்கள்

பாதாம் எண்ணெயை தலையில் தேய்த்து குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் வரை ஊற வைக்கவும். இதனால் கூந்தல் எண்ணெய்யை முழுவதுமாக உறிஞ்சி அதன் போஷாக்குகள் கூந்தலுக்கு கிடைக்கும். முடிந்தால் இரவு முழுவதும் ஊற விட்டு காலையில் எழுந்ததும் தலைக்கு குளிக்கலாம்.

வறண்ட கூந்தல்

வறண்ட கூந்தல்

கூந்தலை நன்றாக சீப்பை கொண்டு இழுத்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதாம் எண்ணெய்யை இரு உள்ளங்கைகளில் எடுத்து நன்றாக தேய்த்து பின் தலையில் அப்ளே செய்யவும். இப்பொழுது எண்ணெய்யை கூந்தலின் நுனியிலிருந்து வேர்க்கால்கள் வரை தடவவும். வறண்ட நுனி முடிகள் இப்பொழுது போஷாக்கை பெற்று நன்றாக காட்சியளிக்கும்.

பாதாம் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. எனவே இது வறண்ட கூந்தலை சரியாக்கி பொலிவான தன்மையை கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair care
English summary

Is Almond Oil Good For Hair?

Here we mentioned Almond oil benefits for hair and it contains all kinds of healthy ingredients for hair like.
Story first published: Friday, August 10, 2018, 17:27 [IST]
Desktop Bottom Promotion