For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இங்கு தாடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர்வதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

ஆண்களுக்கு அழகே தாடியும், மீசையும் தான். இது ஒரு ஆண்மையையும் வெளிக்காட்டும். இதனால் தான் பல ஆண்கள் தங்கள் தாடியை பலவாறு ஸ்டைல் செய்து கொள்கிறார்கள். ஆனால் அனைத்து ஆண்களுக்கும் அவர்கள் நினைத்தவாறு தாடி வளர்வதில்லை. நிறைய ஆண்கள் தங்களுக்கு தாடி வளராமல் கஷ்டப்படுகிறார்கள்.

முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி மற்றும் தரத்தில் பல்வேறு காரணிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் மரபணுக்கள், ஹார்மோன்கள், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், ஊட்டச்சத்து மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவரது மரபணுக்களால் தாடி வளராமல் இருந்தால், அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தாடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்க ஒருசில செயல்களை செய்தால் போதும்.

எப்படி தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஒருசில பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ, அதேப் போல் தாடிக்கும் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், தாடி நன்கு வளர்ச்சி பெறும். இக்கட்டுரையில் தாடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர்வதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி கழுவுங்கள்

அடிக்கடி கழுவுங்கள்

தலைமுடியைப் போன்றே தாடியை அடிக்கடி மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் 2 முறை செய்து வருவதன் மூலம், தாடியின் வளர்ச்சி தூண்டிவிடப்படும். அதேப் போல் வாரத்திற்கு 2-3 முறை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கழுவுவதன் மூலம், தாடி வளர்ச்சி பெறுவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும்.

மசாஜ்

மசாஜ்

முகத்தில் முடியில் வளர்ச்சியைத் தூண்ட அடிக்கடி மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ச்சி பெறும். அதிலும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 5-7 துளிகள் யூகலிப்டஸ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் ஜொஜோபா ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் கலவையை தாடியின் மீது தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நுரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்யுங்கள்

அடர்த்தியான தாடியைப் பெற உதவும் அற்புதமான வழிகளுள் ஒன்று உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, மயிர் கால்களுக்கு புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். மேலும் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். ஆண்களின் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் போதுமான அளவு இருந்தால், அது மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டி, தாடியை வளரச் செய்யும். ஆகவே வாரத்திற்கு குறைந்தது 5 முறையாவது 30 நிமிடம் முதல் 2 மணிநேரம் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

மன அழுத்தத்தைப் போக்கவும்

மன அழுத்தத்தைப் போக்கவும்

அதிகப்படியான மன அழுத்தம் முடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். நாள்பட்ட மன அழுத்தமானது உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் அளவை அதிகரித்து, ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும். எனவே தினமும் மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

போதுமான ஓய்வு மற்றும் தூக்கம்

போதுமான ஓய்வு மற்றும் தூக்கம்

எப்போது ஒருவரது உடல் ஆரோக்கியமற்றதாக உள்ளதோ, அப்போது தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆரோக்கியமான உடலுக்கு போதுமான தூக்கம் அவசியம். தூக்கம் சரியான அளவு கிடைத்தால், அது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை நல்ல அளவில் பராமரிக்கும். ஆகவே தினமும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்ளுங்கள். மேலும் நல்ல தூக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

சரியான டயட்

சரியான டயட்

தாடி நன்கு வளர்ச்சி பெற வேண்டுமானால், நல்ல சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். முடி புரோட்டீனால் ஆனது என்பதால், புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், முடி நன்கு வளர்ச்சி பெறும். மேலும் புரோட்டீன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்ச்சி பெறச் செய்யும்.

பயோடின் சப்ளிமென்ட்டுகள்

பயோடின் சப்ளிமென்ட்டுகள்

பயோடின் என்பது வைட்டமின் பி7 ஆகும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது தலைமுடியின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, சருமம் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பயோடின் நட்ஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளது. உங்களுக்கு தாடி நன்கு அர்த்தியாகவும் வேகமாகவும் வளர்ச்சி பெற நினைத்தால், தினமும் 2.5 மிகி பயோடினை எடுங்கள்.

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

ஒருவர் தொடர்ச்சியாக புகைப்பிடித்து வந்தால், அது முடியின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். சிகரெட் மயிர்கால்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களில் இடையூறை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தாடி வேண்டுமென்று ஆசைப்பட்டால், சிகரெட் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Make Your Beard Grow Faster and Thicker

Want to know how to make your beard grow faster and thicker? Read on to know more...
Desktop Bottom Promotion