For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...

மவுத்வாஷில் ஏராளமான ஆன்டி-ஃபங்கல் பண்புகள் உள்ளது. இது முடி உதிர்தல் சிக்கல்களை அகற்ற உதவுகிறது. அதாவது பூஞ்சைத் தொற்றுக்களை அழிக்கும் தன்மை அதிகமாகக் கொண்டிருக்கிறது.

|

மவுத்வாஷில் ஏராளமான ஆன்டி-ஃபங்கல் பண்புகள் உள்ளது. இது முடி உதிர்தல் சிக்கல்களை அகற்ற உதவுகிறது. அதாவது பூஞ்சைத் தொற்றுக்களை அழிக்கும் தன்மை அதிகமாகக் கொண்டிருக்கிறது.

benefits of mouthwash in tamil

அதனுடன் சேர்த்து, இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், தலைவலி பிரச்சன்னை இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக மௌத்வாஷ் என்றாலே பாக்டீரியாக்களைக் கொல்லும் எதிரி என்று தான் அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகுத்தொல்லை

பொடுகுத்தொல்லை

நிறைய பேர் பொடுகு தொல்லையால் சிரமப்படுகிறார்கள். பொடுகால் உங்கள் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படத் தொடங்குகிறது, இதன் காரணமாக நீங்கள் பொது இடங்களில் சங்கடமாக உணர்கிறீர்கள்.

தலை பொடுகுப் பிரச்சனையை சமாளிக்க மக்கள் பல ஷாம்பூவை பயன்படுத்துகின்றனர். இந்த ஷாம்பு சில நேரங்களில் முடி உதிர்தலைக் தருகிறது.

பயன்கள்

பயன்கள்

மவுத்வாஷ் முடி உதிர்தல் பிரச்சனைக்கு உதவும் நுரையீரல் பண்புகளை கொண்டுள்ளது. அதோடு, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இதில் மெத்தில், மெத்தில் சாலிசிலேட், உள்ளது. அது ஆன்டி- இன்பிலம்மாட்டோரி ஆன்டிசெப்டிக் பண்புகள் கொண்டுள்ளது. இது உச்சந்தலைக்கு குளிர்ச்சியை தந்து பொடுகு பிரச்சனையை நீக்குகிறது. எனவே மவுத்வாஷ் எப்படி பொடுகுத்தொல்லைக்கு உதவுகிறது என்று பாருங்கள்.

மவுத்வாஷ் பயன்படுத்தி தலையிலுள்ள பொடுகை அகற்றுவது எப்படி என்று பார்ப்போம்:

- மவுத்வாஷ் மற்றும் தண்ணீர்

- பேபி ஆயில் மற்றும் மவுத்வாஷ்

- மவுத்வாஷ்

- மவுத்வாஷ் மற்றும் ஆப்பிள் வினிகர்

மவுத்வாஷ் மற்றும் தண்ணீர்

மவுத்வாஷ் மற்றும் தண்ணீர்

மவுத்வாஷில் ஆன்டி-இன்பிலம்மாட்டோரி, ஆன்டிசெப்டிக், மற்றும் ஆன்டி-ஃபுங்கள் பண்புகள் உள்ளதால் அது உச்சந்தலையின் நமைச்சலை நிவாரணம் செய்ய உதவுகிறது மற்றும் பொடுகு பிரச்சனையை குணப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை

முதலில் 2 டீஸ்பூன் மவுத்வாஷில் 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதை ஸ்ப்ரே பாட்டில்லில் ஊற்றவும். இதற்கு, முதலில், ஷாம்பு கொண்டு உங்கள் முடியை கழுவி கண்டிஷன் செய்து கொள்ளவும். பின்னர் உச்சந்தலையில் இந்த ஸ்ப்ரே தெளித்து அதை சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு உங்கள் ஸ்கேல்ப்பை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அலசவும்.

பேபி ஆயில் மற்றும் மவுத்வாஷ்

பேபி ஆயில் மற்றும் மவுத்வாஷ்

இந்த பயன்ப்பாட்டு முறை, வறண்ட மற்றும் கடினமான முடி உடையவர்களுக்கு பயன்படும். ஏனென்றால், பேபி ஆயில் மற்றும் மவுத்வாஷ் பயன்படுத்துவதால் அது உங்கள் முடியை உலர்த்தி செய்யாது.

பயன்படுத்தும் முறை

முதலில் 2 டீஸ்பூன் மவுத்வாஷில் 2 டீஸ்பூன் பேபி ஆயில் சேர்க்கவும். பிறகு ஷாம்பு கொண்டு உங்கள் முடியை கழுவ வேண்டும். நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இப்போது, இந்த கலவையை உங்கள் ஸ்கேல்பில் போட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு ஷாம்பூவைக் கொண்டு முடியை சுத்தமாக அலசுங்கள்.

மவுத்வாஷ்

மவுத்வாஷ்

இது ஸ்கேல்ப்பை ரிலாக்ஸ் செய்து பொடுகு பிரச்சனையை நீக்கக்கூடியது.

பயன்படுத்தும் முறை:

1 டீஸ்பூன் மவுத்வாஷ் மற்றும் காட்டன்/பஞ்சு எடுத்துக்கொள்ளவும். பஞ்சை மவுத்வாஷில் நனைத்து உங்கள் ஸ்கேல்பில் தேய்க்கவும். 5-10 நிமிடங்கள் கழித்து ஷாம்பூவைக் கொண்டு முடியை சுத்தமாக கழுவவும்.

மவுத்வாஷ் மற்றும் ஆப்பிள் வினிகர்

மவுத்வாஷ் மற்றும் ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகரில் pH அளவை சமநிலைப்படுத்தும் பண்பு உள்ளது.அது நமது ஸ்கேல்ப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது ஸ்கேல்பில் இருந்து அழுகை நீக்கி தலை பொடுகை வராமல் தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை:

2 ஸ்பூன் மவுத்வாஷ், 2 ஸ்பூன் ஆப்பிள் வினிகர், 2 ஸ்பூன் தண்ணீர், மற்றும் 1 கப் தண்ணீர் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலந்து ஸ்பிரே பாட்டில்லில் போடவும்.

ஷாம்பூவைக் கொண்டு முடியை சுத்தமாக கழுவி பிறகு கண்டிஷனர் பயன்படுத்தவும். பின்பு இந்த ஸ்பிரேவை உங்கள் ஸ்கேல்பில் தெளிக்கவும்.

அதன்பின், தண்ணீரில் ஆப்பிள் வினிகர் கலந்து அதை கொண்டு உங்கள் தலைமுடியை கழுவவும்.

இந்த ஆர்டிகிளின் உதவியுடன் நீங்கள் மவுத்வாஷ் பயன்படுத்தி தலை பொடுகு பிரச்சனையை எளிதாக சமாளிக்க முடியும் என்று நம்புகிரோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dandruff problem: Using mouthwash to fight the problem of dandruff

Mouthwash has antifungal properties that help in removing the problem of hair roots. Along with that, it keeps the scalp healthy and free of dandruff as well.
Desktop Bottom Promotion