For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகை போக்கும் அற்புத மூலிகை... உடனே அரைச்சு பூசுங்க

ஹென்னா பேக்கில் நிறைய நன்மைகள் உள்ளன. கூந்தலுக்கு அழகிய நிறத்தை கொடுப்பதோடு பொடுகு தொல்லையையும் போக்கி நன்மை அளிக்கிறது இதனுடன் லெமன் ஜூஸ், யோகார்ட், கடுகு எண்ணெய், வெந்தயம் சேர்த்து தயாரிக்கும் பேக்

By Suganthi Rajalingam
|

மற்றவர்கள் முன்னிலையில் நம்மை அழகாக காட்டுவதில் நம் தோற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் உங்கள் தலை முழுவதும் செதில் செதிலாக தோல்கள் உரிந்து அசிங்கமாக தென்பட்டால் என்ன நடக்கும். கண்டிப்பாக இது மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த பொடுகு பிரச்சினை அது மட்டுமல்லாமல் தோள்பட்டை , கழுத்து போன்ற பகுதியில் உதிர்ந்து அரிப்பையும் ஏற்படுத்தும்.

how to treat Nakaranjani for Dandruff

இதனால் முகத்தில் முகப்பரு, எரிச்சல் போன்றவற்றால் கஷ்டப்பட நேரிடும். சரி அதற்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா? இருக்கவே இருக்கு நாகரஞ்சனி மூலிகை. என்னடா இது புது மூலிகையா இருக்குன்னு குழம்பாதீங்க. நம்ம மருதாணிக்கு இன்னொரு பெயர் தான் நாகரஞ்சனி. இந்த மூலிகையைக் கொண்டு முழுவதுமாக பொடுகை போக்குவதோடு அழகான கூந்தலையும் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

பொடுகு தொல்லை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சில

காலநிலை மாற்றம்

ஹார்மோன் சமநிலையின்மை

ஈரத்துடன் கூந்தலை கட்டுதல்

மருதாணி

மருதாணி

இந்த ஹென்னா பேக்கில் நிறைய நன்மைகள் உள்ளன. கூந்தலுக்கு அழகிய நிறத்தை கொடுப்பதோடு பொடுகு தொல்லையையும் போக்கி நன்மை அளிக்கிறது. ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தினால் கூந்தல் வறட்சியடைய வாய்ப்புள்ளது. மேலும் இது எண்ணெய் பசை கூந்தலுக்கு இது ஏற்றது அல்ல.

பேக் 1: ஹென்னா, லெமன் மற்றும் யோகார்ட்

பேக் 1: ஹென்னா, லெமன் மற்றும் யோகார்ட்

தேவையான பொருட்கள்

4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்

லெமன் ஜூஸ்

யோகார்ட் (தேவையான பதத்தில்)

பயன்படுத்தும் முறை

ஹென்னா பவுடர், லெமன் ஜூஸ் மற்றும் யோகார்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து தலையிலிருந்து முடியின் நுனி வரை தடவவும் . இந்த பேக்கை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால் கண்டிஷனர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பேக் 2: ஹென்னா, ஆலிவ் மற்றும் வெந்தயம்

பேக் 2: ஹென்னா, ஆலிவ் மற்றும் வெந்தயம்

தேவையான பொருட்கள்

4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்

லெமன் ஜூஸ்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், வொயிட் வினிகர், வெந்தயப் பொடி,

2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

பயன்படுத்தும் முறை

ஒரு கண்ணாடி பெளலில் எல்லா பொருட்களையும் நன்றாக சேர்த்து கொள்ளுங்கள். 12 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு காலையில் எழுந்ததும் இதை உங்கள் தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்ய வேண்டும். 2-3 மணி நேரம் ஊற வைத்து பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால் கண்டிஷனர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பேக்3 : முட்டை மற்றும் ஹென்னா பேக்

பேக்3 : முட்டை மற்றும் ஹென்னா பேக்

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர்

தண்ணீர் கலப்பதற்கு

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

2 டேபிள் ஸ்பூன் அடித்த முட்டையின் வெள்ளை கரு

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். தலையில் இருந்து கூந்தலின் நுனி வரை இதை அப்ளே செய்யவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால் கண்டிஷனர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பேக் 4: கடுகு எண்ணெய் மற்றும் ஹென்னா

பேக் 4: கடுகு எண்ணெய் மற்றும் ஹென்னா

தேவையான பொருட்கள்

250 மில்லி லிட்டர் கடுகு எண்ணெய்

இரண்டு கைப்பிடியளவு ஹென்னா இலைகள்

1 டீ ஸ்பூன் வெந்தயம்

ஒரு ஜார் அல்லது ஒரு பாத்திரம்

பயன்படுத்தும் முறை

இது பொடுகை போக்க பெரிதும் உதவுகிறது. நம் பாட்டி மார்கள் பெரும்பாலும் இந்த முறையைத் தான் மேற்கொண்டார்கள். எண்ணெய்யை நன்றாக சூடுபடுத்த வேண்டும். புகை வர ஆரம்பிப்பதற்கு முன் அடுப்பை அணைத்து விடுங்கள். அதில் மருதாணி இலைகள், வெந்தயம் போன்றவற்றை சேர்த்து ஆற விடவும். மருதாணி இலையின் நிறம் மாறும் வேண்டும். இந்த எண்ணெய்யை இரவு முழுவதும் அப்படியே வைத்து இருக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் ஒரு காற்று புகாத பாட்டிலில் இந்த எண்ணெய்யை வடித்து வைக்க வேண்டும். இதை தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். மைல்டு கண்டிஷனர் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னங்க! இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. இந்த ஹென்னா ஹேர் பேக்கிற்கு ஹாய் சொல்லி பொடுக்கு உடனே பாய் சொல்ல வேண்டியதானே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair dandruff பொடுகு
English summary

4 Nakaranjani Hair Packs To Cure Dandruff

Henna has been widely used for many years for its beneficial properties. It has been used as a natural color and for deep conditioning treatment for hair. It can also be used to get rid of the stubborn dandruff. I’ve listed a few packs that can help you control, if not eliminate the occurrence of dandruff. Henna, Lemon & Yogurt, Henna, Olive and Fenugreek Hair Pack, Egg and Henna Pack, Mustard Oil and Henna these are very useful for Dandruff.
Desktop Bottom Promotion