For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீழ ஊத்தற இந்த தண்ணி முடிய நீளமாவும் அடர்த்தியாவும் வளர வைக்கும் தெரியுமா?

இங்கே முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைப்பதற்கான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

உங்களுக்கு நீளமான அடத்தியான முடி உடைய பெண்களை பார்த்தால் பொறாமையாக உள்ளதா? கவலை வேண்டாம் செலவே இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என இங்கே காணலாம். உங்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த தண்ணீரை வெளியே ஊற்றாமல், அதை தலைமுடிக்கு பயன்படுத்தினால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி ஊற வைத்த தண்ணீர்

அரிசி ஊற வைத்த தண்ணீர்

சாதம் செய்வதற்காக நீங்கள் அரசியை ஊற வைப்பீர்கள், அரிசியை வடித்துவிட்டு மீதமுள்ள தண்ணீரை இதற்காக பயன்படுத்தலாம்.

இட்லி ஊற வைத்த தண்ணீர் என்றால் இன்னும் நன்றாக இருக்கும். ஏனெனில் இட்லிக்கு நாம் அரிசியை மிக நீண்ட நேரம் ஊற வைப்போம். இந்த நீர் கொஞ்சம் கெட்டியாக வளவளப்பாக இருக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

எப்படி பயன்படுத்தலாம்?

தலையை நன்றாக ஷாப்பு அல்லது சீகக்காய் போட்டு அலசிவிட வேண்டும். பின்னர் இந்த அரிசி ஊறவைத்த தண்ணீரை தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு நீரினால் தலையை அலசிவிட வேண்டும்.

கண்டிஸ்னர் தேவையில்லை

கண்டிஸ்னர் தேவையில்லை

இதனை கண்டிஸ்னருக்கு பதிலாக உபயோகிக்கலாம். இது முடியை மிருதுவாக மாற்றும். எனவே கெமிக்கல் கலந்த கண்டிஸ்னர்களை இனி உபயோகிக்க தேவையில்லை.

கஞ்சியையும் உபயோகிக்கலாம்

கஞ்சியையும் உபயோகிக்கலாம்

சாதம் வடித்த கஞ்சி இன்னும் கெட்டியாக இருக்கும். இது கிடைத்தாலும், நன்றாக ஆற வைத்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசிக்கொள்ளுங்கள். மீண்டும் ஷாம்பு போட்டு அலச கூடாது.

சத்துக்கள்

சத்துக்கள்

ஸ்டார்ச், விட்டமின் ஈ, ஆண்டி ஆக்சிடண்ட், மினரல், பிக்டிரா ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன.

பயன்கள்

பயன்கள்

இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடி நீளமாக வளர உதவுகிறது. சீக்கிரமாக முடிநரைப்பது தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

uses of rice water for thick hair

here are the some uses of rice water for long and thick hair
Desktop Bottom Promotion