For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

எல்லா வயதினரும் தற்போது ஷாம்பு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது இந்நேரத்தில் ஷாம்பு சரியான முறையில் பயன்படுத்த சில யோசனைகள்.

|

ஷாம்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என தலைக்கு விதவிதமாக சந்தைகளில் கிடைக்கும் ஷாம்புவை பயன்படுத்திவருகிறார்கள். அதிக வீரியமில்லாத ஷாம்பு, கண்டிஷ்னரும் சேர்த்து இருக்கிறது என என்னென்னவோ தேடித்தேடி வாங்கினால் அதனை பயன்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறது.

ஷாம்பு ஆண், பெண் மற்றும் வயது வித்யாசங்கள் இன்றி அனைவரும் பயன்படுத்த துவங்கிவிட்டோம். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்ற விடை தான் பெருவாரியாக வரும்.

பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்திவிட்டு ஷாம்பு சரியில்லை அதனால் தான் முடி கொட்டுகிறது என்ற புகார் பட்டியலையும் வாசிப்போம். உங்களுக்காகவே ஷாம்புவை பயன்படுத்தும் சில அற்புதமான டிப்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேர்கால்கள் :

வேர்கால்கள் :

ஹேர் ஷாம்பு என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப ஷாம்புவை உங்கள் முடியின் வேர்கால்களுக்கு படுமாறு ஷாம்பு வை தடவ வேண்டும். நுனிவிரலினால் தலையில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்க்ரப் :

ஸ்க்ரப் :

ஷாம்பு போடுவது என்பது தலையை மசாஜ் செய்வது அல்ல. மாறாக தலைமுடியை அதன் வேர்கால்களை ஸ்க்ரப் செய்வது போல கைவிரல்களால் அதனை அணுக வேண்டும்.

முக்கியமாக நகங்களை பயன்படுத்தக்கூடாது, அதிக எண்ணெய்ப்பசை இருந்தால் சிறிதளவு பேக்கிங் சோடா நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தலாம்.

கண்டிஷ்னர்:

கண்டிஷ்னர்:

பெரும்பாலும் ஷாம்பு பயன்படுத்திய பின்னர் கண்டிஷ்னர் போடுவது தான் வழக்கம். ஆனால் ஷாம்பு போடுவதற்கு முன்னர் ப்ரீ கண்டிஷ்னர் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.

ப்ரீ கண்டிஷ்னரை தலையில் தேய்த்து பத்துநிமிடங்கள் கழித்து நார்மல் ஷாம்பு பயன்படுத்தலாம்.

தலை சீவுவது :

தலை சீவுவது :

பொதுவாக ஷாம்புவில் அதிக நுரை வந்தால் தான் அது நல்ல ஷாம்பு என்று சொல்லப்படுகிறது. இது அல்ல, ஷாம்பு போடுவதற்கு முன்னால் முடியை நன்றாக சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ளுங்கள். இதனால் ஷாம்பு போடும் போது எளிதாக இருப்பதுடன் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.

டவல் :

டவல் :

ஷாம்பு போட்டு குளித்து முடித்ததுமே டவலைக் கொண்டு இருக்கமாக கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால் கூந்தலின் ஆரோக்கியம் குறையும், நீண்ட நேரம் ஈரமான தலையை இருக்க கட்டியிருப்பதால் தலைபாரம் ஏற்படும்.

ட்ரையர் :

ட்ரையர் :

ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் ஃபேன் காற்றிலோ அல்லது வெயிலிலோ முடியை காய வைப்பது தான் சிறந்தது.

ஒரே தீர்வு :

ஒரே தீர்வு :

உங்கள் தலைமுடியில் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் ஷாம்பு மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை,பணிச்சூழலுக்கு ஏற்ப தேவைகள் வேறுபடும்.

அதனால் ஷாம்புவை மட்டுமே குறை சொல்லாமல் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள். சரியான முறையில் முடியையும் பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Shampooing Your Hair The Right Way

Tips For Shampooing Your Hair The Right Way
Story first published: Tuesday, September 5, 2017, 17:52 [IST]
Desktop Bottom Promotion