For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேன் இருந்தால் முடி உதிர்வை ஈஸியா தடுக்கலாம்!

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட தேன் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

|

தேன் இயற்கை கொடுத்த வரம் என்றே சொல்லலாம். ஏனென்றால் தேன் கெட்டுப் போகவே போகாது. தேனில் எண்ணற்ற இயற்கையான தாதுக்கள் ஒளிந்திருக்கின்றன. சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. இதனைக் கொண்டே உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும்.

எல்லாருக்கும் தலைக்கு மேல இருக்கிற பிரச்சனை என்றால் அதில் நிச்சயம் தலைமுடிப் பிரச்சனையும் இடம்பெற்றிருக்கும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் தலைமுடி அதிகமாக பாதிக்கப்படுகிறது.

How to use honey for hair?

முடிக்குத் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்தே கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றை நாம் தவிர்த்து விடுகிறோம். இதனால் தனக்கு தேவையான சத்து கிடைக்காமல் முடி வலுவிழந்து உதிர்வது தொடர்கிறது.

எண்ணற்ற மருந்துகளை தடவியும் வாரம் ஒரு முறை பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றிப்பார்த்தும் தலைமுடி உதிர்வது மட்டும் தொடர்கிறது என்ற கம்ப்ளைண்ட்டை வாசித்துக் கொண்டேயிருக்கிறீர்களா அப்போ இதனை கண்டிப்பாக படியுங்கள். தலைமுடிக்கு ஊட்டமளிக்க ஒரேயொரு விஷயத்தை செய்தால் போதும். வீட்டிலிருக்கும் பொருளைக் கொண்டே தலைமுடியை நாம் பராமரிக்கலாம். தலைமுடிக்கு ஏற்படும் என்ன மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் சரி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் தலைமுடிக்கு பயன்படுத்தலாமா?

தேன் தலைமுடிக்கு பயன்படுத்தலாமா?

இந்த கேள்வி பலருக்கும் இருக்கிறது. தேன் ஒரு இனிப்பு பண்டம். தேன் தலையில் தேய்த்தால் சரியான முறையில் தலைக்குளிக்க வேண்டும் இல்லையென்றால் தலை அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு அதோடு எறும்பு பயமும் உண்டு. அதனால் தான் தேனை தலையில் தேய்க்ககூடாது என்று சொல்லி வைத்தார்கள்.

வரண்ட முடி :

வரண்ட முடி :

தேனில் முடிக்கு ஊட்டம் அளிக்ககூடிய தாதுக்கள் நிறையவே இருக்கின்றன. இது தலைக்கு பாதுகாப்பான ஒரு லேயரைக் கொடுக்கிறது. இதனால் வெளியிலிருந்து மாசுக்களால் முடி எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

இதனால் முடி வரண்டு போவது தவிர்க்கப்படுகிறது. தேனில் இருக்கும் நியூட்ரியன்கள் மற்றும் என்சைம்கள் முடியின் வேர்களுக்கு சக்தியளிக்கிறது. இதனால் முடி உதிர்வும் தவிர்க்கப்படும்.

அரை கப் தூய தேனை எடுத்துக் கொள்ளுங்கள். கெமிக்கல் கலக்கப்பட்ட தேனென்றால் ஜாக்கிரதை.

அதில் சிறிதளவு தண்ணீரைக் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள், முக்கியமாக முடியின் வேர்கால்களுக்கு தேன் பட வேண்டும். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசலாம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டே தலைக்குளிக்கலாம்.

தேன் மற்றும் முட்டை :

தேன் மற்றும் முட்டை :

முட்டையில் எண்ணற்ற ப்ரோட்டீன் இருக்கிறது. இவை தலைமுடியை வலுவாக்கும். அதோடு முடி உடைதலிருந்து பாதுகாக்கும். மஞ்சள் கருவில் இருக்கும் விட்டமின் ஏ தலையை வரண்டு விடாமல் செய்திடும்.

முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து தலையில் ஹேர் மாஸ்க்காக போட்டுங்கள்.

ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும் தலைக்குளிக்கலாம். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

தேன் மற்றும் வாழைப்பழம் :

தேன் மற்றும் வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் அதிகப்படியான மினரல்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. இது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்திடும். இதனை செய்வதால் தலைமுடிக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இரண்டு டீஸ்ப்பூன் தேன் சேர்த்திடுங்கள். இந்த கலவை நன்றாக கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். வேண்டுமானால் விரைவில் காய்ந்திடாமல் இருக்க ஷவர் கேப் போட்டுக் கொள்ளலாம்.

 தேன் மற்றும் பால் :

தேன் மற்றும் பால் :

ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ப்ரோட்டீன் பாலில் நிறைந்து காணப்படுகிறது. இது முடிக்கு சிறந்த கண்டிஷனராகவும் விளங்குகிறது இது முடிக்கு போஷாக்கு அளித்து முடி உதிர்வை தவிர்க்கச் செய்கிறது.

கொழுப்பு நிறைந்த பால் ஒரு கப் மூன்று டேபிள் ஸ்பூன் தேன் நன்றாக கலந்து ஹேர் மாஸ்க்காக போட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்குளிக்க வேண்டும்.

தேன் மற்றும் தயிர் :

தேன் மற்றும் தயிர் :

தயிரில் இருக்கும் ப்ரோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது அதே போல தயிரில் அதிகம் காணப்படும் ஆண்ட்டி ஃப்ன்கல் பொடுகை அறவே ஒழித்திடும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை மிக்ஸ் செய்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் முடியை ஒவ்வொரு லேயராக பிரித்து இந்த கலவையை தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன் மற்றும் லெமன் :

தேன் மற்றும் லெமன் :

எலுமிச்சை சாற்றில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது முடியை வலுவாக்கும். அதோடு இது முடியை சாஃப்டாக்கிடும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி உதிராது. இரண்டு டேபிள் ஸ்பூன் தேனுடன் ஒரு எலுமிச்சம்பழச்சாறு அப்படியே பிழிந்திடுங்கள்.

இந்த கலவையை கொண்டு தலையில் லேசாக மசாஜ் செய்திடுங்கள். பத்து நிமிடங்கள் செய்தால் போதுமானது. பின்னர் தலைக்குளித்துவிடலாம்.

தேன் மற்றும் தேங்காய் பால் :

தேன் மற்றும் தேங்காய் பால் :

தேங்காயில் பொதுவாக எண்ணெய்ப் பசை இருக்கும். இது முடியை வரண்டு விடாமல் பாதுகாக்கும். இதிலிருக்கும் மேக்னீசியம் முடி உடைவதை குறைக்கும்.

அரைகப் தேங்காய் பாலுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள்.பின்னர் இதனை தலையில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழிவிடலாம்.

தேன் மற்றும் ஆலிவ் ஆயில் :

தேன் மற்றும் ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலில் விட்டமின் இ நிறைய இருக்கிறது,. இது முடி வளர்ச்சிக்கு உதவிடும்.

இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து தலையில் மசாஜ் செய்திடுங்கள். அரை மணி நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஷாம்பு போட்டு தலைக்குளித்திடுங்கள்.

தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் :

தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. தலை முடி வரண்டிருந்தால் சாஃப்ட் ஆக்கிடும். முடிக்கு பளபளப்புத் தன்மை கொடுத்திடும்.

எட்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் அரை கப் தேன் கலந்து தலையில் தடவுங்கள் அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம். வாரத்தில் மூன்று முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை :

கவனிக்க வேண்டியவை :

முடியை உதிராமல் தடுக்க தேனை பயன்படுத்துவதற்கு முன்னால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சந்தைகளில் கிடைக்கும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேனை விட சுத்தமான தேன் வாங்க வேண்டும்.

தேன் ஹேர் பேக் போட்டு கழுவிய பின்னர் உடனேயே அதிக வெயிலில் செல்லக்கூடாது. நேரடியாக சூரிய ஒளி தலையில் படாதவாறு செல்ல வேண்டும். இந்த ஹேர் பேக் எல்லாம் போடுவதற்கு முன்னர் தலையை லேசாக ஈரமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஹேர் பேக் எளிதாக பரவும்.

தலைக்குளிக்கும் போது சாதரண தண்ணீரை பயன்படுத்துவதே நல்லது வேண்டுமானால் லேசாக சூடாக்கப்பட்ட நீரை பயன்படுத்தலாம் சூடான நீரை பயன்படுத்தினால் தலை வரண்டிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use honey for hair?

How to use honey for hair?
Story first published: Saturday, October 14, 2017, 15:56 [IST]
Desktop Bottom Promotion