For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமாக கூந்தலை பராமரிக்க ஆறு முக்கிய விதிகள்!

தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தீர்வு காணலாம்.

|

முடியின் வேர்கால்கள் நன்றாக இருந்தால் மட்டுமே தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையை சரியாக பராமரிக்காவிட்டால் தலையில் அரிப்பு தோன்றிடும். இதனால் பொடுகுத் தொல்லை ஏற்படவும் காரணமாக அமைந்திடும். சிலர் அரிப்புக்கான காரணம் தெரியாமல் நீங்களாகவே எதாவது கற்பனை செய்து சிகிச்சை எடுக்காமல் இருப்பதாலும் தலைமுடி அதிகமாக கொட்டும்.

Home remedies for itchy scalp

தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பது நல்லது. எண்ணெய் வைக்க முடியாதவர்கள், வாரம் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும், தலைமுடி வரண்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உங்களின் பராமரிப்பே மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ ட்ரீ ஆயில் :

டீ ட்ரீ ஆயில் :

டீ ட்ரீ ஆயிலில் அதிகப்படியான ஆண்ட்டிமைக்ரோபியல் மற்றும் பாதிப்படையும் செல்களைக் கட்டுப்படுத்தும் துகள்கள் இருக்கிறது. இவை தலையின் அரிப்பை கட்டுப்படுத்தும். அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயுடன் நான்கைந்து சொட்டுகள் டீ ட்ரீ ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழைசெடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லினால் சருமத்தை மட்டுமல்ல தலைமுடியையும் நன்றாக பராமரிக்கலாம். இதில் விட்டமின் ஏ, சி, இ போன்றவை இருக்கிறது. இதைத் தவிர கால்சியம், மக்னீசியம் ஜிங்க், பொட்டாசியம் செல்னியம் உட்பட பல தாதுக்கள் இருக்கின்றன.

இவை தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும். அதிகம் வரண்டு விடாமல் பாதுகாக்கும். வறட்சி இல்லாததால் தலையின் அரிப்பு குறையும்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

தலைக்கு குளித்த பிறகு ஆப்பிள் சிடர் வினிகரைக் கொண்டு தலையை அலசினாள் தலைமுடி மிருதுவாக இருக்கும். அதோடு இது தலையின் வேர்கால்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கிடும்.

பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் இன்ஃபெக்‌ஷனையும் இது குறைப்பதால் இதைப் பயன்படுத்தினால் அரிப்பு குறையும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி சுமார் அரை மணி நேரம் மசாஜ் செய்த பிறகு தலைக்குளிக்கலாம் .

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிபினால் அடங்கியிருக்கிறது. இதனை தலையில் தேய்த்து வர தலைமுடி ஆரோக்கியமாக வளர்ந்திடும். ஒரு கப் சுடான நீரில் க்ரீன் டீ பேக் இரண்டு அல்லது மூன்று போடுங்கள். அது நன்றாக ஆறியதும் அதனை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து மசாஜ் செய்து பின்னர் தலையை அலசலாம்.

மஞ்சள் :

மஞ்சள் :

பாக்டீரியாக்களை ஒழிக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சளை நாம் சருமத்திற்கு பயன்படுத்தியிருப்போம்.இதனை நம் முடிக்கும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் இரண்டு ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள்.

அதனை தலையில் படுமாறு ஹேர் பேக்காக போட்டுக் கொண்டு 20 நிமிடங்கள் காத்திருந்து வெது வெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

இதில் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் நிறையவே இருக்கிறது. தலையில் ஸ்ப்ரெ செய்து கொள்ளலாம். முதலில் எலுமிச்சை சாறை தண்ணீரில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அதன் பிற்கு அரை மணி நேரம் கழித்து தலையில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இது தலையில் எண்ணெய் பிசுக்கினால் வரும் நாற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

பாக்டீரியா தொற்றையும் அகற்றுவதால் அரிப்பு இருந்தால் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies for itchy scalp

Home remedies for itchy scalp
Story first published: Monday, September 25, 2017, 16:14 [IST]
Desktop Bottom Promotion