Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!
இன்றைக்கு இளநரை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது அதனை எளிதாக தீர்க்க வழிகள்
இன்றைக்கு இளநரை என்பது சர்வ சாதரணமாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம் போன்றவற்றால் இளநரை பலருக்கும் வருகிறது. அதனை மறைக்க ஹேர் டை பயன்படுத்துகிறவர்கள் அதிலிருக்கும் கெமிக்கல் பாதிப்பினை உணராமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கெமிக்கல் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஆர்கானிக் முறையில் வீட்டிலேயே எளிதாக ஹேர் டை தயாரிக்கலாம். அதனால் என்னென்ன நன்மைகள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

இயற்கையான ஹேர் டை :
கெமிக்கல் ஹேர் டைக்கு மிகச் சிறந்த மாற்று என்றே சொல்லலாம். கெமிக்கல் ஹேர் டையை குறுகிய காலம் மட்டும் நிறம் கொடுக்கும் என்றாலும் அதனால் ஏற்படும் தீங்கு நீண்ட காலத்திற்கு பின் தொடரும்.
இயற்கையான ஹேர் டையில் பூக்கள், இலைகள், பழங்கள், வேர்கள் என இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கெமிக்கல் ஹேர் டைகளில் இருக்கும் பெராக்ஸைடு, பாராபீன்ஸ்,அமோனியா போன்ற எந்த கெமிக்கலும் இதில் சேர்க்கப்படுவதில்லை.
உங்களுக்குப் பிடித்த வண்ணங்களிலும் முடியை இயற்கையான முறையில் கலரிங் செய்து கொள்ளலாம்.

சிகப்பு :
ஒரு கப் பீட்ரூட் ஜூஸ், அரை கப் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து தலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். ரோஸ் நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறம் வரும்.

டார்க் பிரவுன் :
இரண்டு டேபிள் ஸ்பூன் காபி பவுடர் அரை கப் தண்ணீர் . தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த காபி பவுடரை போடுங்கள். அவை பாதியாக குறையும் அளவுக்கு வற்றியதும் இறக்கிவிடலாம். பின்னர் அதனை நன்றாக ஆறியதும் தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம்.
கருப்பு நிறம் வேண்டுபவர்கள் காபி த்தூளுடன் டீத்தூளையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பு :
ஆப்பிள் சீடர் வினிகர் அரை கப்,சோயா சாஸ் அரை கப் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் பயன்படுத்துவதற்கு முன்னதாக தலை குளித்திருக்க வேண்டும். சுத்தமாக இருக்கும் போது இதனை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த கலவையை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். லேசாக அப்ளை செய்தாலே போதுமானது. பின்னர் அப்படியே காயவைக்கலாம். இன்னொரு முறை தலைக்குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இவற்றைத் தவிர மருதாணி அரைத்து பூசிக் கொள்வது, செம்பருத்தி பூ, மாதுளம் பழம்,குங்குமப்பூ போன்றவையும் தலைக்கு பயன்படுத்தலாம்.

நன்மைகள் :
இயற்கையான பொருட்களைக் கொண்டு நீங்களே எளிதாக வீட்டில் தயாரிக்க முடியுமென்பதால் இதில் கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்குமோ அல்லது இது நமக்கு சேருமா என்ற ஐயம் கொள்ளத் தேவையில்லை.
இது எல்லா வகை முடி இருப்பவர்களுக்கும் சேரும். அதோடு முடிக்கு தேவையான சத்துக்களும் கிடைப்பதால் முடி அதிகம் உதிராது ஆரோக்கியத்துடன் வளரும்.



Click it and Unblock the Notifications