For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் உதிர்வதை தடுக்கும் சூப்பர் உணவுகள்!

By Hemi Krish
|

ஒருவர் ஆரோக்கியமானவர் என்பதை அவரது கூந்தல் கொண்டே தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான உணவு முறையில் நன்றாக வளரச் செய்யலாம்.

 Super foods to grow your hair long

முடி வளரத் தேவையான சத்துக்கள் :

விட்டமின் ஏ,சி, ஈ,பி5 , பி6, பி12 மற்றும் இரும்பு சத்து,ஜிங்க், புரோட்டின், அமினோ அமிலங்கள் ஆகியவை முடி வளரத் தேவையான சத்துக்களாகும். நீங்கள் முடி வளர விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் பயன்படுத்தினாலும் அவை வெளிபுறத்தில் காக்குமே தவிர, உள்ளிருந்து ஊட்டம் தர அதற்கு தேவையான சத்துக்கள் கொண்ட உணவினை உண்டால்தான் கூந்தல் வளரும்.

முட்டை:

முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.

சால்மன் மீன்:

சால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு , பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாம வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும்.முடி உதிர்வதை தடுக்கிறது.

மாட்டிறைச்சி:

மாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவரகள் சாப்பிடக்கூடாது.

பீன்ஸ் :

பீன்ஸில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. அதோடு விட்டமின் பி, சி,கனிமங்களையும் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் அனைத்துமே மிக நல்லது. கிட்னி பீன்ஸ் , சோயா பீன்ஸ் , கருப்பு பீன்ஸ் ஆகியவைகள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.

நட்ஸ் :

பருப்புவகைகளில் அதிக அளவு புரோட்டின்,விட்டமின், மினரல் உள்ளன.இவைகளை தினமும் உண்டால் டல்லடிக்கிற கூந்தல் டாலடிக்கும் . பாதாம்,பீ நட்ஸ் ,வால் நட்,முந்திரி ஆகியவ்ற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஊற வைத்த பாதாம் மிகவும் நல்லதாகும்.

பசலைக் கீரை:

பசலைக் கீரையில் , விட்டமின் ஈ,பி,மற்றும் சி ஆகியவைகளையும், பொட்டாசியம்,இரும்பு,மெக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளது. இவை முடிகளை வேகமாக வளரவும்,கருமையான நிறத்திலும் வளர தேவையான சத்துக்கள். அன்றாடம் உணவில் சேர்க்கக் கூடிய உணவு வகை.

ஓட்ஸ் :

ஓட்ஸில் விட்டமின் பி யும், தாதுப் பொருட்களும் கொண்டுள்ளன. முடி வளரத் தேவையான பொட்டாசியம்,பாஸ்பரஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. தினமும் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் நாளடைவில் முடி நன்றாக வளர்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.

கேரட் :

கேரட் பீட்டா கரோட்டினைக் கொண்டுள்ளது. அது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. கேரட்டை எவ்வகையிலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸாகவோ,சாலட்டாகவோ சமைத்தோ, எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கூடிய மட்டும் பச்சையாக கேரட்டை உண்பது பீட்டா கரோட்டினை உடலுக்கு முழுவதும் கிடைக்கச் செய்கிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.அதனை சாப்பிடும்போது கரோட்டின் , விட்டமின் ஏ வாக மாறிவிடும். விட்டமின் ஏ கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதாகும்.சர்ர்கரை வள்ளிக் கிழங்கினை வேக வைத்தோ அல்லது வேறு விதமாகவோ சாப்பிடலாம்.

English summary

Super foods to grow your hair long

Foods you need to prevent hair loss..Read here
Desktop Bottom Promotion