For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க

By Hemalatha
|

வில்லென வளைந்த புருவம் என்று புருவ அழகையும் பாடாம,ஆதி காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எந்த கவிஞரும் இருந்ததில்லை. அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் கண்களை இன்னும் அழகாத்தானே காட்டும்.

கண்கள் அழகா இருந்து புருவம் சரியாவே இல்லையென்றால், அது கண்களின் அழகையும் குறைக்கும். அதுமட்டுமில்லாமல், கண்களுக்கு தூசி வராம பாத்துக்கிற பாதுகாவலனா புருவமும் இருக்கிறது.

Home remedies to get thicker eyebrows

அந்த புருவங்கள் அழகாய் அடர்த்தியாய் சீராய் வளர என்ன செய்ய வேண்டும். இதைப் படியுங்கள். தெரிந்து கொள்வீர்கள்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் கூந்தல் வளர அருமையான எண்ணெய். அவ்வளவு எளிதில் வளராத புருவத்திலும் மேஜிக் செய்யும் மந்திரம் விளக்கெண்ணெய்க்குதான் தெரியும்.

தினமும் இரவு தூங்கும் முன் விளக்கெண்ணெயை வில்போன்று புருவத்தில் தேயுங்கள். தொடர்ச்சியாய் இரண்டு மாதங்கள் செய்தால் உங்கள் புருவ அழகினை ரசிப்பதற்கு உத்திரவாதம் அளிக்கலாம்.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் மெலிதான சருமத்தில் வேகமாக முடி வலர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனை இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்யுங்கள்.

இன்னொரு முறை, நீர் கலக்காத தேங்காய் பால் எடுத்து அதனை வாணிலியில் காய்ச்சுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். பின் பால் சுண்டி, எண்ணெய் பதத்திற்கு வரும். அதனை எடுத்து புருவத்தில் பூசி வர வேகமாய் புருவத்தில் முடி வளரும்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ அதிகம் உல்ளது. அது சருமத்திற்கு அடியில் இருக்கும் வேர்கால்களை நன்ராக தூண்டும். பாதாம் எண்ணெயை காலையில் மற்றும் மாலையில் புருவத்தில் பூசி வர, நாளடைவில் அழகான புருவம் கிடைக்கும்.

வெங்காயச் சாறு :

வெங்காயச் சாறு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த வெங்காய சாற்றினை ஒரு பஞ்சினால் நனைத்து புருவத்தில் தடவுங்கள். தினமும் இரவு இவ்வாறு செய்தால், புருவத்தில் ஏற்படும் சொட்டைகள் கூட மறைந்து சீராக முடி வளரும். அடர்த்தியாகவும் கானப்படும்.

பால் :

பாலில் இயற்கையாகவே மாய்ஸ்ரைஸர் உள்ளது. அதிலுள்ள புரோட்டின் சத்துக்கள் புருவத்தில் வேர்க்கால்களை தூண்டுகின்றன. தினமும் பாலினை புருவத்தின் மேல் தடவி இதமாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் புருவத்தில் முடி வளர்வைதை கண்கூடாக பார்ப்பீர்கள்.

சோற்று கற்றாழை :

சிலருக்கு தலையில் இருக்கும் பொடுகு உதிர்ந்து புருவத்திற்கு வரும். இதனால் அங்கேயும் தொற்று ஏற்பட்டு, புருவத்தில் முடி உதிர்ந்து, புருவமே இல்லாமல் வெறுமனே காணப்படும்.

இதற்கு நல்ல தீர்வு சோற்ற்க் கற்றாழை ஆகும். சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியை எடுத்து, புருவத்தில் பூசுங்கள். அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி, முடி வளர ஆரம்பிக்கும்.

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெயை புருவத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். தினமும் இப்படி செய்தால் விரைவில் இதற்கு தீர்வு காணலாம்.

வெந்தயம் :

வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், லெசிதின் போன்ற விட்டமின்களும், புரொட்டினும் உள்ளன. அவை சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும். வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, மறு நாள் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். அதனை இரவில் புருவத்தில் பூசி வர வேண்டும். ஒரு மாதத்தில் புருவம் அடர்ந்து இருக்கும்.

எலுமிச்சை தோல் :

எலுமிச்சை சாற்றினை உபயோகப்படுத்தியதும், அதன் தோலினை வீசி எறியாதீர்கள். அது புருவ வளர்ச்சியை அதிகரிக்கச் செயும் சத்துக்களைக் கொண்டுள்ளது. எலுமிச்சைத் தோலினை தினமும் உங்கள் புருவத்தில் தடவி வாருங்கள். அருமையான ரிசல்ட் தரும்.

முட்டையின் மஞ்சள் கரு :

பெரும்பாலும் முட்டையின் வெள்ளைக் கருவே அழகுக் குறிப்பிற்கு உபயோகப்படுத்தி இருப்பீர்கள். மஞ்சள் கருவும் நிறைய பயன்களைத் தரும். முட்டையின் மஞ்சள் கருவினை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் இரவில் புருவத்தின் மீது பூசுங்கள். நாளடைவில் புருவம் அடர்த்தியாக வளரும்.

English summary

Home remedies to get thicker eyebrows

Home remedies to get thicker eyebrows
Desktop Bottom Promotion