For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா?

ஆண்கள் தங்களுக்கு சுயஇன்பம் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் சுயஇன்பம் கண்டால் தலைமுடி உதிரும் என்பது தெரியுமா? அதுக்குறித்து தான் இங்கு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

|

தலைமுடி உதிர்வதற்கு சுயஇன்பம் ஓர் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா? இது உண்மை தானா என்று பலமுறை கேட்பீர்கள். ஆனால் அது உண்மை தான். ஆண்கள் தங்களுக்கு சுயஇன்பம் பற்றி அனைத்து விஷயமும் தெரியும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் சுயஇன்பம் குறித்து ஏராளமான அதிர வைக்கும் விஷயங்கள் உள்ளன.

Does Masturbation Cause Hair Loss?

நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவும் இச்செயலால் நன்மைகளையும், அதே சமயம் தீமைகளையும் பெறக்கூடும். ஆனால் அதுவெல்லாம் எவ்வளவு முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. அதில் சுய இன்பத்தால் பெறும் ஓர் பக்கவிளைவு தான் தலைமுடி உதிர்வது. இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடி உதிர்வு மற்றும் சுயஇன்பம்

தலைமுடி உதிர்வு மற்றும் சுயஇன்பம்

பொதுவாக ஆண்கள் தங்களது தலைமுடி மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். சமீப காலமாக உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறது என்றால், அதற்கு சுயஇன்பமும் ஓர் காரணமாக இருக்கலாம் என்பதை மறவாதீர்கள்.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

நிறைய நிபுணர்கள் சுயஇன்பத்திற்கும், தலைமுடி உதிர்வதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் அதை மறுக்கிறது. சுய இன்பத்திற்கும் தலைமுடி உதிர்வதற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

விந்து

விந்து

ஆயுர்வேதத்தின் படி, விந்து நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். ஒருவர் அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் காணும் போது, சத்துக்கள் வெளியேற்றப்பட்டு, உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் வெளியேறிவிடும்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

அதிகமாக சுயஇன்பம் காணும் போது, உடலில் இருந்து சத்துக்கள் வெளியேறி, உடல் பலவீனமாவதுடன், தலைமுடி உதிர்வு, முதுகு வலி, இடுப்புப்பகுதியில் வலி, வளைந்த ஆண்குறி போன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையைக் கூட ஏற்படுத்தும்.

DTH

DTH

சுயஇன்பத்திற்கு பின், உடலில் உள்ள ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆண் விதைப்பையில் DTH ஆக மாற்றப்படும். பலமுறை சுயஇன்பம் கண்டால், அதனால் ஆண் விதைப்பையில் DTH அளவு அதிகமாகி, அந்த DTH ஸ்கால்ப்பில் உள்ள மயிர்கால்களைத் தாக்கி, மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறாமல் செய்யும்.

எண்ணெய் பசை ஸ்கால்ப்

எண்ணெய் பசை ஸ்கால்ப்

DTH தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, தலையை எண்ணெய் பசையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் DTH கார்டிசோல் உற்பத்தியைத் தூண்டி, புரோலாக்டின் அளவை அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும்.

புரோட்டீன் குறைபாடு

புரோட்டீன் குறைபாடு

சுயஇன்பத்தால் தலைமுடி உதிர்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது அதிக சுயஇன்பம் காணும் போது, விந்து அதிகமாக வெளியேற்றப்பட்டு, உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

தீர்வு

தீர்வு

சுயஇன்பத்தால் தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால், கட்டுப்பாடு அவசியம். இது சற்று கடினமானது தான். இருந்தாலும், சுயஇன்பம் காண்பதைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை தினமும் பின்பற்ற வேண்டும். மேலும் பாலுணர்வைத் தூண்டும் அனைத்து விஷயத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Masturbation Cause Hair Loss?

There are lot of things that you will be shocked to know about masturbation. The main side effects attached to this safe and wonderful sex is hair loss. Read on to know more...
Desktop Bottom Promotion