For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப ஆரஞ்சு பழத்தை யூஸ் பண்ணுங்க...

By Maha
|

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தின் சீசன் என்பதால், இந்த பழங்கள் மிகவும் விலை மலிவில் கிடைக்கும். ஆகவே பலர் இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். அதற்கேற்றாற் போல் இப்பழத்தில் சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதுடன், இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, வலுவுடன் இருக்கும்.

என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே ஆரஞ்சு பழத்தைக் கொண்டு கூந்தலைப் பராமரித்துப் பாருங்கள், பின் தெரியும் ஆரஞ்சு பழத்தின் சக்தி. அதிலும் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த ஆரஞ்சுப் பழத்தை பயன்படுத்தினால், உடனே அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சரி, இப்போது கூந்தலுக்கு ஆரஞ்சு பழத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பயோ ப்ளேவோனாய்டுகள் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும், இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட்டும் உள்ளது.

ஹேர் கண்டிஷனர்

ஹேர் கண்டிஷனர்

ஆரஞ்சு பழ சாற்றில் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, ஷாம்பு போட்டு குளித்த பின்னர், கூந்தலில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து அலசினால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று கூந்தல் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

வலுவான கூந்தல்

வலுவான கூந்தல்

கூந்தல் வலுவாக இல்லாவிட்டாலும், கூந்தலானது எளிதில் உதிரும். எனவே இதனை வலுவாக்க ஆரஞ்சு பழச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

பட்டுப் போன்ற கூந்தல்

பட்டுப் போன்ற கூந்தல்

கூந்தல் அடர்த்தியாகவும், பட்டுப் போன்றும் இருக்க வேண்டுமானால், ஆரஞ்சு பழத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு ஆரஞ்சு பழச் சாற்றுடன், பால் அல்லது தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

ஆரஞ்சு பழத்தின் தோல் பொடுகுத் தொல்லைக்கு ஒரு நல்ல நிவாரணத்தை அளிக்கும். எனவே ஆரஞ்சு பழத்தின் தோலை பேஸ்ட் போல் அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்

கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்

ஆரஞ்சு பழத்தின் தோல் ஸ்கால்ப் மற்றும் கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை இரவு படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த நீரைக் கொண்டு கூந்தலை மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

நறுமணமிக்க கூந்தல்

நறுமணமிக்க கூந்தல்

கூந்தலில் நல்ல நறுமணம் எப்போதும் இருக்க வேண்டுமானால், ஆரஞ்சு சாறு கொண்டு மசாஜ் செய்து அலசுங்கள். இதனால் கூந்தலில் நீண்ட நேரம் நறுமணம் நிலைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Benefits Of Using Oranges

Apart from being rich in Vitamin C which makes it good for the skin, oranges are also rich in essential nutrients which strengthens the hair. There are many hair benefits of oranges. Here are some amazing hair benefits of oranges which makes it a perfect citrus fruit for beauty.
Story first published: Saturday, January 4, 2014, 13:02 [IST]
Desktop Bottom Promotion