Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
கூந்தல் வறட்சியைத் தடுக்கும் சில ஹேர் மாஸ்க்குகள்!
நமது தலை முடி நீளமோ அல்லது குட்டையோ, நேரானதோ அல்லது சுருட்டை முடியோ, பெண்கள் அனைவருக்குமே மென்மையான பட்டு போன்ற ஆரோக்கியமான கேசத்தை பெறுவதே கனவாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அனைவராலும் தங்கள் கனவான சிறப்புகளுடன் கூடிய தலை முடியை அடைய முடிவதில்லை.
மாசு வானிலை, ஈரப்பதம், வெப்பத்தை பயன்படுத்தி முடியை ஸ்டைலாக்குதல், தொடர்ச்சியான இரசாயன பயன்பாடு மற்றும் தவறான உணவு பழக்கம் ஆகியவை, நமது தலை முடியிலுள்ள இயற்கையான எண்ணெய் பசையை அகற்றி, நமது கேசத்தினை எளிதில் உடையக்கூடிய, வறண்ட கேசமாக்குகின்றன.
இதுப்போன்று வேறு: முடி கொட்டுதலைக் கட்டுப்படுத்தும் சில டயட் டிப்ஸ்...
வறண்ட ஆரோக்கியமற்ற கேசம் முடி முதிர்விற்கும், அதிகமான முடி உதிர்விற்கும் வழிவகுக்கிறது. நமது தலை முடியை மீண்டும் மென்மையான பளபளப்புடன் கூடிய முடியாக மாற்ற எண்ணற்ற வழிகள் உள்ளன. தொழில் முறை ஸ்பா மையத்திலும், சலூனிலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய விரும்பாதோர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள, பயனுள்ள பிரத்யேகமான குறிப்புகளை முயன்று பார்க்கலாம்.

கடலை மாவு பேக்
* காய்ச்சாத பால் அல்லது தேங்காய் பால் ஒரு கப் எடுத்து கொள்ளுங்கள்.
* இதில் 2-3 தேக்கரண்டி கடலை மாவினை சேருங்கள்.
* இந்த கலவையை நன்றாக கலந்து பசை போல தயார் செய்யுங்கள். இதனை தலைமுடியில் குறிப்பாக தலை முடியின் நுனி பகுதியில் அதிக கவனத்துடன் தடவுங்கள்.
* 15 நிமிடங்களுக்கு பிறகு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள்.

அத்தியாவசிய எண்ணெய்கள்
வறண்ட தலை முடிக்கான பராமரிப்பு குறிப்புகள் பல உள்ளன. ஆனால் பழமையான, அதே நேரத்தில் அதிகம் பரிந்துரைக்கப்படுகிற குறிப்பு யாதெனில், அது அத்தியாவசிய எண்ணெய்களின் பயன்பாடு.
* தேங்காய் எண்ணெயையும் பாதாம் எண்ணெயையும் சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதில் அரை தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் சேருங்கள்.
* மேலும் சில அத்தியாவசிய எண்ணெய்களான லாவண்டர் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை சேருங்கள்.
* இதனை மிதமாக சூடுப்பபடித்தி தலையின் மேல்பாகத்தில் மசாஜ் செய்யுங்கள். மென்மையான ஷாம்பூவை கொண்டு அலசுங்கள்.
* இந்த சூடான எண்ணெய் மசாஜ் தலை முடிக்கு ஈரப்பதத்தைத் தரும். மேலும் தலையின் மேல் பாகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

தலை முடியை தேன் கொண்டு அலசுங்கள்
தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது தேன் ஈரப்பதத்தை ஈர்த்து தக்க வைக்கிறது. இந்த குறிப்பை பயன்படுத்தி தலை முடியை அலசும் போது, எளிதில் உடைய கூடிய நமது வறண்ட கேசத்திற்கு உடனடியான ஈரப்பதம் கிடைக்கிறது.

முட்டை பேக்
முட்டையின் மஞ்சள் கருவில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இயல்பாகவே முட்டை ஈரப்பதத்தை தக்க வைக்கும் இயல்புடையது. அதே போல் மூட்டையின் வெள்ளை கருவில் நிறைந்துள்ள பாக்டீரியா உண்ணுன் என்சைம்கள் தேவையற்ற எண்ணெய் பசையை அகற்றுகின்றன. இது நமது வறண்ட, எளிதில் உடையும் தன்மை கொண்ட, கூந்தலுக்கு ஈரப்பதம் வழங்குகிறது.
* முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து அடித்து க்ரீம் போன்ற கலவையை தயார் செய்யுங்கள்.
* இதில் ஒரு தேக்கரண்டி தயிரையும் தேனையும் சேருங்கள்.
* இதனை நன்றாக கலந்து முடியின் முழு நீளத்திற்கும் தடவுங்கள்.
* ஷாம்புவைப் பயன்படுத்தி குளிர்ந்த நீரால் அலசுங்கள்.

மயோனைஸ் பேக்
மாயோனைஸில் எல்-சிஸ்டேன் அடங்கியுள்ளது. கூந்தலுக்கு வலிமை பளபளப்பு, அடர்த்தி ஆகியவற்றை தரவல்ல எல்-சிஸ்டேன் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது வறண்ட மற்றும் அதிக சேதமடைந்த கூந்தலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
* அரை கப் மயோனைஸை எடுத்து அடித்து வைத்து கொள்ளுங்கள். அதனை கூந்தலின் நீளம் முழுமைக்கும் தடவுங்கள். குறிப்பாக அதிக சேதமடைந்த முடியின் பாகங்களில் அதிக கவனம் செலுத்தி தடவுங்கள்.
* இப்போது தலையை ஷவர் குளியலுக்கு பயன்படுத்தும் ஒரு தொப்பியை கொண்டு 30 நிமிடங்களுக்கு மூடி வையுங்கள்.
* வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவை உபயோகித்து குளிர்ந்த நீரினால் அலசுங்கள்.

தலை முடியை பீரை பயன்படுத்தி அலசுங்கள்
பீர் சிறப்பான கண்டிஷனிங் செய்யும் பண்பினை தன்னுள் கொண்டுள்ளது. இது வறண்ட, ஒளியிழந்த கேசத்திற்கு, ஆரோக்கியதுடான் கூடிய பிரகாசத்தை வழங்குகிறது. பீரில் அடங்கியுள்ள வைட்டமின் பி பளபளப்புடன் கூடிய மென்மையான முடியை வழங்குகிறது.
* அரை கப் வீரியம் குறைந்த பீரில் 2 கப் நீரை சேருங்கள்
* பின் ஷாம்புவை பயன்படுத்துங்கள் கடைசியாக பீரை பயன்படுத்தி அலசுங்கள்.
* பீரை பயன்படுத்திய பிறகு முடியை மீண்டும் அலச வேண்டாம். தலைமுடியை இயல்பாக உலர அனுமதியுங்கள்.

பேக்கிங் சோடா
இது தலையில் உள்ள அசுத்தங்கள் மற்றும் தேவையற்ற தயாரிப்பு பொருட்களை அகற்றுகிறது. தனது ஆல்கலைன் பண்பினால் தலை முடியின் க்யூட்டிக்கிள்களை மூடுகிறது. தலையின் மேல் பாகத்தில் சுரக்கின்ற எண்ணெய் பசையை உறிஞ்சுகிறது. இதனால் தலை முடியை ஈரபதத்துடன் வைத்திருக்கிறது.
* 1 கப் நீரில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேருங்கள்.
* நன்றாக கரைத்து கடைசி முறை அலசும் போது பயன்படுத்துங்கள்.
* பேக்கிங் சோடாவினை ஷாம்புவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

அவகேடோ மற்றும் தேங்காய் பேக்
நமது தொழில் இயல்பாகவே உள்ள எண்ணெய்களின் பண்பினை கொண்டுள்ள எண்ணெயை அவகேடோ தன்வசம் கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள கனிமசத்துக்கள், புரதம், வைட்டமின் ஏ, டி, ஈ, கே மற்றும் பி சேதமடைந்த முடியை சரி செய்கிறது.
* நன்கு பழுத்த அவகேடோ பழத்தினை நன்கு மசித்து கொள்ளுங்கள்.
* இதில் அரை கப் தேங்காய் பால் சேருங்கள்.
* தலைமுடியில் தடவி 15 நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.
* ஷாம்புவை பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் அலசுங்கள்.
* இந்த பயனுள்ள கேச பராமரிப்பு குறிப்புகளை பயன்படுத்தி மென்மையான, மிருதுவான, ஆரோக்கியமான தலை முடியை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications











