Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேரளா புடவைக்கு பொருத்தமாக இருக்கும் சில ஹேர் ஸ்டைல்கள்!!!
புடவைகளிலேயே கேரளா புடவைக்கு தனி அழகு உண்டு. ஏனெனில் கேரளா புடவைகள் சந்தன நிறத்தில், சிம்பிளான பார்டரை கொண்டிருக்கும். எவ்வளவு தான் சிம்பிளாக இருந்தாலும், இதன் அழகு பலரது மனதில் விருப்பமான புடவையாக இருக்கும். இத்தகைய புடவைக்கு பியூட்டி பார்லர் சென்று ஹேர் ஸ்டைல் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்பதில்லை. சாதாரணமாக வீட்டில் மேற்கொள்ளும் ஹேர் ஸ்டைல்களையே மேற்கொண்டால், சூப்பராக இருக்கும்.
பெரும்பாலும் தென்னிந்தியாவில் புடவை அணிந்தால், கொண்டை அல்லது பின்னல் போன்றவற்றை போட்டு, கூந்தலைச் சுற்றி மல்லிகைப் பூவை வைத்துக் கொள்வார்கள். இந்த மாதிரியான ஸ்டைலைக் கூட, கேரளா புடவைக்கு போட்டாலும் அழகாக இருக்கும். இதுப் போன்று வேறு சில ஹேர் ஸ்டைல்களும் உள்ளன.
சரி, இப்போது கேரளா புடவைக்கு பொருத்தமாக இருக்கும் சில ஹேர் ஸ்டைல்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றில் பிடித்ததை போட்டு கலக்குங்கள்...

சைடு கொண்டை
சோனம் கபூர் கேரளா புடவைக்கு பொருத்தமாக சைடு கொண்டையை போட்டு, அதனைச் சுற்றி மல்லிகைப் பூவை சுற்றிக் கொள்ளலாம்.

நேர் உச்சி போனி
இந்த மலையாள நடிகை போட்டிருப்பது போல், நேர் உச்சி எடுத்து, பக்கவாட்டில் முடியை எடுத்து கிளிப் போட்டுக் கொள்ளலாம்.

ப்ரீ ஹேர்
கூந்தல் நீளமாக மற்றும் நேராக இருந்தால், அப்போது அமலா பால் போட்டிருப்பது போல், ப்ரீ ஹேர் விட்டு முன்பக்கம் போட்டுக் கொண்டால், கவர்ச்சியாக இருக்கும்.

க்யூட் கொண்டை
கேரளா குட்டியான அசின் போட்டிருப்பது போல், பக்கவாட்டில் உச்சி எடுத்து, சைடு கொண்டை போட்டு, பூவை சுற்றிக் கொள்ளலாம்.

இறுக்கமான பின்னல்
ப்ரீ ஹேர் பிடிக்காதவர்கள், நேர் உச்சி எடுத்து பின்னல் போட்டு, தலை நிறைய பூவை வைத்து கொண்டால், இன்னும் அழகாக இருக்கும்.

சைடு உச்சி போனி
சைடு உச்சி எடுப்பவர்கள், படத்தில் உள்ள குட்டி போட்டிருப்பது போன்று, சைடு உச்சி எடுத்து, பக்கவாட்டில் முடியை எடுத்து, கிளிப் போட்டுக் கொள்ளலாம். இது க்யூட்டான தோற்றத்தைக் கொடுக்கும்.

இறுக்கமான போனி
கேரளா புடவையில் நமீதா உண்மையிலேயே அழகு தான். அதிலும் இந்த படத்தில் இவர் கேரளா புடவைக்கு போட்டிருக்கும் இறுக்கமான அரை போனி போட்டு, அழகாக ஆபரணங்களை அணிந்து, மங்களகரமாக உள்ளார்.

லூசான பின்னல்
நல்ல அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் இருந்தால், கேரளா புடவைக்கு லூசான பின்னலைப் போட்டு, மல்லிகைப் பூவை வைத்துக் கொள்ளலாம்.

லூசான போனி
பெரும்பாலான கேரளா பெண்கள் மேற்கொள்ளும் ஹேர் ஸ்டைல் தான், படத்தில் காட்டப்பட்டிருப்பது. அதாவது இந்த ஹேர் ஸ்டைல் எப்படியென்றால், இரண்டு பக்கவாட்டிலும் சிறிது முடியை எடுத்து, தலைக்கு நடுவே கொண்டு வந்து, ஒரு கிளிப் போட்டு, ப்ரீ ஹேர் விட்டு, முடியின் கீழிருந்து சற்று மேலே ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.
இதுல உங்களுக்கு எந்த ஹேர் ஸ்டைல் பிடிச்சுருக்கு?



Click it and Unblock the Notifications