Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...
நிறைய மக்கள் சைவ உணவுகளால் கூந்தல் வலுவிழக்கிறது என்று நினைக்கின்றன. உண்மையில் சைவ உணவுகளால் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் எப்படியோ அந்த சைவ உணவுகளால் இதயம் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடல் எடை குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் ஒரு சில சைவ உணவுகளாலும் கூந்தல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
சைவ உணவுகள் சிலவற்றால் கூந்தல் நன்கு வலுவடைவந்து, கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் மாசடைந்து சுற்றுசூழல் காரணமாக கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏன், அந்த பிரச்சனைகளால் வலுக்கைத் தலை கூட வருகிறது. சொல்லப்போனால் கூந்தலை வைத்தே உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லலாம். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையுமின்றி இருக்கும். இல்லையெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும்.
இவையெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும். ஆனால் தற்போது அத்தகைய சத்துக்கள் அனைத்தும், சைவ உணவுகளில் உள்ளன. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களான ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலே, கூந்தலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அந்த சத்துக்கள் எந்த உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன என்பதைப் பார்ப்போமா!!!

சோயா பீன்ஸ்
கூந்தல் பொதுவாக கெராட்டீன் என்னும் புரோட்டீனால் தான் உருவானது. அதனால் தான் கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏனெனில் அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பழுதடைந்த முடியை சரிசெய்கிறது.

பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது. மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் கூந்தலின் வேர்கள் நன்கு வலுவடையும் மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது.

ப்ரௌன் அரிசி
இந்த வகையான அரிசியில் காப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ள இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை காய்கறிகளான பசலைக் கீரை, கடுகு கீரை போன்றவற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் அதில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஏனெனில் வைட்டமின் சி கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜென் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள்.

சீஸ்
வலுவிழந்து இருக்கும் முடியை சரிசெய்வதற்குத் தேவையான புரோட்டீன் சீஸில் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.

ஓட்ஸ்
ஓட்ஸில் இருக்கும் இரும்பு சத்தை உடலானது எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். மேலும் இதில் எளிதில் கிடைக்காத பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கொண்டைக்கடலை
பருப்பு வகைகளில் ஒன்றான கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது. அதிலும் இதில் உள்ள கனிமச்சத்துக்கள் பொடுகு வராமல் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications