Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூரியனிடமிருந்து கூந்தலை எப்படி பாதுகாக்கலாம்?

கூந்தலைப் பாதுகாக்க சில வழிகள்....
கற்றாழை : இதில் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் தன்மைகள் அதிகம் இருக்கிறது. இது ஒரு சதைப்பற்றுள்ள செடி. இதில் வழுவழுப்பான ஒரு திரவம், ஜெல்லி போல் இருக்கும். இந்த திரவத்தை சரும பராமரிப்பில் அதிகம் பயன்படும். ஏனெனில் இதில் ஈரப்பசை அதிகமாக இருக்கும்.
அந்த ஜெல்லியை தலைக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்தால் சூரியனிடமிருந்து வரும் கொடிய அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து கூந்தல் பாதிப்படையாமல் காக்கும்.
டீ இலைச் சாறு : இது ஒரு சிறந்த விலைமதிப்புபில்லாத, ஈஸியாக கிடைக்கக்கூடிய, பாதுகாப்பான இயற்கைப் பொருள். இது கூந்தலை சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் (UV rays) இருந்து கூந்தலைப் பாதுகாக்கிறது. மேலும் இது கூந்தலை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது.
சிறிது டீத்தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து, ஒரு கப்பில் வடிகட்டி தலையில் ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இதனால் முடியானது சூரியனிடமிருந்து வரும் கதிரால் பாதிப்படையாமல் இருப்பதோடு, கூந்தலுக்கு நிறத்தையும் தருகிறது.
ஹென்னா : ஹென்னா பவுடரை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து இரவில் ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்து அதனை கூந்தலுக்கு தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளித்து பார்த்தால் கூந்தலானது சற்று கனமாக இருக்கும். இது கூந்தலுக்கு நிறத்தை மட்டும் தந்து, சூரியக் கதிரில் இருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல், கூந்தல் உதிர்வதையும் தடுக்கிறது.
எள் எண்ணெய் : 5-6 துளி எள் எண்ணெயை சீப்பில் தடவி, பின் அற்த சீப்பை வைத்து கூந்தலை சீவுங்கள். இதனால் சூரியக் கதிர்கள் கூந்தலை தாக்காமல் இருப்பதோடு, கூந்தலும் மென்மையாகவும் பட்டுப்போலும் இருக்கும். வேண்டுமென்றால் வேறு எந்த எண்ணெயை வேண்டுமானாலும் இவ்வாறு உபயோகிக்கலாம்.
வைட்டமின் ஈ : முடியில் வைட்டமின் ஈ இருந்தால் கூந்தலானது ஆரோக்கியமாக, பலமாக இருக்கும். 2-3 வைட்டமின் ஈ மாத்திரைகளை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை நன்கு கரைத்து, பின் கூந்தலில் தெளிக்க வேண்டும். இதனால் அந்த வைட்டமின் கூந்தலுக்கு ஒரு திரை போல அமைத்து, சூரியனிடமிருந்து பாதுகாக்கிறது.
இவ்வாறெல்லாம் செய்து கூந்தலை பராமரித்தால், கூந்தலானது ஆரோக்கியமாக, உதிராமல் அழகாக இருக்கும்.



Click it and Unblock the Notifications