Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எந்த முகத்திற்கு எந்த சடை அழகு

முட்டை வடிவ முகம்
முட்டை வடிவமான முகம் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தலை குட்டையாக வெட்டினால் அழகான, அமைப்பான முக அழகு கிடைக்காது. ஓரளவு நீளமாக, அலையடிப்பது போன்ற ஸ்டெப்களுடன் கூடியவால்யூம் லேயர்ஸ்' கட்டிங் செய்யவேண்டும்.
இந்த வகை ஹேர் கட் உங்கள் முகத்தின் இருபுறமும் கத்தையாக விழுந்து, ஒடுங்கிய முகத்தை அகலமாக, அழகாக தோன்றச் செய்யும். இந்த கூந்தல் அலங்கார முறையை சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மங்கையர் விரும்புகின்றனர். ஓவல் முக அமைப்பு கொண்டவர்களுக்காக 25 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் முறைகள் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது.
நீளமான முகம்
நீளமான முகத்தைக் கொண்டவர்கள் குட்டையாக முடி வெட்டலாம். நீளமாக முடி இருந்தால் அதை சுருட்டி அலை அலையாய் சின்னதாக்கலாம். இதனால் முகம் சின்னதாக தெரியும்.
இதயவடிவ முகம்
இதய வடிவ முகம் அரிதாக இருக்கும். இவர்கள் சைடில் கட் செய்து விடலாம். லேயர் லேயராக கட் செய்தால் முகத்திற்கு அம்சமாக இருக்கும். முகமும் வடிவமாய் இருக்கும்.
சதுர வடிவ முகம்
சதுர முகமும் நீள கூந்தலும் கொண்டவர்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ப ப்ளாட் கட்டிங் செய்து கொள்ளலாம். சைடில் கொஞ்சம் வெட்டி விட்டால் அம்சமாக இருக்கும். முக வடிவம் சற்று மாறுதலாகும்.
உருண்டை முகம்
பெரும்பாலானவர்களுக்கு உருண்டை வடிவ முகம் இருக்கும். இவர்களுக்கு நீளமாக, ஸ்ட்ரெயிட் கூந்தல் அலங்காரம் அழகாய் பொருந்தும். நடு முதுகு வரை வெட்டி கொஞ்சம் சுருட்டி விட்டாலும் பொருத்தம்தான்.
ரிசப்சன், பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும் போது உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப அசத்தலாய் ஹேர் ஸ்டைல் செய்து போங்களேன். அனைவரின் கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.



Click it and Unblock the Notifications