Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சன் சில்க்கின் புதிய கண்டுபிடிப்பான "கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ"
கூந்தலைப் பராமரிக்க பயன்படும் அழகுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் 'சன் சில்க்'. இந்த நிறுவனம் தற்போது, இந்தியாவிலேயே முதன் முறையாக டிஜிட்டல் முறையில் 'கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ' (Keratinology Hair Studio) என்ற ஒன்றை, யூ டியூப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த விளம்பரத்தில் வீட்டில் இருந்த படியே கெராடினாலஜி பொருட்களை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை, படிப்படியாக செய்து காண்பிப்பதோடு, அந்த பொருட்களை பயன்படுத்தியதற்கு முன்னும், பின்னும் நாம் எவ்வாறு இருப்போம் என்பதை, வெப்-கேமராவின் மூலம் காணமுடியும் என்பது தான்.

கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ
'கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ'-வில் மலாய்க்கா அரோரா கானின் ஐகானை முதல் பக்கத்தில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ
இதில் மலாய்க்கா வாடிக்கையாளரிடம் பெயரைக் கேட்டு, அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பார்.

கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ
இதில் வாடிக்கையாளர்கள் எந்த கூந்தல் நிபுணர்களை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களை தேர்ந்தெடுத்தப் பின், அந்த நிபுணர்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களது கூந்தலின் வகை, கூந்தலின் நீளம் போன்ற கேள்விகளை கேட்பார்கள்.

கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ
கேள்விகளுக்கு வாடிக்கையாளர்கள் பதிலளித்தப் பின், அவர்களது பதிலுக்கேற்ப எந்த ஸ்டைலில் கூந்தலை வெட்டுவது, என்ன கலரிங் வேண்டும் போன்ற அவர்களது விருப்பத்தை தேர்ந்தெடுக்குமாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கெராடினாலஜி ஹேர் ஸ்டூடியோ
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்களை வெப்-கேம்மால் முன்னதாகவே புகைப்படத்தை எடுத்துக் கொள்ளும். பின் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கெராடினாலஜி பொருட்களைக் கொண்டு அனைத்து பராமரிப்புகளும் செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை பயன்படுத்தி அழகுபடுத்துவதற்கு முன் இருந்தற்கும், பராமரிப்பிற்குப் பின் இருந்ததற்கும் உள்ள வித்தியாசத்தையும் அழகாக காணும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த கெராடினாலஜி பொருட்களை www.purplle.com என்னும் தளத்தில் வாங்கினால், 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். முக்கியமாக இந்த விளம்பரம் இரண்டு மாதங்கள் வரை தான் இருக்கும். அதிலும் இந்த பொருளுக்கான விளம்பரம் பேஸ்புக் (facebook), யூ டியூப் (youtube), யாஹூ (yahoo) போன்றவற்றிலும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விளம்பரத்திற்கு 482,765 பேர் அதனைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்துள்ளனர்.
ஆகவே கெரோடினாலஜி ஒரு சிறந்த அழகுப் பொருளாக இருப்பதோடு, வருங்காலத்தில் சன் சில்க் நிறுவனம் வேறு என்னவெல்லாம் வெளியிடப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!!



Click it and Unblock the Notifications