Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கார் கூந்தலை ஸ்டைலாக்குங்கள் … அழகு ராணி நீங்கள்தான்!

முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.
முக அழகை மாற்றும்
நீளமுகம் கொண்டவர்கள் ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். அதே சமயம் அகலமான முகம் கொண்டவர்கள் முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும். உருண்டை முகம் கொண்டவர்கள் கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
தாடை நீண்ட ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.
அகலமான நெற்றி அமைந்துள்ளவர்கள் முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம். குட்டை கழுத்து கொண்டவர்கள் குதிரைவால் கொண்டை போடலாம் அம்சமாக பொருத்தும்.
அழகான ஹேர் ஸ்டைல்
நீளமான முடி உள்ளவர்கள் அதிக அளவில் ஹேர் ஸ்டைல் செய்யலாம். பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும். முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான். ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
கொண்டை போடலாம்
நீளக்கழுத்து கொண்டவர்கள் காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது. நடுத்தர அளவில் அளவான கழுத்து கொண்டவர்கள் பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழுத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
நீண்ட கழுத்து அமைந்தவர்கள் கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
முகம் உருண்டையாகும்
உருண்டைமுகமும் அதிக முடியும் கொண்டவர்கள் உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும். அதேசமயம் ஒவல் முகம் அமைந்தவர்கள் காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.
அழகு அள்ளிச் செல்லும்
சதுர முகம் கொண்டவர்கள் தளர விட்டு கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். குள்ளமானவர்கள் சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள். குண்டானவர்கள் கொண்டை போடுவதை விட பின்னல் நல்லது. உயரமானவர்கள் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.
விஷேங்களுக்கு செல்லும் போது எல்லோருமே கொண்டைவலையில் அலங்காரமாக ஜமிக்கி ஒட்டி உங்களை ரிச்சாக காட்டும் . அனைவரின் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும்.



Click it and Unblock the Notifications