Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வழுக்கையிலும் தலைமுடி வளரணுமா? அப்ப வெங்காயத்தை இந்த மாதிரி தொடர்ந்து 7 நாள் யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: தற்போது நிறைய பேர் தலைமுடி உதிர்வால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏனெனில் தலைமுடி உதிர்வானது வழுக்கை தலை ஏற்படுத்துகிறது. தலைமுடி ஒருவருக்கு அதிகம் உதிர்வதை உணர்ந்தால், அதை உடனே தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நிச்சயம் வழுக்கை தலையைப் பெறக்கூடும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பல்வேறு பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. அதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று தான் வெங்காயம். ஆய்வுகளில் கூட வெங்காயத்தின் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவும் போது, அது முடியின் வளர்சசியை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவை மயிர்கால்களுக்கு போதுமான சத்துக்களை வழங்கி, வலுவிழந்த மயிர்கால்களை வலுவாக்குவதோடு, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
வெங்காயமானது வலுவான மணத்தைக் கொண்டது. எனவே நிறைய பேர் வெங்காயத்தைப் பயன்படுத்த யோசிப்பார்கள். ஆனால் தலைமுடி அதிகம் உதிர்வதை உடனே நிறுத்த வேண்டுமானால், அதற்கு வெங்காயம் தான் பெரிதும் உதவி புரியும். கீழே தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. வெங்காய சீரம்
வெங்காய சீரம் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க பெரிதும் உதவி புரிகிறது. அதற்கு நற்பதமான வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
2. வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்
தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா? அப்போது தலைமுடி உதிர்வதை உடனே நிறுத்த வேண்டுமா? அப்படியானால் ஒரு வெங்காயத்தை எடுத்து அரைத்து அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
3. வெங்காய சாறு மற்றும் தேன் மாஸ்க்
தலைமுடி உதிர்வதோடு, வறண்டும் உள்ளதா? அப்படியானால் வெங்காய சாற்றுடன், தேன் சேர்த்து கலந்து, அதை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி ஊக்குவிப்பதோடு, தலைமுடி பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
4. வெங்காய சாற்றினால் அலசவும்
தலைமுடி நன்கு வலிமையாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு முறை தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின்னரும், வெங்காய சாற்றினை நீரில் கலந்து, அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சத்துக்கள் ஸ்கால்ப்பினால் உறிஞ்சப்பட்டு, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
5. வெங்காய சாறு மற்றும் கற்றாழை ஜெல்
வெங்காய சாற்றுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதோடு, பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.



Click it and Unblock the Notifications