Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தலைமுடி கொத்து கொத்தா கையில வருதா? அப்ப வாரம் ஒருமுறை இந்த முட்டை ஹேர் பேக்கை போடுங்க..
Hair Care Tips In Tamil: தற்போது உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக நிறைய பேர் அவதிப்படும் மற்றொரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஒருவரது அழகை வெளிக்காட்டுவதில் தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற உணவுகள், மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக, தலைமுடி வலுவிழந்து அதிகமாக உதிர்கிறது. இப்படி தலைமுடி உதிர்வதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால், பின் தலைமுடி எலிவால் போன்று மெலிந்து போவதோடு வழுக்கை ஏற்பட்டுவிடும்.

தலைமுடியின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த சத்து முட்டையில் அதிகமாக உள்ளது. பழங்காலத்தில் இருந்து தலைமுடியின் வலிமையை அதிகரிக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல தலைமுடி பராமரிப்பு பொருட்களிலும் முட்டை முக்கிய பொருளாக இருப்பதைக் காணலாம்.
முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, தலைமுடி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும். அதே சமயம் தலைமுடியின் வலிமையும், அடர்த்தியும் அதிகரிக்கும். இப்போது அடர்த்தியான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெற உதவும் முட்டை ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. முட்டை தயிர் மாஸ்க்
* ஒரு பௌலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1-2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் சீராக தடவி, ஷவர் கேப்பை தலையில் அணிந்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது குறைந்து, தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
2. முட்டை தேன் மாஸ்க்
* ஒரு பௌலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ற அளவு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடி உடைவதும் குறையும்.
3. முட்டை நெல்லிக்காய் மாஸ்க்
* ஒரு பௌலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
* இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
4. முட்டை பால் மாஸ்க்
* ஒரு பௌலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1-2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை தலையில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது குறைந்து, நன்கு அடர்த்தியாக வளரும்.



Click it and Unblock the Notifications